சகல துறையிலும் சோபித்த கண்டி அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி

1026

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான மாகாண அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டு போட்டிகள் இன்றுடன் (23) நிறைவடைந்தன. இதில் கொழும்பு அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்ததோடு தம்புள்ளை அணிக்கு எதிராக கண்டி அணி இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது.

கொழும்பு எதிர் காலி

கொழும்பு அணிக்கு தொடர்ச்சியாக தனது துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தி வரும் அகீல் இன்ஹாம் முதல் இன்னிங்ஸில் பெற்ற 82 ஓட்டங்களின் உதவியோடு கொழும்பு அணி காலிக்கு எதிராக 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றி ஒன்றை பெற்றது. 

ஹொங்கொங்கை தமது சுழல் மூலம் சிதைத்த இலங்கையின் 19 வயதின் கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணி

ஆசியக் கிரிக்கெட் பேரவை (ACC) ஆசிய…

கொழும்பு, CCC மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (28) ஆரம்பமான போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய காலி அணி 92 ஓட்டங்களுக்கே சுருண்டது. அதிரடியாக பந்துவீசிய மஹீஷ் தீக்ஷன 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களை பெற்றது. இதன்போது காலி அணிக்காக ஹரீன் புத்தில 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களையே பெற்றது. கவுமால் நாணயக்கார தனது சுழலின் மூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு லக்ஷான் பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி கொழும்பு அணிக்கு 21 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டதோடு அந்த இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டியது. கொழும்பு அணி இந்த தொடரில் இதுவரை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்றதோடு இந்த மூன்று போட்டிகளிலும் அகீல் இன்ஹாம் துடுப்பாட்டத்தில் சோபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

காலி (முதல் இன்னிங்ஸ்) – 92 (42) – லஹிரு டில்ஷான் 32, எம்.ஏ. ஹர்ஷஜித் 31, மஹீஷ் தீக்ஷன 5/33, அயன சிறிவர்தன 3/18

கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 324 (86.3) – அகீல் இன்ஹாம் 82, சஞ்ஜுல அபேவிக்ரம 41, லக்ஷான் பெர்னாண்டோ 42, ஹரீன் புத்தில 7/65

காலி (முதல் இன்னிங்ஸ்) – 162 (43.2) – லஹிரு டில்ஷான் 69, எம்.ஏ. ஹர்ஷஜித் 35, கவுமால் நாணயக்கார 5/56, லக்ஷான் பெர்னாண்டோ 3/35

கொழும்பு – 21/0 (4)

முடிவு கொழும்பு 10 விக்கெட்டுகளால் வெற்றி


தம்புள்ளை எதிர் கண்டி

கண்டி அணியின் வலுவான துடுப்பாட்டத்தின் மூலம் தம்புள்ளைக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொழும்பு, தர்ஸ்டன் மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான மூன்று நாட்கள் கொண்ட போட்டியில் தம்புள்ளை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 165 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் அந்த அணி 161 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன்போது கண்டி அணிக்காக மட்டக்களப்பு வீரர் கே. தனூஷன் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கண்டி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. எனினும் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தம்புள்ளை அணிக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் திசரு டில்ஷான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த அந்த அணி 188 ஓட்டங்களுக்கே சுருண்டது. டில்ஷான் 7 விக்கெட்டுகளை பதம்பார்த்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாணங்களுக்கு இடையிலான தொடரில் கொழும்பு அணிக்கு இரண்டாவது வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 23…

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கொழும்பு அணிக்கு டீ.எம்.யூ. பராக்கிரம 142 ஓட்டங்களை பெற்று வலுச்சேர்த்தார். தவிர, தனுக்க தாபரே 79 ஓட்டங்களை குவித்தார். இதன்மூலம் கண்டி அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக சகல விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

தம்புள்ளை (முதல் இன்னிங்ஸ்) – 188 (52.1) – தமித் சில்வா 58, திசரு டில்ஷான் 7/48, நிமேஷ் மெண்டிஸ் 3/20

கண்டி (முதல் இன்னிங்ஸ்) – 353 (68.1) – டீ.எம்.யூ. பராக்கிரம 142, தனுக்க தாபரே 79, திசரு டில்ஷான் 48, மிலான் ரத்னாயக்க 3/91, ரந்தீர ரணசிங்க 2/73, தமித் சில்வா 2/75

தம்புள்ளை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 162 (51) – அரவிந்த அகுரகொட 32, கே. தனூஷன் 6/48

முடிவு கண்டி இன்னிங்ஸ் மற்றும் 3 ஓட்டங்களால் வெற்றி

>>>மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு<<<