ஐக்கிய அமெரிக்கா மற்றும் மே.தீவுகளில் நடைபெறவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ணத்துக்கான 15 பேர்கொண்ட நியூசிலாந்து குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இந்த தொடருக்கான குழாத்தை அறிவிக்கும் முதல் அணியாக நியூசிலாந்து மாறியுள்ளது.
>>நுவனிந்து, சஹனின் அதிரடியுடன் இலங்கை A அணிக்கு முதல் வெற்றி<<
அறிவிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து குழாத்தின் தலைவராக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அனுப வீரர்களான ட்ரெண்ட் போல்ட் மற்றும் டிம் சௌதி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் T20I குழாத்தில் இணைக்கப்பட்டு, சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்திவரும் மெட் ஹென்ரியும் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளார். எடம் மில்ன் தொடரந்தும் உபாதைக்கு முகங்கொடுத்து வரும் நிலையில், மெட் ஹென்ரி இலகுவாக அணியில் இடத்தை பிடித்துள்ளார்.
அதேநேரம் உபாதையிலிருந்து குணமடைந்து வரும் டெவோன் கொன்வே அணியில் இடத்தை பிடித்துள்ளதுடன், பின் எலன், மைக்கல் பிரேஸ்வல், மார்க் செப்மன், டெரைல் மிச்சல், ஜிம்மி நீஷம், கிளேன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்ரா, மிச்சல் சென்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோரும் அணியில் இடத்தை தக்கவைத்துள்ளனர்.
இதேவேளை மேலதிக வீரராக பென் சீர்ஸ் அணியில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 8ம் திகதி ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
நியூசிலாந்து குழாம்
கேன் வில்லியம்சன் (தலைவர்), பின் எலன், ட்ரெண்ட் போல்ட், மைக்கல் பிரேஸ்வல், மார்க் செப்மன், டெவோன் கொன்வே, லொக்கி பேர்கஸன், மெட் ஹென்ரி, டெரைல் மிச்சல், ஜிம்மி நீஷம், கிளேன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்ரா, மிச்சல் சென்ட்னர், இஷ் சோதி, டிம் சௌதி (பென் சீர்ஸ் – மேலதிக வீரர்)
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<