43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாளான இன்று (24) காலை நடைபெற்ற பெண்களுக்கான சம்மெட்டி எறிதலில் தென் மாகாணத்தைச் சேர்ந்த சானிகா மனோஜி, புதிய போட்டிச் சாதனையையும் புதிய தேசிய சாதனையையும் நிகழ்த்தினார்.    மேல் மாகாணத்தை வீழ்த்திய கிழக்கு மாகாணத்திற்கு வரலாற்று வெற்றி 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது நாளின்.. ஊவா...

கண்டி திரித்துவக் கல்லூரி மற்றும் கல்கிஸ்சை புனித தோமியர் கல்லூரிகளுக்கு இடையிலான 8ஆவது வருடாந்த கால்பந்தாட்டப் போட்டியில், 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் புனித தோமியர் கல்லூரி வெற்றிபெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.திரித்துவக் கல்லூரியின் மைதானமான கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியானது, சற்று தாமதித்த நிலையிலேயே ஆரம்பித்தது. கடந்த வருடம் நடைபெற்ற போட்டி வெற்றி...

ஆண்களுக்கான அஞ்சலோட்டப் போட்டியில் கிழக்கு மாகாண வீரர்களின் வரலாற்று வெற்றியுடன் 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் 2ஆவது நாளுக்கான அனைத்து மெய்வல்லுனர் போட்டிகளும் நிறைவுக்கு வந்தன. நேற்று (23) காலை நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் மற்றும் ஆண்களுக்கான குண்டு எறிதலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மொஹமட் பாஸில் உடையார் மற்றும் மொஹமட் ஆஷிக் ஆகியோர்...

சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட ‘டிவிஷன் – I’ பாடசாலை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் 5 போட்டிகள் இன்று நிறைவடைந்துள்ளன. மஹிந்த கல்லூரி, காலி எதிர் ரோயல் கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தது. மஹிந்த கல்லூரி அணி தமது...

சைனீஸ் தாய்பேய் அணியினருடன் கிடைத்திருக்கும் விறுவிறுப்பு வெற்றியுடன் ஆசிய எழுவர் ரக்பி தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகளில் குழு A இல் மூன்றாம் இடத்தினை அடைந்துகொண்ட இலங்கை அணி, தொடரின் காலிறுதிப் போட்டியில் ஹொங்கொங் அணியுடன் மோதும் வாய்ப்பினை பெற்றுள்ளது. இலங்கை எதிர் சைனீஸ் தாய்ப்பே இலங்கை எழுவர் ரக்பி அணியின் சீனாவுடனான போட்டி சமநிலை அடைந்ததால்...

இலங்கையின் தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக கிழக்கு மாகாண அஞ்சலோட்ட அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனைப் பதிவை மேற்கொண்டுள்ளது. 43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளின் 2ஆவது நாளின் இறுதிப் போட்டியாக இன்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 4X100 அஞ்சலோட்டப் போட்டியில் மொஹமட் அஷ்ரப் லதீப் தலைமையிலான கிழக்கு...

வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரின் B பிரிவிற்கான (B டிவிஷன்) இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற்றன. இப்போட்டிகளில் கொமர்ஷல் கிரெடிட் B மற்றும் மாஸ் சிலுவெட்டா அணிகள் வெற்றியை தமதாக்கிக் கொண்டன.மொபிடல் எதிர் கொமர்ஷல் கிரெடிட் B இவ்விரண்டு அணிகளுக்கிடையிலான போட்டி பனாகொட இராணுவ விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின்...

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 25ஆவது தடவையாகவும் நடைபெறும் பிரிவு-A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான ‘ சிங்கர் கிண்ண’ ‘  மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்றைய நாளில் ஐந்து போட்டிகள் நிறைவடைந்தன. சம்பத் வங்கி எதிர் கென்ரிச் பினான்ஸ் ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும் இந்தப் போட்டியில் கென்ரிச் பினான்ஸ்...

லா லிகா சுற்றுப் போட்டியின் ஜந்தாவது வர நிறைவில் தாம் ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் பார்சிலோனா அணி புள்ளிப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றது. அதேவேளை லா லிகா சுற்றுப் போட்டியின் நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அணி நடைபெற்று முடிந்த ஜந்தாவது வாரப் போட்டியில் அதிர்ச்சித் தோல்வியுற்றதன் மூலம்...

இவ்வருடத்திற்கான பிரிவு II (டிவிசன் - II) பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் குருநாகல் மலியதேவ கல்லூரிக்கு எதிரான போட்டியில் முஸாக்கிர் பெற்ற தொடரான நான்கு கோல்கள் மூலம் புத்தளம் ஸாஹிரா கல்லூரி 4 – 0 என்ற விகிதத்தில் இலகு வெற்றியினைப் பதிவு செய்தது. புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியானது முழுமையாக...