கட்டாய இராணுவ பயிற்சியில் பங்கேற்கிறார் சொன்

75

டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணியின் முன்கள வீரர் சொன் ஹியுங்-மின் தனது தாய் நாடான தென் கொரியாவில் மூன்று வார கட்டாய இராணுவப் பயிற்சியில் இந்த மாதத்தில் பங்கேற்கவுள்ளார். 

வட கொரியாவுடன் இன்றும் யுத்த சூழலுக்கு முகம்கொடுத்திருக்கும் தென் கொரியாவில் உடல் தகுதியுடைய அனைத்து ஆண்களும் 28 வயதுக்குள் முழுமையான இராணுவ சேவையை பூர்த்தி செய்வது கட்டாயமாகும்

பிரான்ஸ் மருத்துவர்களின் இனவாதப் பேச்சுக்கு கால்பந்து நட்சத்திரங்கள் எதிர்ப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கான BCG தடுப்பு மருந்தை ஆபிரிக்காவில் சோதித்துப் பார்க்க…

வரும் ஜூலை மாதம் 28 வயதை அடையவிருக்கும் சொன் கையில் ஏற்பட்ட உபாதையில் இருந்து குணமடைந்து வரும் நிலையில் கடந்த மாதம் தென் கொரியா திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் தமது இராணுவ சேவையை பூர்த்தி செய்த பின் வரும் மே மாதம் லண்டன் திரும்புவார் என்று டொட்டன்ஹாம் அணி அறிவித்துள்ளது

எனினும், அவர் லண்டனில் இருந்து திரும்பி இருக்கும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கு இரண்டு வார சுய தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார்.

எனினும் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தென் கொரியாவுக்கு தங்கப் பதக்கம் வென்று கொடுத்ததால் சொன்னுக்கு 21 மாத கட்டாய இராணுவச் சேவையில் ஈடுபடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. எனினும் அவர் மூன்று வார இராணுச் சேவையில் ஈடுபடுவது அவசியமாகும்.  

கடந்த பெப்ரவரி மாதம் ஆஷ்டன் வில்லா அணிக்கு எதிராக 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் டொட்டன்ஹாம் அணி வெற்றியீட்டிய போட்டியிலேயே சொன்னின் கையில் முறிவு ஏற்பட்டது. இதற்காக அவர் சத்திரசிகிச்சை செய்து கொண்டார்.   

சொன் இந்தப் பருவத்தில் மீண்டும் விளையாடுவார் என்று தாம் எதிர்பார்க்கவில்லை என்று டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் தலைமை பயிற்சியாளர் ஜோஸ் மொரின்ஹோ கூறியிருந்தார். கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ப்ரீமியர் லீக் போட்டிகள் கடந்த மாதம் நிறுத்தப்பட்டன

இரசாயன போர் பயிற்சி 

ஓர் இராணுவ வீரருக்கான பயிற்சிகளைக் கொண்டிருக்கும் இந்தக் கட்டாய இராணுவ சேவையில் சொன் கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு முகம்கொடுப்பது தொடக்கம் துப்பாக்கிச் சூடு, 30 கிலோமீற்றர் தூரம் அணிவகுத்துச் செல்வது போன்ற பயிற்சிகளில் ஈடுபடவிருப்பதாக கடற்படை அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். 

நாட்டின் தெற்கே உள்ள தீவான ஜெஜுவில் கடற்படை பிரிவு ஒன்றில் வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி இந்த இராணுவப் பயிற்சிகள் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த திகதி மற்றும் இடம் தொடர்பில் உறுதி செய்வதற்கு இராணுவ மனிதவள நிர்வாகம் மறுத்துள்ளது.  

எனினும் ஒழுக்கக் கற்கைகள், போர்ப் பயிற்சிகள் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு சக்தி பயிற்சி உட்பட வழக்கமான புதிய ஆளணியினருக்கான குறுகிய பயிற்சிகளை சொன் பெறுவார் என்று கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.   

இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் கோமாவில் இருந்து திரும்பினார் அஜக்ஸ் வீரர் நூரி

நெதர்லாந்து முன்னணி கால்பந்து கழகமான அஜக்ஸ் அணியின் மத்தியகள வீரர்…

எனினும் தென் கொரிய இராணுவ மனிதவள நிர்வாகம் இராணுவப் பயிற்சி தொடர்பில் யூடியுப்பில் பதிவிட்டிருக்கும் வீடியோ ஒன்றில் வாயுக் கூடம் ஒன்றில் கட்டாய இராணுவப் பயிற்சி இடம்பெறும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இதற்கு சில நிமிடங்களின் பின் அவர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கண்ணீர் கொட்ட தலையில் தண்ணீரை ஊற்றி அந்த வேதனையில் இருந்து மீண்டு வருகின்றனர்.  

குறிப்பாக இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணு சக்தி பயிற்சி இந்த இராணுவப் பயிற்சியில் கடினமான ஓர் அங்கம் என்று அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது

சொன்னின் இந்தப் பயிற்சிக் காலத்தில் 30 கிலோமீற்றர் அணிவகுப்பு ஒன்றிலும் ஈடுபடவிருப்பதாக குறித்த கடற்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இராணுவத்தில் இருந்தால் துப்பாக்கியால் சுடுவதற்கும், கண்ணீர்ப் புகையில் மூச்சுவிடவும், போரில் பங்கேற்கவும், யுத்த களத்தில் தவழ்ந்து மற்றும் ஊர்ந்து செல்லவும் முடியுமாக இருக்க வேண்டும்என்றும் அந்தக் கடற்படை அதிகாரி ரோய்ட்டர்ஸ் இடம் குறிப்பிட்டார்.

அணிவகுப்பின்போது, எமது வழக்கமான படை வீரர்கள் 40 கிலோமீற்றருக்கு உபகரணங்களை எடுத்து வர வேண்டும் என்றபோதும், நிகழ்ச்சிகளை பொறுத்து மாற்று பயிற்சியாளர்களுக்கு இதனை விடவும் குறைவான பயிற்சிகளே வழங்கப்பட வாய்ப்பு உள்ளதுஎன்றும் அவர் குறிப்பிட்டார்.  

மெஸ்ஸியின் விமானம் பிரசல்ஸில் அவசர தரையிறக்கம்

ஸ்பெயினின் டெனரிப் தீவை நோக்கி பயணித்திக்கொண்டிருந்த லியோனல்…

இந்த பயிற்சியின்போது அனைவரதும் உடல் வெப்பநிலை மற்றும் மருத்துவ சோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதோடு கொரொனா வைரஸ் தொற்றில் இருந்து தடுக்கும் வகையில் பயிற்சியின்போதும் ஒவ்வொருவருக்கு இடையிலும் இடைவெளி பேணப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்

தேவையெனில் இராணுவ மருத்துவர்களால் சொன்னின் உபாதைக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் நடுப்பகுதியில் ப்ரிமியர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே 2019-2020 பருவம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இடைவெளியும் சொன் தனது கட்டாய இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்வதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.  

இம்முறை ப்ரீமியர் லீக் பருவத்தில் சொன் ஒன்பது கோல்களையும் ஏழு கோல் உதவிகளையும் பெற்றுள்ளார். அவரது டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பர் அணி புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<