சரே அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றார் சங்கா

955
Royal London One-Day Cup - Sanga scored a fifty
 

இங்கிலாந்தில் உள்ளூரில் நடைபெறும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணப் போட்டியின் போது சரே அணிக்காக விளையாடி வரும் இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திர இடதுகைத் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார அரைச்சதத்தைப் பெற்றுள்ளார்.  

சங்காவிற்கு அரைச்சதம்

கென்ட் கவுண்டி கிரிக்கட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் சரே அணி கென்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சரே அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவுசெய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சரே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  சரே அணியின் நம்பிக்கை நாயகன் குமார் சங்கக்கார மிக நிதானமாக விளையாடி சரே அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்றார். இவர் 76 நிமிடங்கள் களத்தில் நிலைத்தாடி 50 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 58 ஓட்டங்களைப் பெற்றார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 116.00 ஆகக் காணப்பட்டது.  இவரைத் தவிர சரே அணி சார்பாக யாரும் அரைச்சதம் பெறவில்லை. மற்ற வீரர்களில் ஜேசன் ரோய் 32 ஓட்டங்களையும், பர்ன்ஸ் மற்றும் அன்சாரி ஆகியோர் தலா 30 ஓட்டங்களையும்  பெற்றனர்.

சற்று நேரத்தில் கென்ட் அணி 256 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடவுள்ளது.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்