பிரான்ஸ் மருத்துவர்களின் இனவாதப் பேச்சுக்கு கால்பந்து நட்சத்திரங்கள் எதிர்ப்பு

72

கொரோனா வைரஸ் தொற்றுக்கான BCG தடுப்பு மருந்தை ஆபிரிக்காவில் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று பிரான்ஸ் மருத்துவர்கள் இருவர் பரிந்துரைத்ததற்கு பிரபல முன்னாள் கால்பந்து வீரர்கள் இருவரான டிடியர் ட்ரொக்பா மற்றும் சாமுவேல் எட்டோ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். 

மெஸ்ஸி, ரொனால்டோவில் சிறந்த வீரரை தேர்வு செய்த ககா

பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ககா தற்போதைய சிறந்த கால்பந்து வீரராக …

உலகளாவிய தொற்றாக மாறியிருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்து அல்லது தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் காச நோய்க்காக பயன்படுத்தப்படும் Bacillus Calmette – Guerin’ (BCG) மருந்தை கொவிட்-19 தொற்றுக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்த முடியுமா என்பது பற்றிய ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன.   

இது தொடர்பில் பிரான்ஸ் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட பிரான்ஸின் பாரிஸ் நகரில் உள்ள கோச்சின் மருத்துவமனையின் அவசரப் பிரிவு தலைவர் கலாநிதி ஜுன் போல் மிரா, இந்த மருந்து தொடர்பில் ஆபிரிக்காவில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.   

நாம் இந்த ஆய்வினை சரியான முகக் கவசங்கள் இல்லாத, முறையான சிகிச்சை அல்லது சாதாரண நிலைமைக்கு கொண்டுவரும் செயற்பாடு ஒன்று இல்லாத ஆபிரிக்காவில் தானே மேற்கொள்ள வேண்டும்? சரியாக அங்கு விலைமாதுக்களை பயன்படுத்தி எயிட்ஸ் ஆய்வுகளுக்காக புதிய சோதனைகளை மேற்கொள்வது போன்றது. ஏனென்றால் தாம் பாதுகாப்பு இல்லாமலேயே இருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியும் என்று அந்த மருத்துவர் கூறியிருந்தார்.   

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் மருத்துவ பரிசோதனைகளுக்கான பிரான்ஸ் தேசிய நிறுவனத்தின் ஆய்வுகள் தொடர்பான பொது முகாமையாளர் கலாநிதி கெமிவே லொட்ச், இது தொடர்பான சோதனைகளை ஆபிரிக்காவில் மேற்கொள்வது தொடர்பில் தற்போது ஆலோசித்து வருவதாக கூறினார்

கொரோனாவால் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த …

நீங்கள் கூறுவது சரியே. நாம் அது போன்ற ஆய்வு மூலம் BCG தடுப்பு மருந்துடன் தொடர்புடைய ஆய்வினை ஆபிரிக்காவில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கிறோம். தற்போது செயற்படுகின்ற அல்லது செயற்படுத்த திட்டமிட்டிருக்கும் சிறு செயல்முறை ஒன்று உள்ளது. அது பற்றி நாம் நான்றாக ஆலோசிக்கவுள்ளோம். மேலும் அதற்கு இணையாக அவ்வாறான ஆய்வுகளை ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவில் மேற்கொள்வதை நிறுத்துவதில்லை என்று குறிப்பிட்டார்.  

இந்த கருத்துக்கு கெமரூன் தேசிய அணி மற்றும் பார்சிலோனா, இன்டர் மிலான், செல்சி மற்றும் ரியல் மெட்ரிட் உட்பட முன்னணி கால்பந்து கழகங்கள் பலதிலும் ஆடிய பிரபல முன்னாள் வீரர் சாமுவேல் எட்டோ தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறியிருப்பதாவது,   

Sons of b*****s. You’re just SH*T. ஆபிரிக்கா உங்களுக்கு சொந்தமில்லை. இப்படி ஆபிரிக்காவுடன் விளையாட வேண்டாம் என்று கடும் கோபத்தை வெளியிட்டுள்ளார்

இதனைத் தொடர்ந்து அவருடன் இணைந்த ஐவரிகோஸ்ட் தேசிய கால்பந்து அணி, அதேபோன்று செல்சி கழகத்திற்காக ஆடிய முன்னாள் வீரர் டிடியர் ட்ரொக்பாவும் இந்தக் கருத்தை கடுமையாக சாடியுள்ளார்.   

கழிப்பறை சுத்தம் செய்யும் நட்சத்திர வீரர்: சாடியோ மானேயின் மறுபக்கம்

கால்பந்து மைதானத்தில் சாடியோ மானேவின் திறமை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் …

நாம் தொடர்ந்து இதனை ஏற்று சோதனைகளுக்கு இடம்விடுவதை என்னால் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை. ஆபிரிக்கா என்பது ஆய்வுகூடம் இல்லை. நான் இந்த இனவாத மற்றும் இழிவுபடுத்தும் கருத்துகளை கடுமையாகக் கண்டிக்கிறேன். ஆபிரிக்காவில் உயிர்களை காப்பதற்கு மற்றும் முழு உலகையும் நிலைகுலையச் செய்துவரும் இந்த வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவுங்கள். இல்லாமல் நாம் எம்மை கினிப் பிக்ஸ் நிலைமைக்கு  இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாதது. இது நியாயமற்றது. எனவே ஆபிரிக்க தலைவர்களுக்கு இது போன்ற சதிகளில் இருந்து தமது மக்களை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு உள்ளதுஎன்று அவர் குறிப்பிட்டார்.  

இது தவிர செனகல் தேசிய அணி மற்றும் தற்போது துருக்கியின் இஸ்தான்புல் பசக்ஷஜர் கழகத்தின் முன்கள வீரராக ஆடும் டெம்பா பா இது பற்றி கூறும்போது,   

இது தான் மேற்குலகின் பண்பு. வெள்ளையினர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு கடைசியில் இனவாதம் மற்றும் முட்டாள்தனம் அவர்களிடம் சாதாரண ஒன்றாகிவிட்டது. அதனால் இதற்கு எதிராக நாம் எழுந்து நிற்க வேண்டிய நேரம் இதுவாகும்என்றார்.  

BCG தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக நல்ல பெறுபேறை தரும் என்று எதிர்பார்க்கப்படும் மருந்துகளில் ஒன்று மாத்திரமே. அது உலக மக்களிடையே பயன்படுத்துவதற்கு முன்னர் பல சோதனைகளுக்கும் உட்படுத்தி மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். இந்த வைரஸ் தொற்றுக்கு குறித்த மருந்து பயன்படுத்தப்படுவதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என்பது   ஆய்வாளர்களின் கணிப்பாகும்.  

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…