தேசிய கெரம் சம்பியனாக மகுடம் சூடிய சஹீட் ஹில்மி

19th Asian Junior Athletic Championship 2024

74
19th Asian Junior Athletic Championship 2024

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 54ஆவது தேசிய கெரம் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் சஹீட் ஹில்மியும், பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நுவன்திகா சன்ஜீவனியும் சம்பியன்களாக தெரிவாகினர்.

இலங்கை கெரம் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட 54ஆவது சம்மேளனக் கிண்ண கெரம் சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிக் கட்டப் போட்டிகள் கொ{ஹவலையில் அமைந்துள்ள இலங்கை கெரம் சம்மேளன தலைமையகத்தில் கடந்த கடந்த மாதம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சஹீட் ஹில்மி சம்பியனாகத் தெரிவாக, பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் நுவன்திகா சன்ஜீவனியும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.

இதில் ஆண்கள் பிரிவில் அனாஸ் அஹமட்டும், பெண்கள் பிரிவில் ரக்ஷிகா ரசான்ஜலியும் 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இதேநேரம், இம்முறை தேசிய கெரம் சம்பியன்ஷிப் தொடரில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் ஷெரிப் ஷான், சுராஜ் மதுவன்த ஜோடியும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் தஸ்மிலா காவிந்தி, நிபுனி தில்ருக்ஷி ஜோடியும் சம்பியன்களாகத் தெரிவாகினர்.

இதேவேளை, கலப்பு பிரிவுக்காக நடைபெற்ற போட்டியில் அவோன் விக்ரமசிங்க, தஸ்மிலா காவிந்தி ஜோடி சம்பியன் பட்டத்தை வென்று அசத்தினர்.

>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<