துடுப்பாட்ட தரவரிசையில் புதிய சாதனை படைத்த பாபர் அஸாம்

176

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று (18) நிறைவுக்குவந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது டெஸ்ட் வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை (18) வெளியிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன் முதல் தொடரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 

காலநிலை சீர்கேட்டினால் சமநிலையான பாகிஸ்தான் – இங்கிலாந்து டெஸ்ட்

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக போதியளவு நேரம் கிடைக்காமையினால் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவு பெற்றது. 

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட அணியின் நம்பிக்கை துடுப்பட்ட வீரர் பாபர் அஸாம், 798 தரவரிசை புள்ளிகளுடன் ஒரு நிலை முன்னேறி மீண்டும் ஐந்தாமிடத்திற்கு வந்துள்ளார். கடந்த 2020 பெப்ரவரியில் பங்களாதேஷ் அணியுடனான தொடருக்கு பின்னர் பாபர் அஸாம் மீண்டும் ஐந்தாமிடத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் பாபர் அஸாம் முதல் ஐந்திற்குள் புகுந்ததன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் உலகில் மூன்று விதமான போட்டிகளிலும், அதாவது டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதல் ஐந்திற்குள் காணப்படும் ஒரேயொரு வீரராக சாதனை படைத்துள்ளார். அவர் டெஸ்டில் ஐந்தாமிடம், ஒருநாளில் மூன்றாமிடம், டி20களில் முதலிடம் என்றவாறு காணப்படுகிறார்.

டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் இணையும் என்ரிச் நோட்ஜே

இதேவேளை, குறித்த டெஸ்ட் போட்டியின் போது 60 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆபித் அலி 19 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (518) 49ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

மேலும் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை கொடுத்த விக்கெட்காப்பாளர் மொஹமட் றிஸ்வானும் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (415) 75ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். அத்துடன் இங்கிலாந்து அணி சார்பாக 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஷக் க்ரௌலி 15 நிலைகள் உயர்ந்து வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (389) 81ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை

எப்போதும் இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை பந்துவீச்சாளராக திகழ்ந்துவரும் அனுபவ வீரர் ஸ்டுவர்ட் ப்ரோட், குறித்த இராண்டாவது டெஸ்ட் போட்டியின் போது 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 846 தரவரிசை புள்ளிகளை பெற்று நியூசிலாந்தின் நைல் வேக்னரை மூன்றாமிடத்திற்கு பின்தள்ளி இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

Video – அதிரடி மாற்றங்களுக்கு காத்திருக்கும் BARCELONA !| FOOTBALL ULLAGAM

கடந்த முதல் டெஸ்ட் முடிவின் பின்னர் முதல் பத்திற்குள் நுழைந்த பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் அப்பாஸ், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போதும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் மீண்டும் இரு நிலைகள் உயர்ந்து 785 தரவரிசை புள்ளிகளுடன் எட்டாவது நிலைக்கு முன்னேறியுள்ளார். 

இங்கிலாந்து அணியில் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்த அணியின் மற்றுமொரு அனுபவ வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் இரு நிலைகள் உயர்ந்து 744 தரவரிசை புள்ளிகளுடன் 14ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.  

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க