உகண்டா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான 15 பேர்கொண்ட இலங்கை அபிவிருத்தி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை அபிவிருத்தி குழாத்தின் தலைவராக 23 வயதான நிபுன் தனன்ஜய நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் கடைசியாக நடைபெற்ற ஐசிசி 19 வயதின் கீழ் உலகக்கிண்ணத்தில் விளையாடிய தினுர கலுபான, மல்ஷ தருபதி மற்றும் கருக சங்கெத் ஆகியோரும் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
>> T20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்த இலங்கை மகளிர் அணி
இவர்களுடன் மொஹமட் சமாஸ், கிரிஷான் சஞ்சுல, சந்துன் வீரகொடி மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகிய வீரர்களுிம் இணைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரின் போட்டிகள் எதிர்வரும், 28, 30 மற்றும் மே 3 ம் திகதிகளில் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அபிவிருத்தி குழாம்
நிபுன் தனன்ஜய (தலைவர்), கிரிஷான் சஞ்சுல, ஹசித பொயாகொட, சந்துன் வீரகொடி, மொஹமட் சமாஸ், ரவிந்து பெர்னாண்டோ, ரனேஷ் சில்வா, டில்ஷான் அரம்பேபொல, தினுர கலுபான, மல்ஷ தருபதி, தரிந்து ரத்நாயக்க, இசித விஜேசுந்தர, தனால் ஹேமனாந்த, கருக சங்கெத், ஷிரான் பெர்னாண்டோ
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<