கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. இந்த வைரஸின் கோரத்தாண்டவம் விளையாட்டுத் துறையையே புரட்டி போட்டுவிட்டது.   

சர்வதேச விளையாட்டு போட்டிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் இருக்கின்றன. இதனால் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கிறார்கள். எனவே, 2-3 மாதங்களுக்கு எந்த போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகி உள்ளது

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வியாபிப்பதற்கு முன் போட்டிகள் மற்றும் மேலதிக பயிற்சிகளுக்காக வெவ்வேறு நாடுகளுக்குச் சென்றிருந்த இலங்கையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் இலங்கைக்கு வர முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

கொவிட்-19 காரணமாக மாலைத் தீவுகளில் சிக்கியுள்ள சுஜான் பெரேரா

கொவிட்-19 வைரஸ் காரணமாக இலங்கை…..

எனவே, அவ்வாறு நாடு திரும்ப முடியாமல் உள்ள வீரர்களின் தற்போதைய நிலைமை குறித்து இந்தக் கட்டுரை ஆராயவுள்ளது

யுபுன் ப்ரியதர்ஷன (குறுந்தூர ஓட்ட வீரர்)

“மெய்வல்லுனர் பயிற்சிகளுக்கான நான் இத்தாலியின் றோம் நகரில் தற்போது உள்ளேன். தற்போது ஏனைய நகரங்களை விட இங்கு கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாகவே உள்ளது. றோம் நகரில் உள்ள வினையாட்டு அகடமில் நான் தங்கியுள்ளேன். உண்மையில், இங்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் சிறப்பாக உள்ளது

அதுமாத்திரமின்றி, தற்போது இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருகின்றது

கொரோனா வைரஸ் குறித்து ஆரம்பத்தில் மிகப் பெரியளவில் நாங்கள் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு வாரம் செல்வதற்குள் இதன் தாக்கம் அனைவரது மத்தியிலும் அச்சத்தைக் கொடுத்தது

எனினும், இத்தாலியின் சுகாதாரப் பிரிவினர் இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டமை பாராட்டுக்குரிய விடயமாகும். அதனால் இங்குள்ள நிலைமை குறித்து நான் பயப்படவில்லை

மறுபுறத்தில் இலங்கையில் கொரோனா வைரஸினால் இருவர் மரணிக்கும் போது நான் அதிகம் பயப்பட்டேன். ஏனெனில் இதுபோன்ற நோய்களின் போது இலங்கை மக்களை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்பதை நன்கு அறிவேன். எமது பாதுகாப்பு பிரிவினரின் முயற்சியால் பாரிய உயிரிழப்புகளை தவிர்க்க முடிந்தது.   

நான் இலங்கையில் பன்னல என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன். இந்த வைரஸின் தாக்கம் வியாபிக்க முன் இலங்கைக்கு திரும்பி வருமாறு என்று எனது பெற்றோர்கள் கேட்டனர். ஆனால் பயிற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் நான் இங்கேயே தங்குவதற்கு தீர்மானித்தேன்.  

இதேநேரம், கடந்த 20 நாட்களாக எந்தவொரு பயிற்சிகளிலும் நான் ஈடுபடுவது கிடையாது. குறிப்பாக எமது பயிற்சியாளர்களை அகடமிக்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், நான் வீட்டில் இருந்தவாறு தொடர்ந்து பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறேன்

இதனிடையே, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு இங்குள்ள நிலைமைகள் மற்றும் எனது ஆரோக்கியம் குறித்து கேட்டறிந்தார்.  

டிபாலாவின் உடலை விட்டு நீங்காத கொரோனா வைரஸ் தொற்று

ஜுவன்டஸ் கால்பந்து கழகத்தின் நட்சத்திர…….

அதேபோல, நான் இலங்கை இராணுவத்தில் பொறியியல் மற்றும் இலத்திரனியல் படைப்பிரிவில் கடமையாற்றி வருகிறேன். அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். எனவே அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என நாடு திரும்ப முடியாமல் இத்தாலியில் சிக்கியுள்ள யுபுன் ப்ரியதர்ஷன தெரிவித்தார்.   

சுஜான் பெரேரா (தேசிய கால்பந்து அணி வீரர்)

மாலைத் தீவுகளின் ஈகல்ஸ் கால்பந்து கழகத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடி வருகின்ற இலங்கை கால்பந்து அணியின் கோல் காப்பாளர் சுஜான் பெரேராவுருக்கு மாலைத் தீவுகளிலிருந்து, நாட்டுக்கு திரும்பிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“எமக்கு மருத்துவ அவசர சேவை மாத்திரமே பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது, 86 நோயாளர்கள் இணங்காணப்பட்டதால், மலே நகரத்தில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இப்போது, நோயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன”

நான் இங்கு நலமாக இருக்கிறேன். எனது கழகம் மற்றும் அணி வீரர்கள் நன்றாக கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், அதிகமான இலங்கையர்கள் இங்கு துன்பத்துக்கு ஆளாகியிருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், இங்குள்ள இலங்கையர்கள் அதிகமாக பாதிக்கப்படுவர்.

அதிலும், நகரத்துக்கு வெளியில் தொழில் புரியும் இலங்கையர்கள் நகரத்துக்கு வந்து உணவு பெற்றுக்கொள்வதிலும், சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். அதேநேரம், மாலைத் தீவுகளில் வாழ்வதென்பது வேறு நாடுகளிலிருந்து வித்தியாசப்படுகிறது. இங்கு அதிகமான தீவுகள் இருப்பதால், அனைத்து பொருட்களும் நகரத்திலிருந்தே அனுப்பப்படுகின்றன.

அதற்காக நாட்டில் பல விடயங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதுபோன்ற தருணத்தில் நாட்டுக்கு திரும்பிச் செல்வதுதான் சிறந்த விடயம். எனினும், இங்குள்ள இலங்கையர்கள் தங்களுடைய தொழிலை விட்டுச்செல்வதற்கு அச்சமடைகின்றனர். எனவே, இதற்கான சரியான தீர்வை இலங்கை  தூதரகம் செய்ய வேண்டும்” என சுஜான் தெரிவித்தார்

கமல் குருப்பு (உள்ளக கிரிக்கெட் அணி பயிற்சியாளர்)

“நான் இலங்கை உள்ளக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளேன். உள்ளக கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 6 தடவைகள் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளேன். இறுதியாக கடந்த வருடம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்ட உள்ளக கிரிக்கெட்  உலகக் கிண்ணத்தில் விளையாடினேன்

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற ஸ்டுவர்ட் நிவ்லி ப்ளேட் என்ற கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது உள்ளக கிரிக்கெட் போட்டியாக இல்லாவிட்டாலும், அவர்களது அழைப்பை ஏற்று சவுத் வொரண்டிட் அணிக்காக விளையாடினேன்.

இதன்படி, கடந்த பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அந்த அணியுடன் இணைந்துகொண்டு 2 போட்டிகளில் பங்கேற்றேன். அந்தக் காலப்பகுதியில் தான் அவுஸ்திரேலியாவிலும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் வியாபிக்கத் தொடங்கியது 

கொரோனா தொடர்ந்தால் டோக்கியோ ஒலிம்பிக் இரத்தாகும்

எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்குள்…..

இதனையடுத்து போட்டித் தொடரை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே, ஒப்பந்தப்படி நான் விளையாடிய 2 போட்டிகளுக்கு மாத்திரம் பணம் வழங்கப்பட்டது

இந்த நிலையில், அவுஸ்திரேலியா அரசு கொரோனா வைரஸின் அச்சுறுத்தலை கருத்திற்கொண்டு எதிர்வரும் 6 மாதங்களுக்கு அனைத்து விமானப் பயணங்களையும் தடைசெய்துள்ளது. இதனால் தற்போது எனது நெருங்கிய நண்பரான எண்டி சொலம்ன்ஸின் வீட்டில் தங்கியுள்ளேன்

என்னைப் போல இந்தத் தொடரில் விளையாட வந்த 12 இலங்கை வீரர்களுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. அனைவரும் தமது நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளார்கள். எனவே, அவுஸ்திரேலியாவில் நிலைமைகள் சீராகும் வரை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல, எமது அனைவரினதும் விசா காலம் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி வரை உள்ளது. அதற்குமுன் இலங்கைக்கு வரமுடியாது போனால் இன்னும் 250 அவுஸ்திரேலிய டொலர்களை செலுத்த வேண்டிவரும்

அதுமாத்திரிமின்றி, எங்களைப் போல பல இலங்கையர்கள் இந்த கொரோனா வைரஸ் காரணமாக அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்கிறார்கள். எனவே நாம் அனைவரும் இலங்கையின் விமானநிலையம் திறக்கும் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு நாடு திரும்பினால் 14 நாட்கள் அல்ல, அதற்கு அதிகமான நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு செல்வதற்கு தயார்” என அவர் தெரிவித்தார்

இதேவேளை, தென்னாபிரிக்காவில் கடந்த மாதம் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபெறச் சென்றிருந்த சுரன்ஜித் தர்மசேன மற்றும் மகேஷ் டி சொய்சா ஆகிய இலங்கை வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தனுஷ் ப்ரியரத்ன ( நீளம் பாய்தல் வீரர்)

உலகில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடு தான் அமெரிக்கா. டெக்ஸாஸ் மாநிலத்தில் தான் நான் பயிற்சிகளுக்காக வந்துள்ளேன். அமெரிக்காவின் மற்றைய மாநிலங்களைக் காட்டிலும் இங்குள்ள நிலைமை சீராக உள்ளது. ஆனாலும், மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன்

உண்மையில் இலங்கையில் உள்ள நிலைமைகளை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. எனவே அமெரிக்காவில் இருப்பதைக் காட்டிலும் நாட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன்

இங்குள்ள பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் இணையத்தளம் வாயிலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர வேரு எந்தவொரு நேரத்திலும் வெளியில் வருவது கிடையாது.   

கொரோனாவுக்கு இரையான உலகக் கால்பந்து சம்பியன்

கடந்த 1966 பிஃபா உலகக் கிண்ணத்தை….

அதேபோல, எமக்கான பயிற்சிகளும் இடைவிடாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் சின்னச்சின்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வாரத்துக்கு 3 நாட்கள் இந்தப் பயிற்சிகள் இடம்பெறும்

பயிற்சிகளின் போது சுவட்டு மைதானத்தில் 10 பேருக்கு மாத்திரம் தான் அனுமதி வழங்கப்படுகின்றது. அதுவும் ஒவ்வொரு வீரருக்கும் இடையில் 3 மீற்றர் தூர இடைவெளியை கொண்டிருக்க வேண்டும். தண்ணீர் போத்தல்களும் பிரத்தியேகமாக பயன்படுத்த வேண்டும். ஒட்டுமொத்தத்தில் சகலவிதமான பாதுகாப்பு முறைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்.  

நான் இலங்கை இராணுவத்தில் பொறியியல் மற்றும் இலத்திரனியல் படைப் பிரிவுக்காக விளையாடி வருகிறேன். இலங்கையில் இருந்து அடிக்கடி என்னை தொடர்பு கொண்டு இங்குள்ள நிலைமைகள் குறித்து கேட்பார்கள். எனவே இங்கு நிலைமைகள் சீரான பிறகு இலங்கைக்கு மிக விரைவில் வருவதற்கு எதிர்பார்துள்ளேன்” என தெரிவித்தார்

ஜனித சுரத் (கரப்பந்தாட்ட வீரர்)

தாய்லாந்தில் கால்பந்து விளையாட்டுக்கு அடுத்து கரப்பந்தாட்டம் தான் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த நிலையில், அந்த நாட்டின் முதல்நிலை கரப்பந்தாட்டத் தொடரான தாய் லீக்கில் இலங்கை கரப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரான ஜனித சுரத் கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்

கடந்த வருடம் நடைபெற்ற தொடரில் சம்பியன் பட்டம் வென்ற தாய்லாந்து விமானப்படை அணிக்காக விளையாடி வரும் அவர், அந்தத் தொடரின் சிறந்த பந்து பரிமாற்றல் வீரருக்கான விருதையும் தட்டிச் சென்றார்.   

இந்த நிலையில், “இவ்வருடத்துக்கான தாய் லீக் கரப்பந்தாட்டத் தொடரில் தி மோல் கரப்பந்தாட்ட அணியில் விளையாடுவதற்கான அழைப்பு கிடைத்தது. இதன்படி, நான் கடந்த பெப்ரவரி மாதம் முதல் இந்த அணிக்காக விளையாடி வருகிறேன்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் விளை.துறை ஊடகவியாலளர்கள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு……..

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் எமது அணியானது சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவாகி அதில் வெற்றியீட்டி தற்போது கடைசி நான்கு அணிகளில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. இதன்போது தான் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தாய்லாந்தில் பரவத் தொடங்கியது.  

எனினும், இந்தத் தொடருக்காக வருகை தந்த பிரேசில் உட்பட ஏனைய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது நாடுகளுக்குச் சென்று விட்டார்கள். என்னுடன் விளையாடிய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரரும் கடந்த சில தினங்களுக்கு முன் நாடு திரும்பிவிட்டார்

இதன்படி, வெளிநாட்டு வீரர்களில் நான் மட்டும் தான் நாடு திரும்ப முடியாமல் தாய்லாந்தில் தங்கியுள்ளேன். நான் தங்கியுள்ள நகொன் ரதெவ்மா நகரில் கொரோனா வைரஸின் தாக்கம் பெரிதளவில் இல்லை

எனினும், தாய்லாந்தில் அனைத்து நடவடிக்கைகளும் தற்போது முடக்கி வைக்கப்பட்டுள்ளன. நான் தங்கியுள்ள ஹோட்டலில் வழமைபோல பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறேன். இந்த மாத நடுப்பகுதியில் எனது விசா காலம் முடிவடைகிறது. இதனால் மிகப் பெரிய பிரச்சினை ஏற்படாது என நினைக்கிறேன்.

தாய்லாந்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயத்துடன் தொடர்பில் இருந்து வருகிறேன். எனது விளையாட்டுக் கழகம் என்னை சிறந்த முறையில் பார்த்துக் கொள்கின்றது. எனக்கு பாதுகாப்பு கை உறைகள், முகக்கவசம், செனிடைஸர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொடுத்துள்ளார்கள்

இந்தத் தொடரின் எஞ்சிய போட்டிகளை எதிர்வரும் ஜுலை மாதம் நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அதற்குமுன் இலங்கைக்கு வருவதற்கு ஆவலுடன் உள்ளேன். நான் தற்போது பணியாற்றி வருகின்ற இலங்கை துறைமுக அதிகார சபையிடம் மேலதிகமாக விடுமுறை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்

எனினும், இலங்கையின் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் வரை இங்கு தொடர்ந்து தங்கியிருக்க வேண்டி ஏற்படும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். நான் நீர்கொழும்பில் வசித்து வருகிறேன். வீட்டாருடன் தொடர்ந்து பேசி வருகிறேன்” என தெரிவித்தார்.

மாணவர் ஒருவரின் கனவினால் ரக்பி விளையாட்டை ஆரம்பித்துள்ள மடவளை மதீனா

பழைய மாணவர் ஒருவரின் கனவுக்கு……

இமாத் றியால் (றக்பி வீரர்)

“இலங்கையில் அண்மையில் நிறைவுக்கு வந்த கழகங்களுக்கிடையிலான றக்பி தொடரின் பிறகு எனக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பு கிடைத்தது.   

தற்போது டுபாயில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது. இதனால் நான் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளேன். எனது குடும்பத்தார் இலங்கையில் இருக்கிறார்கள். இலங்கையைக் காட்டிலும் இங்குள்ள நிலைமை மிகவும் மோசமாக உள்ளது

குறிப்பாக, எனது தந்தை வியாபார தேவைகளுக்காக அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் சென்று வருவார். எனவே டுபாயில் இருந்தாலும் எப்போதும் வீட்டாரின் நிலைமைகள் குறித்து அடிக்கடி அவதானம் செலுத்தி வருகிறேன்

டுபாயைப் பொறுத்தமட்டில் தேசிய அணியின் பயிற்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் இருந்தவாறே பயிற்சிகளை எடுத்து வருகிறேன். நிறைய நேரங்களை அடுப்பங்கறையில் செலவழித்து வருகிறேன். வீட்டுக்குள் இருந்து தற்போது போதுமாகி விட்டது” என்றார்

>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<