ThePapare.com நிறைவுக்கு வந்திருக்கும் 2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட் குறித்து என்பது தொடர்பில் இந்த கட்டுரையின் ஊடாக பார்க்கவிருக்கின்றது.
தரவரிசையில் சூர்யகுமார் யாதவை நெருங்கிய இங்கிலாந்து வீரர்
இந்த கட்டுரையில் முதலில் 2023ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணிக்கு எவ்வாறு அமைந்தது என்பது தொடர்பில் பார்ப்போம். இலங்கை கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டில் மொத்தமாக 44 சர்வதேச போட்டிகளில் ஆடியிருப்பதோடு அதில் 19 வெற்றிகளையும், 24 தோல்விகளையும் சந்தித்திருக்க 1 போட்டி சமநிலை முடிவினை பெற்றிருக்கின்றது. 2023ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி வீதம் 44.31 ஆகும்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றி வீதம் கடந்த 2022ஆம் ஆண்டில் 47% ஆக அமைந்திருந்தது. இந்த நிலையில் 2023ஆம் ஆண்டிலும் அதே வகையான ஒரு இலக்கத்தினை இலங்கை பேணியிருப்பது திருப்தி தருகின்றது. ஏனெனில் இதற்கு முன்னரான ஆண்டுகளில் இலங்கை அணியின் தரவுகள் மிக மோசமாக அமைந்திருந்தன.
இலங்கை அணி 2023ஆம் ஆண்டில் மொத்தமாக 6 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதோடு அதில் 2 வெற்றிகளையும், 4 தோல்விகளையும் சந்தித்திருந்தது. இலங்கை அணிக்காக இந்த ஆண்டில் அதிக டெஸ்ட் ஓட்டங்கள் பெற்ற வீரராக திமுத் கருணாரட்ன மாறியிருந்தார். திமுத் கருணாரட்ன 60.80 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 608 ஓட்டங்களை குவித்திருந்தார். அத்துடன் திமுத் கருணாரட்ன 2 சதங்கள் மற்றும் 3 அரைச்சதங்களை 2023ஆம் ஆண்டில் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்காக 2023ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக 29 விக்கெட்டுக்களுடன் பிரபாத் ஜயசூரிய மாறினார். இன்னும் பிரபாத் ஜயசூரிய 2023ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களில் முதல் 10 இடங்களில் ஒருவராகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை இலங்கை 2023ஆம் ஆண்டில் 31 போட்டிகளில் ஆடி அதில் 16 வெற்றிகளை பதிவு செய்தது. இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 2023ஆம் ஆண்டு அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக ஆரம்பத் துடுப்பாட்டவீரரான பெதும் நிஸ்ஸங்க மாறியிருந்தார். பெதும் நிஸ்ஸங்க 29 ஒருநாள் போட்டிகளில் ஆடி 44.26 என்னும் சராசரியுடன் 1151 ஓட்டங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்துடன் நிஸ்ஸங்க 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற ஐந்தாவது வீரராகவும் மாறியிருந்தார். பந்துவீச்சினைப் பொறுத்தவரை மகீஷ் தீக்ஷன 24 ஒருநாள் போட்டிகளில் 37 விக்கெட்டுக்களை சாய்த்து 2023ஆம் ஆண்டில் அதிக விக்கெட்டுக்களைச் சாய்த்த இலங்கை வீரரானர்.
T20I போட்டிகளைப் பொறுத்தவரை 2023ஆம் ஆண்டில் 7 T20I போட்டிகளில் ஆடிய இலங்கை அணி ஒரு வெற்றியினை மாத்திரம் அதில் பதிவு செய்தது. குறித்த வெற்றி இந்தியாவிற்கு எதிராக பெறப்பட்டதாகும். இந்த ஆண்டு T20I போட்டிகளில் இலங்கைக்காக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக குசல் மெண்டிஸ் (211) உம், அதிக விக்கெட்டுக்களை பெற்ற வீரராக டில்சான் மதுசங்கவும் (6) மாறினர்.
கண்பார்வைச் சிக்கலுக்கு முகம் கொடுத்த சகீப் அல் ஹசன்
சர்வதேச கிரிக்கெட்
2023ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் முக்கிய விடயமாக ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர் மாறியது. இந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதோடு, ஆறாவது தடவையாக ஒருநாள் உலகக் கிண்ண சம்பியன்களாக மாறி சாதனை செய்திருந்தது. ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக இந்திய அணியின் துடுப்பாட்ட ஜாம்பவான் விராட் கோலி மாறியிருந்தார். விராட் கோலி ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் 11 போட்டிகளில் ஆடி 95.62 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 765 ஓட்டங்கள் பெற்றிருந்தார். உலகக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட்டுக்களை இந்திய அணியின் மொஹமட் சமி கைப்பற்றியிருந்தார். மொஹமட் சமி மொத்தமாக 24 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.
இதேநேரம் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரினை இந்தியா கைப்பற்றியது. அதேநேரம் 2023ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாகவும் உலகக் கிண்ணத்தினை கைப்பற்றியிருந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி மாறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
2023ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக உஸ்மான் கவாஜா (1210*) காணப்படுவதோடு, அதிக டெஸ்ட் விக்கெட்டுக்களுடன் அவுஸ்திரேலியாவின் சுழல் நாயகனான நதன் லயன் (47*) காணப்படுகின்றார்.
ஒருநாள் போட்டிகளை நோக்கும் போது 2023ஆம் ஆண்டில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக இந்திய அணியின் சுப்மான் கில் (1584) உம் அதிக விக்கெட்டுக்களுடன் குல்தீப் யாதவ்வும் (49) காணப்படுகின்றனர்.
T20I போட்டிகளில் 2023ஆம் ஆண்டு அதிக ஓட்டங்கள் எடுத்த வீரராக ஐக்கிய அரபு இராச்சியத்தின் மொஹமட் வஸீமும் (806), அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக உகண்டாவின் அல்பேஷ் ராஜமணியும் (55) உள்ளனர்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<