T20 உலகக் கிண்ணத்திற்கான ஸ்கொட்லாந்து வீரர்கள் குழாம் அறிவிப்பு

30

ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் 15 பேர் அடங்கிய ஸ்கொட்லாந்து அணியின் வீரர்கள் குழாம் அந்த நாட்டு கிரிக்கெட் சபை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

U23 மகளிர் தேசிய சுப்பர் லீக் தொடருக்கான அட்டவணை, அணிகள் அறிவிப்பு

இந்த ஆண்டு ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவிருக்கும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான ஸ்கொட்லாந்து அணியில் முன்வரிசைத் துடுப்பாட்டவீரரான மைக்கல் ஜோன்ஸ், வேகப்பந்துவீச்சாளர் ப்ராட் வீல் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

இறுதியாக 2022ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடிய இந்த இரண்டு வீரர்களும் நெதர்லாந்து அணிக்கு எதிராக ஸ்கொட்லாந்து ஆடவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் உள்ளடக்கப்படாத போதிலும் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான அணியில் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை ரிச்சி பெர்ரிங்டன் தலைமையில் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரிலும் வழிநடாத்தப்படவிருக்கும் ஸ்கொட்லாந்து, உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் விதமாக நெதர்லாந்துடன் ஆடவிருக்கும் T20 தொடர் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஸ்கொட்லாந்து அணி, T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு B இல் இடம்பெற்றிருப்பதோடு அவ்வணியின் குழுவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஓமான் மற்றும் நமீபிய அணிகள் காணப்படுகின்றன.

ஸ்கொட்லாந்து T20 உலகக் கிண்ண குழாம்

ரிச்சி பெர்ரிங்டன் (தலைவர்), மெதிவ் க்ரோஸ், ப்ரட் கர்ரீ, கிறிஸ் கீரிவ்ஸ், ஒய்ல் ஹெய்ர்ஸ், ஜேக் ஜார்விஸ், மைக்கல் ஜோன்ஸ், மைக்கல் லீஸ்க், ப்ரன்டன் மெக்குல்லேன், ஜோர்ஜ் முன்ஸி, சபீயான் சரீப், கிறிஸ் சோலே, சார்லி டீயர், மார்க் வாட், ப்ராட் வீல்

 >> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<