மெஸ்ஸியின் விமானம் பிரசல்ஸில் அவசர தரையிறக்கம்

84

ஸ்பெயினின் டெனரிப் தீவை நோக்கி பயணித்திக்கொண்டிருந்த லியோனல் மெஸ்ஸியின் தனிப்பட்ட விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரசல்சில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த விமானத்தில் மெஸ்ஸி இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. நேற்றுக் காலையிலேயே மெஸ்ஸியின் விமானம் பிரசல்சின் செவன்டம் விமானநிலையத்தில் இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.  

ஊதியக் குறைப்புக்கு பார்சிலோனா வீரர்கள் இணக்கம்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பார்சிலோன கழக வீரர்கள்…

இந்த விமானம் டெனரிப்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நிலையிலேயே தொழில்நுட்பக் கோளாரை அடுத்து வெள்ளிக்கிழமை காலை 9.10 மணி அளவில் தரையிறக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன

அந்த விமானம் புறப்பட்டு 90 நிமிடங்களின் பின்னரே பிரசல்ஸ் திரும்பியுள்ளது. விமானத்தின் தரையிறங்கும் சக்கரத்தில் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக பெல்ஜியத்தின் எச்.எல்.என் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது

இந்த விமானம் மோதியபடியே தரையிறங்கியதாக உறுதி செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன.   

பார்சிலோனா நட்சத்திர வீரர் மெஸ்ஸி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்த விமானத்தை 13 மில்லியன் யூரோவுக்கு வாங்கினார்.    

இந்த விமானத்தின் சிறகு பகுதியில் 10 ஆம் இலக்கம் எழுதப்பட்டுள்ளது. விமானத்தின் நுழைவுப் பகுதியில் மெஸ்ஸியின் மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 16 இருக்கைகள் இருப்பதோடு இரு குளியலறைகளுடன் ஒரு சமையலறையும் உள்ளது.     

“நாம் உங்களை வெறுக்கிறோம்” ரொனால்டோவிடம் கூறிய டிபாலா

போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஆர்ஜன்டீன மக்க…

இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பில் பிரசல்ஸ் விமானநிலையம் விளக்கம் அளிக்க மறுத்தது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மெஸ்ஸி மற்றும் அவரது சக வீரர்கள் தற்போது தனிமையில் உள்ளனர். இந்த வைரஸ் காரணமாக லா லிகா போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.  

ஸ்பெனின் முன்னணி விமான சேவைகளும் கடந்த மார்ச் மாதம் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாட்டில் அவசர நிலை நீடிப்பதால் இந்தக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<