IPL கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்

Indian Premier League 2022

149
BCCI

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 8ஆவது வீரர் எனும் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார்.

அத்துடன் ஹர்பஜன் சிங்கிற்குப் பிறகு 150 விக்கெட் மைல்கல்லை எட்டிய இரண்டாவது off-spin சுழல்பந்து வீச்சாளராகவும் அவர் இடம்பிடித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 39ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியை வீழ்த்தியது.

புனேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடியய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 19.3 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அந்த அணி 29 ஓட்டங்களினால் தோற்றது.

ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் குல்தீப்சென் 4 விக்கெட்டுகளையும், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

இதனிடையே, குறித்த போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் .அஸ்வின் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட் மைல்கல்லை எட்டி சாதனை படைத்தார்.

ஐபிஎல் தொடரில் 150 விக்கெட் எடுத்த 8ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்ட அவர், 2ஆவது off-spin சுழல்பந்து வீச்சாளராகவும் இடம்பிடித்தார். அத்துடன், ஐபிஎல் இல் 150 விக்கெட் மைல்கல்லை எட்டிய 6ஆவது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் இடம்பிடித்தார்.

இந்த போட்டிக்கு முன்பு அவர் 149 விக்கெட்டுகளுடன் இருந்தார். தற்போது அஸ்வின் 175 போட்டிகளில் விளையாடி 152 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபில் தொடரில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ 181 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் காணப்பட, லசித் மாலிங்க (170 விக்கெட்) மற்றும் .அமித் மிஸ்ரா (166 விக்கெட்) ஆகிய இருவரும் 2ஆவது, 3ஆவது இடங்களில் உள்ளனர்.

இந்த நிலையில், அனைத்து விதமான T20 கிரிக்கெட்டில் 271 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையையும் அஸ்வின் பெற்றார். இந்தப் பட்டியலில் பியூஸ் சாவ்லா 270 விக்கெட்டுகளுடன் 2ஆவது இடத்திலும், யுஸ்வேந்திர சஹால் 265 விக்கெட்டுகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<