கால்பந்து உலகை வெல்ல உயிருக்காக போராடும் நெதர்லாந்து நட்சத்திரம்

116
Abdelhak Nouri
Abdelhak Nouri

வளர்ந்து வரும் இளம் கால்பந்து வீரர் தொடக்கம் உயிருக்காக போராடும் கோமா நிலைக்குச் சென்றது வரை அப்தல்ஹக் நூரியின் வாழ்வு உண்மையிலேயே கவலைக்குரியது.   

அது 2017 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் திகதியாகும். ஐரோப்பா எங்கும் எதிர்வரும் கால்பந்து பருவத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தது. வழக்கம்போல்  நட்புறவுப் போட்டிகளை நடத்துவதற்கு இந்தக் காலம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி அஜக்ஸ் கால்பந்து கழகம் மற்றும் வெர்டர் பிரெமன் அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற்றது. அதன் 72 ஆவது நிமிடத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அஜக்ஸ் அணியின் இளம் வீரர் அப்தல்ஹக் நூரி மைதானத்தில் வீழ்ந்தார்.    

கழிப்பறை சுத்தம் செய்யும் நட்சத்திர வீரர்: சாடியோ மானேயின் மறுபக்கம்

கால்பந்து மைதானத்தில் சாடியோ மானேவின் திறமை எல்லோருக்கும் தெரிந்ததே…

ஐரோப்பாவில் வளர்ந்து வரும் கால்பந்து வீரர்களில் நூரிக்கும் முக்கிய இடம் இருந்தது. மிக இளம் வயது தொடக்கம் அவர் வெளிப்படுத்திய அபார திறமை இதற்குக் காரணமாகும். அவர் அப்போது நெதர்லாந்து இளையோர் தேசிய அணிக்காக தமது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.  

எதிர்காலத்தில் அவர் கால்பந்து உலகில் சிறந்த வீரர்களில் ஒருவராக வருவார் என்று பலரும் எதிர்வுகூறி இருந்தார்கள. எவ்வாறாயினும் இந்த நிகழ்வால் அவரது கால்பந்து வாழ்வு அத்தோடு முடிந்தது மாத்திரமல்ல, அவருக்கு தனது உயிருக்காக கடுமையாகப் போராட வேண்டியும் ஏற்பட்டது

அஜக்ஸ் என்பது நெதர்லாந்தின் பலம் மிக்க கால்பந்து கழகங்களில் ஒன்று. ஜெர்மனியின் வெர்டர் பிரெமன் அணிக்கு எதிரான அந்த நட்புறவுப் போட்டி இடம்பெற்றது பெல்ஜியம் வோடர்மால் பொவூர்ட் பகுதியில் இருக்கும் ட்ரீ லின்டன்ஸ் அரங்கிலாகும். வழக்கம் போல் இரு அணிகளும் சிறப்பாக ஆடிவந்தன. அதன் முதல் பாதி முடியும்போது அஜக்ஸ் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது

அவர்கள் இரண்டாவது பாதியில் ஹகிம் சியெச்சிற்கு பதில் அப்போது 19 வயதாக இருந்த இளம் வீரர் அப்தல்ஹக் நூரியை களமிறக்கினர். அந்த நேரத்தில் திறமையின் உச்சத்தில் இருந்த அவர் இந்தப் போட்டியிலும் தமது வழக்கமான திறமையை வெளிப்படுத்தியபோதும் எதிரணியினர் இரண்டு கோல்களை பெற்றனர்

பரபரப்பாக நடைபெற்று வந்த இந்தப் போட்டியின் 72 ஆவது நிமிடத்தில் இடம்பெற்ற நிகழ்வு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் நூரி மெல்ல மெல்ல மைதானத்தை நோக்கி விழ ஆரம்பித்தார். அந்தத் தருணம் அவரது முழு வாழ்வையும் மாற்றும் என அப்போது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.    

சிறிது நேரத்தில் அதனைப் பார்த்த போட்டி நடுவர் போட்டியை நிறுத்தி விரைவாக நூரியை நோக்கி வந்த பின்னர் மருத்துவர் குழுவை மைதானத்திற்கு அழைத்தார். இரு அணிகளினதும் வீரர்கள் நூரியை சுற்றி வட்டமிட்டிருந்தார்கள். மூன்று நிமிடம் வரை அவருக்கு முதலுதவி வழங்கப்பட்ட பின் இது சாதாரண நிலைமை இல்லை என்பது மருத்துவர்களுக்கு புரிந்தது.  

அதன்படி அவருக்கு cardiac arrest, அப்படி இல்லையென்றால் cardiac arrhythmia attack நிலைமை ஏற்பட்டிருப்பது மருத்துவக் குழுவுக்குத் தெரிந்தது. இது ஒருவரது இதயத் துடிப்பு செயலிழப்பதன் மூலம் இதயத்தின் செயற்பாடு நிற்பதனால் ஏற்படுகின்ற நிலைமையாகும். அதன்படி அந்தப் பகுதியின் மருத்துவர்கள் பலரினது ஆதரவுடன் defibrillator  உதவியோடு மீண்டும் அவர் சாதாரணமாக மூச்சுவிட முடியுமான நிலை ஏற்படுத்தப்பட்டது. இதன் பின் அவர் ஹொலிகொப்டரில் உடன் இன்ஸ்பிரக் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

கோமா நிலைக்குச் சென்ற அவரின் மூளை மற்றும் இதயப் பகுதியில் மேற்கொண்ட மருத்துவ சோதனையில் குறிப்பிடும்படியாக சிக்கல்கள் இருக்காத போதும் ஒரு சில நாட்கள் செல்லும்போது நிலைமை மோசமடைய ஆரம்பித்தது. அதன்படி அவரது மூளையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. இதனால் அவர் எதிர்காலத்தில் சாதாரண நிலைமைக்கு மாறுவதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவு என்றும், மீண்டும் ஒருபோதும் கால்பந்து ஆட முடியாது என்றும் தெரியவந்தது

நூரிக்கு ஆதரவாக அவரது வீட்டுக்கு முன்னால் திரண்ட ரசிகர்கள்

அவர் தொடர்ந்து கோமா நிலையில் இருந்ததோடு அந்த நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகளும் தொடர்ந்து இடம்பெற்றன. அந்த விசாரணைகளில், நூரி மைதானத்தில் விழுந்த சந்தர்ப்பத்தில் மருத்துவக் குழு அவருக்கு வழங்கிய சிகிச்சை போதுமானதாக இல்லை என்பது தெரியவந்தது. அது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அஜக்ஸ் கால்பந்து கழக நிறைவேற்று பணிப்பாளர் எட்வின் வான் டெர் சர் கூறியதாவது

நூரி மைதானத்தில் விழுந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை போதுமாக இருக்கவில்லை என்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற புதிய வாக்குமூலங்கள் மூலம் தெரியவருகிறது. குறித்த மருத்துவக் குழு இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டத்தை கொண்டுவருவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் குறைவாகும். அதேபோன்று defibrillator  இனை முன்னதாகவே பயன்படுத்தி இருக்க வேண்டும். இந்த விடயங்கள் சரியாக மேற்கொள்ளப்பட்டிருந்தால் நூரி இதனை விடவும் நல்ல நிலைமையில் இந்த நெருக்கடியில் இருந்து மீண்டிருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். அது நிச்சமில்லை என்றபோதும் வாய்ப்பு ஒன்று இருந்தது. என்றாலும் அந்த வாய்ப்பை கைவிட நாம் தயாரில்லை. அதனால் இந்த நிகழ்வுடன் தொடர்புடைய முழுமையான பொறுப்பு மற்றும் விளைவை நாம் ஏற்கிறோம் என்றார்.   

கொரோனாவுக்கு பிந்திய ஐரோப்பிய கால்பந்து

உலகெங்கும் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுகளும் தடைப்பட்டுள்ளன…

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பினால் (UEFA) வெளியிடப்பட்ட பரிந்துரைகளுக்கு அமையவும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் cardiac arrest நிலைமை ஒன்றை முதலில் மருத்துவர்கள் மூலம் ஊகித்து அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டி இருந்தபோதும் இங்கு மருத்துவர்கள் அதற்கு அப்பால் செயற்பட்டுள்ளனர். அதன்படி அதன்போது அஜக்ஸ் அணியின் தலைமை மருத்துவராக செயற்பட்ட டொன் டி வின்டர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்

மேலும் அந்தப் போட்டிக்கு  முன்னர் வயிற்றுப் பகுதியில் வலி இருப்பது பற்றி நூரி கூறி இருப்பதோடு அதற்கு முந்தைய தினத்தில் கூட அவருக்கு உறங்குவதற்கு முடியாமல் இருந்துள்ளது. அன்றைய தினம் காலநிலை மிகவும் உஷ்னமாக இருந்திருப்பதோடு இப்படியான சூழலிலேயே நூரி அந்தப் போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளார்

நூரிக்காக பிரார்த்தனை

மேலும், 2014 ஏப்ரல் மாத்தில் அஜக்ஸ் மருத்துவர்கள் மூலம் வீரர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பல சோதனைகளில் அவரது இதயத்தில் சிறிய சிக்கல் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டபோதும் அது ஆபத்தான நிலை இல்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இந்த நிலைமை தொடர்பில் அவரது பெற்றோர்களை அறிவூட்டுவதற்கு அந்தக் கழகத்தின் மூலம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதும், அது அந்த விபத்துக்குப் பின் அவரது மருத்துவ சோதனைகள் தொடர்புடைய ஆவணங்களை சோதித்தபோதே அவர்கள் அது பற்றி தெரிந்திருப்பது பின்னர் வெளிச்சத்திற்கு வந்தது.     

இதன்படி, அவரது சிகிச்சைக்காக ஏற்படுகின்ற தொகை கால்பந்து கழகம் ஏற்க வேண்டியது தொடர்பிலான இழப்பீடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை சற்று சிரமமாகி இருப்பதோடு நூரியின் குடும்பத்தினர் சார்பில் வாதாடும் சட்டத்தரணி ஜோன் பீர் கூறியதாவது,

இழப்பீட்டை பெற்றுக்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தை இலகுவானதல்ல. நூரியின் குடும்பத்தினருக்கு முறையான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுவதில்லை என்று குறிப்பிட முடியும். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எமக்கு இந்தச் சிக்கலை நீதிமன்றம் அல்லது மத்தியஸ்தக் குழுவிடம் எடுத்துச் செல்ல வேண்டி ஏற்படும் என்றார்.     

மரணத்தை வென்று சிகரம் தொட்ட வான் டைக்

வெர்ஜில் வான் டைக் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் மரணத்தின் விளிம்பு வரை…

சிறு வயது முதல் மத்தியகள வீரராக அதிக திறமையை வெளிப்ளையாட சந்தர்ப்பம் கிடைத்ததோடு இந்த விபத்து நிகழும் போது அந்த அணிக்காக அவர் 9 போட்டிகளில் ஆடி இருந்தார். அதேபோன்று அதுவரை அவர் அந்தக் கழகத்தின் முதல் நிலை அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொண்டிருந்ததோடு மன்செஸ்டர் யுனைடட் மற்றும் ஆர்சனல் போன்ற பிரபல கழகங்களினது அவதானமும் அவர் மீது ஈர்த்திருந்தது. அது தவிர அவர் 16 வயதுக்கு உட்பட்ட, 17 வயதுக்கு உட்பட்ட, 18 வயதுக்கு உட்பட்ட மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட நெதர்லாந்து தேசிய கால்பந்து அணிகளுக்காகவும் ஆடி அபார திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த திறமைகள் காரணமாக அவர் பயிற்சியாளர்கள், கால்பந்து விமர்சகர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்களினது பாராட்டை பெற்றதோடு 2016 ஆம் ஆண்டில்ஸ்போர்ட்ஸ்மெயில்இணையதளத்தின் மூலம் வெளியிடப்பட்ட கால்பந்து உலகின் திறமை மிக்க வீரர்கள் 10 பேரின் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்தது

அவருக்கு அஜக்ஸ் அணிக்காக 2016-17 பருவத்தில் ஐரோப்பிய லீக்கில் இரண்டாம் இடத்தையும், அந்தப் பருவத்திலேயே நெதர்லாந்து இரண்டாம் பிரிவு கால்பந்து லீக்கான ஈர்ஸ்டே டிவிசன் தொடரில் சிறந்த வீரருக்கான விருது மற்றும் 2014 ஆம் ஆண்டின் ஏகோன் பியுச்சர் கப் தொடரில் சிறந்த வீரருக்கான விருதினையும் வெல்வதற்கு முடிந்தது. மேலும் 2016 ஆம் ஆண்டில் 19 வயதுக்கு உட்பட்ட ஐரோப்பிய கிண்ணப் போட்டியில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட அணிக்கும் மத்தியகள வீரராக அவரது பெயர் இடம்பெற்றது.    

மறுபுறம் அவர் ஏனைய வீரர்களிடம் இருந்தும் பாராட்டுகள், அதேபோன்று அவர்களினது அன்பிற்கும் பாத்திரமானார். ஏனைய வீரர்கள் அவரைஅப்பிஎன்றே அழைத்தார்கள். அவர் தொடர்பில் கருத்துக் கூறிய அவருடன் அஜக்ஸ் அணியில் ஆடிய அவரது உற்ற நண்பரும், தற்போது பார்சிலோனா அணியில் ஆடுபவருமான மத்தியகள வீரர் ப்ரான்கி டி ஜொங், தான் எதிர்காலத்தில் விளையாட வேண்டிய கழகத்தை தேர்வு செய்ய முடியாமல் இருந்தபோது நூரியின் ஆலோசனை பார்சிலோனா அணியை தேர்வு செய்வதற்கு பெரிதும் உதவியது என்றார்.

நான் அவருடன் கடந்த கோடை காலத்தில் அதிகம் பேசினேன். நான் ஒருநாள் இருந்து கொண்டிருந்தபோது அவரது அம்மா அருகில் வந்து, அப்பி, பிரான்கி எந்த அணிக்கு விளையாட வேண்டும்? பார்சிலோனா கழகமா? என்று கேட்டார். அதனை அவர் கேட்டவுடன் புருவங்கள் மகிழ்ச்சியில் உயர்ந்தன. அது எனது வாழ்வில் மிகச் சிறந்த தருணம் என்று குறிப்பிட்டார்

ப்ரான்கி டி ஜொங் உடன் நூரி

நூரி பற்றி நெதர்லாந்து அணியின் முன்னாள் வீரரும் அஜக்ஸ் இளையோர் அணியின் முகாமையாளருமான விம் ஜொங்ஸ் கூறும்போது

அவர் சிறந்த ஒரு வீரர். நீங்கள் எப்போதாயினும் அஜக்ஸ் போட்டி ஒன்றைப் பார்த்தால் அனைவரும் அப்பி தொடர்பிலேயே பேசுவது உங்களுக்குப் புரியும். ஏனென்றால் அவரது திறமை வேறு வீரர்களை விடவும் மாறுபட்டிருந்தது என்கிறார்

அவருக்கு ஏற்பட்ட இந்த விபத்துக்குப் பின்னர் அவரை கௌரவிக்கும் வகையில் அஜக்ஸ் அணியில் அவருடன் ஆடிய, தற்போது இத்தாலியின் ரோமா கால்பந்து கழகத்திற்காக ஆடுபவரான ஜஸ்டின் க்லுவெர்ட் 34 ஆவது இலக்கத்தை தேர்வு செய்திருக்கிறார். ஏனென்றால் நூரியின் ஜெர்சி இலக்கமும் 34 என்பதாலாகும்.

எனது ஜெர்சியின் பின்பக்கம் 34 ஆவது இலக்கத்துடனேயே நான் ஆடுகிறேன். அது எனது நண்பனுக்காக. அது இந்த நிகழ்வு தொடர்பில் நாம் தெரிந்து வைத்திருப்பது, அவரிடம் நாம் வைத்திருக்கும் மதிப்பு மற்றும் அன்பை வெளிப்படுத்துவதாகும். அப்பி மிகவும் ஒழுக்கமான, கௌரவமான, கால்பந்துக்கு அன்பு செலுத்தும் ஒருவர். எனவே அதுபோன்ற முக்கியத்துவம் பெற்ற ஒருவரை ஒருபோதும் எம்மால் மறக்க முடியாதுஎன்கிறார் 

நூரியை கௌரவிக்கும் ஜஸ்டின் க்லுவெர்ட்

அப்பியுடன் விளையாடிய மற்றொரு வீரரான வான் டி பீக் மூலம் கடந்த ஆண்டு ஐரோப்பிய சம்பியன்ஸ் காலிறுதிப் போட்டியின் இரண்டாவது கட்ட போட்டியில் கோல் ஒன்றை பெற்றதோடு அப்போது அவர் தமது ஜெர்சியின் பின்பக்க இலக்கத்தை காண்பித்து நூரிக்கு மரியாதை செலுத்தினார்.  

நான் திரையை நோக்கி பார்த்தபோது எனது கோல் பதிவாகி இருப்பது 34 ஆவது நிமிடத்தில் என்பதை புரிந்து கொண்டேன். அது அவராக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது என்று அவர் குறிப்பிட்டார்.  

அஜக்ஸ் அணியில் அவருடன் விளையாடிய அவரது மற்றொரு சிறந்த நண்பரான டிமோத்தி பொசுமென்சா அவர் தொடர்பில் கூறும்போது, அவர் மிகச் சிறந்த வீரர் என்று தெரிவித்தார்.   

அவர் சிறந்த நண்பர். உண்மையில் எம் அனைவருக்கும் சகோதரர் போன்றவர். நாம் சிறு வயதில் இருக்கும்போது பல போட்டிகளும் வேறு நாடுகளிலேயே இருந்தன. அந்த அனைத்து போட்டிகளிலும் போல் சிறந்த வீரருக்கான பரிசை அப்பி பெற்றுக்கொண்டார். அவர் அணியில் இருந்த சிறந்த வீரர், அல்லது சிறந்த வீரர்களில் ஒருவர் என்றார்

“நாம் உங்களை வெறுக்கிறோம்” ரொனால்டோவிடம் கூறிய டிபாலா

போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஆர்ஜன்டீன…

மேலும், அவருடன் விளையாடிய வீரர்களான பிலிப்பே சான்டிலெர், அமீன் யூனிஸ் மற்றும் கெவின் டிக்ஸ் ஆகியோர் புதிய கழகங்களில் சேர்ந்தபோது நூரியை கௌரவிக்கும் வகையில் அவரது ஜெர்சி இலக்கமான 34 ஆம் இலக்கத்தை தேர்வு செய்தனர். அவரது நண்பரான பார்சிலோனா வீரர் ஒஸ்மானே டெம்பெலே விபத்து இடம்பெற்ற நாள் தொடக்கம் அவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயரை தமது பாதணியில் எழுதிய படியே விளையாடுகிறார்.  

நூரியின் பெயரை தனது பாதணியில் எழுதி இருக்கும் ஒஸ்மானே டெம்பெலே

தவிரவும் உலகெங்கும் உள்ள  கால்பந்து வீரர்கள், அணிகள் மற்றும் கால்பந்து ரசிகர்களும் இந்த நிகழ்வுக்குப் பின்னர் அவரை கௌரவிக்க ஆரம்பித்ததோடு அவை அனைத்துக்கும் மத்தியில் அஜக்ஸ் அணி கடந்த பருவத்தில் அவர்களின் 34 ஆவது லீக் பட்டத்தையும் வென்றனர்.     

நூரியை கௌரவிக்கும் அஜக்ஸ் ரசிகர்கள்

இதன்போது அந்த கிண்ணத்தை வழங்கும் நிகழ்வுக்காக நூரியின் தந்தை மற்றும் சகோதரருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு அந்தப் பட்டம் அவருக்காக வழங்கப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட அஜக்ஸ் அணித் தலைவர் மன்ஹிஸ் டி லைட் கூறியதாவது,  

ஆம்ஸ்டர்டாம் அஜக்ஸ் அணியினரான நாம் இந்த கிண்ணத்தை நூரிக்காக அர்ப்பணிக்கிறோம். எமது அப்தல்ஹக் நூரி! இது உங்களுக்காக!” என்றார்

34ஆவது லீக் பட்டத்தை வென்ற அஜக்ஸ் அணியுடன் இணைந்த நூரியின் தந்தை மற்றும் சகோதரர்

எவ்வாறாயினும் 2018 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நூரி கோமா நிலையில் இருந்து சுகம் பெற்றபோதும் அவரை தொடர்ந்து மருத்துவமனையில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு அவருக்கு நினைவு திரும்பவில்லை

எனினும் அண்மையில் அவரது உடல் நிலை பற்றி நற் செய்தி ஒன்று வெளியானதை அடுத்து கால்பந்து ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனர். அது அண்மையில் அவரது மூத்த சகோதரர்டி வெரெல்ட் ட்ராய்ட் டூர்நிகழ்ச்சியில் பங்கேற்று, நூரி தற்போது மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் கூறினார்.    

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கோமாவில் இருந்து திரும்பினார் அஜக்ஸ் வீரர் நூரி

நெதர்லாந்து முன்னணி கால்பந்து கழகமான அஜக்ஸ் அணியின் மத்தியகள வீரர் …

 “அவர் வீடு திரும்பி இருப்பது நீண்ட காலத்திற்கு பின்னராகும். நாம் அவரை நன்றாகப் பார்த்துக்கொள்கிறோம். அவர் இப்போது வீட்டில் இருப்பதால் அவர் மருத்துவமனையில் இருந்ததை விடவும் சுகம் பெறுவார் என்று நான் நினைக்கிறேன். தாம் இருப்பது குடும்பத்தினருடன், பழகிய சூழலில் வீட்டில் இருக்கிறோம் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. அதன்படி அவர் இப்போது கோமா நிலையில் இல்லை என்றார்.  

மேலும் அவர் முக பாவனைகள் மூலம் சில வேளைகளில் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பாடுவதாகவும், இன்னும் அவருக்கு படுக்கையில் இருந்து எழுந்து நிற்பதற்கு திறன் இல்லை என்றும் இதன்போது அவரது சகோதரர் குறிப்பிட்டார்

அவருக்கு இன்னும் படுக்கையில் இருந்து எழுந்திருக்க முடியவில்லை. இன்னும் அவர் தொடர்ந்து படுக்கையில் இருப்பதால் அவருக்கு நாம் அனைத்து பணிவிடைகளையும் செய்ய வேண்டும். நன்றாக இருக்கின்ற சில நேரங்களில் அவர் புருவங்கள் மூலமும் சிறு புன்னகை மூலமும் எம்முடன் பேசுகிறார். என்றாலும் நீண்ட நேரத்திற்கு அவ்வாறு ஈடுபட அவரால் முடியவில்லை என்றும் அவரது சகோதரர் குறிப்பிட்டார்.  

அதேபோன்று கால்பந்து போட்டிகளை அவர் அதிக மகிழ்ச்சியுடன் பார்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அவர் எம்முடன் பேசுகிறார். அவர் சுகவீனமுற்றவராக இல்லை. எமது பேச்சுகளில் அவரை முடியுமான வகையில் சேர்த்துக் கொள்கிறோம். அதேபோன்று நாம் வராண்டாவில் கால்பந்து போட்டிகளை பார்க்கிறோம். அதனால் அவர் மிக மகிழ்ச்சி அடைகிறார் என்பது அவரது முகத்தில் தெரிகிறது.” 

எவ்வாறாயினும் அவருக்கு எதிர்காலத்தில் கால்பந்து விளையாடுவதற்கு முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது அவர் தொழில்முறை கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். அதேபோன்று, அவர் இந்த நிலையில் இருந்து முழுமையாக குணமடையும் சந்தர்ப்பம் மிகக் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றபோதும் எதிர்காலத்தில் இந்த நிலைமையில் இருந்து முழுமையாக குணமடைந்து வருவார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்

அதனால் அவர் முழுமையாக குணமடைந்து கால்பந்து அரங்கிற்கு வருவதை பார்க்க அவரது கால்பந்து சகாக்கள் போன்று உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் பிரார்த்திப்பார்கள் என்பது நிச்சயம்

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<