ரொனால்டினோவை விடுவிக்க நிதியுதவி: மெஸ்ஸி மறுப்பு

95
messi

பிரேசில் அணியின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோவை பரகுவே சிறையில் இருந்து விடுவிப்பதற்கு உதவியாக பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி 3.25 மில்லியன் பௌண்ட் தொகையை வழங்கியதாக வெளியான செய்தியை மெஸ்ஸி மறுத்துள்ளார். 

போலி கடவுச்சீட்டுடன் பரகுவே நாட்டுக்குள் நுழைந்ததற்காக இந்த மாத ஆரம்பத்தில் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார். 39 வயதான அவர் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு முகம்கொடுத்துள்ளார்.    

சிறையிலும் கால்பந்து தொடரை வென்ற ரொனால்டினோ

பரகுவே சிறையில் இருக்கும் பிரேசில் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டினோ

இந்நிலையில் ரொனால்டினோவை விடுவிப்பதற்கு அவரது பார்சிலோனா அணியின் சக வீரர் மெஸ்ஸி நான்கு முன்னணி வழக்கறிஞர்களை அமர்த்தி இருப்பதாக கடந்த வாரம் வதந்தி பரவியது. இதற்காக அவர் 3.25 மில்லியன் பௌண்ட் வரை செலவு செய்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

எனினும், ரொனால்டினோ பற்றி மெஸ்ஸி கவலை அடைந்தபோதும் அவருக்கு நிதி உதவிகள் எதனையும் அளிக்கவில்லை என்று மெஸ்ஸியின் ஆலோசகர்களை மேற்கோள்காட்டி ஸ்பெயின் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.  

பார்சிலோனா அணியில் ஒரு இளம் வீரராக மெஸ்ஸி உருவொடுக்கும் காலத்தில் அந்த அணியில் ஆடிய ரொனால்டினோ உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராவார். இந்த இருவருக்கும் இடையிலான நட்பு இன்றும் நீடித்து வருகிறது.   

பரகுவே தலைநகர் அசுன்சியாவின் புறநகர் பகுதியில் வைத்து ரொனால்டினோ தனது சகோதரர் ரொபார்டோவுடன் கைது செய்யப்பட்டார். 

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஷிப் போட்டி 2021 வரை ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த

தான் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு எதிராக ரொனால்டினோவின் மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தம்மை சிறையில் வைத்திருப்பதற்கு பதில் வீட்டுக் காவலில் வைத்திருப்பதற்கு செய்யப்பட்ட மேன்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்ததாக அவர் கடந்த வெள்ளிக்கிழமை (13) கூறியிருந்தார். 

இதனால் ரொனால்டினோ மற்றும் அவரது சகோதரர் இருவரும் அடுத்த ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

ரொனால்டினோவின் இந்தக் கடவுச்சீட்டு மோசடி குறித்து பல டஜனுக்கும் அதிகமானவர் சிக்கியுள்ளனர். இதில் அவருக்கு கடவுச்சீட்டை வழங்கியதாகக் கூறப்படும் பிரேசில் தொழிலதிபர் ஒருவர் மற்றும் பயண ஆவணங்களின் உண்மையான உரிமையாளர்களான இரு பெண்களும் அடங்குகின்றனர். 

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க