சிறையில் இருந்து விடுதலை பெற்ற ரொனால்டினோ வீட்டுக்காவலில்

94

பிரேசில் மற்றும் பார்சிலோனா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு பரகுவேயில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

போலிக் கடவுச் சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே 2005 ஆம் ஆண்டில் சிறந்த கால்பந்து வீரருக்கான பல்லோன் டிஓர் விருதை வென்ற ரொனால்டினோ தனது சகோதரருடன் கடந்த மார்ச் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.   

ரொனால்டினோவை விடுவிக்க நிதியுதவி: மெஸ்ஸி மறுப்பு

பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோவை …

இந்த இருவரும், முன்னர் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தற்போது தலா 800,000 டொலர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு வரும் வரை இருவரும் அசுன்சியோனில் இருக்கும் நான்கு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.  

40 வயதான ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் ரொபர்டோ அசிஸ் தாம் தவறிழைக்கவில்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இவர்கள் சிறைவைக்கப்பட்டதுநியாயமற்றது, தவறானது மற்றும் சட்டவிரோதமானதுஎன்று இவர்களின் விழக்கறிஞர் கூறியுள்ளார்

இருவரையும் சிறையில் இருந்து விடுதலை பெற அனுமதித்த நீதிபதி குஸ்டாவோ அமரில்லா, இவர்கள் தப்பிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு செலுத்தப்பட்டிருக்கும் பிணைத் தொகையின் அளவு குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதாக குறிப்பிட்டார்.  

நலிந்த குழந்தைகளுக்கான பிரசாரம் மற்றும் புத்தகம் ஒன்றை ஆதரிக்கும் பிரசாரத்திற்காகவே ரொனால்டினோ பரகுவே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டார். எனினும் அவர் நாட்டுக்குள் போலிக் கடவுச்சீட்டுடன் நுழைந்ததாகவே குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

கால்பந்து உலகை வெல்ல உயிருக்காக போராடும் நெதர்லாந்து நட்சத்திரம்

வளர்ந்து வரும் இளம் கால்பந்து வீரர் தொடக்கம் உயிருக்காக போராடும் கோமா நிலைக்குச்…

தமக்கு இந்த ஆவணத்தை பிரேசில் தொழிலதிபர் வில்மொண்டஸ் சவுசா லிரியா வழங்கியதாக ரொனால்டினோ வாக்குமூலம் அளித்ததை அடுத்து அந்த தொழிலதிபரும் கைது செய்யப்பட்டுள்ளார்

அவருக்கு பிணை வழங்கிய நீதிபதி அதன்போது கூறியதாவது, “ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் தற்போது இந்த விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் இவர்களை வீட்டுக்காவலில் வைக்க நான் தீர்மானித்தேன்என்றார்.  

சுற்றுச்சூழல் குற்றச்செயல் தொடர்பான விசாரணைக்காக ரொனால்டினோவின் பிரேசில் நாட்டுக் கடவுச் சீட்டு பறிமுதல் செய்யப்பட்டபோதும் அந்த ஆவணம் கடந்த செப்டெம்பரில் அவரிடம் மீண்டும் வழங்கப்பட்டது.  

ஒரு மாதத்தின் பின் அவர் இஸ்ரேலில் நட்புறவுப் போட்டி ஒன்றிலும் விளையாடினார். எனினும் சட்டச் சிக்கல்கள் காரணமாக ரொனால்டினோவின் ஸ்பெயின் கடவுச் சீட்டும் கடந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து

பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ பரகுவே சிறையில் …

இந்நிலையில் அவர் தற்போது குற்றங்காணப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பதினான்கு பேர் இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.   

பரகுவேயின் கடுங்காவல் சிறையில் 32 நாட்கள் இருந்த ரொனால்டினோ தாம் சிறையில் இருந்த காலத்தில் கைதிகளின் கால்பந்து போட்டிகளில் ஆடுவது மற்றும் பயிற்சிகள் பெறுவது என்று வேலைப்பளுவுடன் காலத்தை செலவிட்டார். அவர் தனது 40 ஆவது பிறந்த நாளையும் சிறைக்குள் எளிமையாகக் கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது

2002 உலகக் கிண்ணத்தை வென்ற ரொனால்டினோ, பார்சிலோனா, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் .சி. மிலான் உள்ளிட்ட கழகங்களுக்காக ஆடியுள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டு கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டில் பிஃபாவின் உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதுகளையும் வென்றுள்ளார்.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<