வெற்றிக்காக இறுதிவரை போராடிய அக்குரனை அஸ்ஹர் கல்லூரி

U19 Schools Cricket Tournament 2022/23

53
U19 Schools Cricket Tournament 2022-23

இலங்கையின் 19 வயதின் கீழ் டிவிஷன் – III பாடசாலை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற போட்டியில் அக்குரனை அஸ்ஹர் கல்லூரியை வீழ்த்தி, நுகேவெல மத்தியக் கல்லூரி அணி வெற்றிபெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நுகேவெல மத்தியக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை,  அக்குரனை அஸ்ஹர் கல்லூரிக்கு வழங்கியது.

>> மோசமான பந்துவீச்சால் வீழ்ந்த ஸ்கந்தவரோதயா, கொழும்பு இந்து அணிகள்!

அக்குரனை அஸ்ஹர் அணியின் துடுப்பாட்டத்தில் மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர் இமாத் அஹமட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதுடன், 87 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அவருடன் மொஹமட் அக்மால் 54 ஓட்டங்களையும், ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மொஹமட் இமாஸ் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொள்ள அஸ்ஹர் கல்லூரி 48 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஜனிது நந்தனதிஸ்ஸ மற்றும் சமுதித்த பொல்கொட்டுவ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நுகேவெல மத்தியக் கல்லூரி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜனிது நந்தனதிஸ்ஸ 51 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, அமிது டில்ஷார அரைச்சதம் கடந்து துடுப்பெடுத்தாடினார்.

மிகச்சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடி நுகேவெல மத்தியக் கல்லூரி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற இவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை குவித்தார். இவரின் இந்த துடுப்பாட்டத்தின் உதவியுடன் 46.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து நுகேவெல மத்தியக் கல்லூரி அணி வெற்றியிலக்கை அடைந்தது. பந்துவீச்சில் மொஹமட் இமாஷ் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தார்.

  • அக்குரனை அஸ்ஹர் கல்லூரி – 249/8 (48), இமாத் அஹமட் 87, மொஹமட் அக்மால் 54, மொஹமட் இமாஸ் 45, சமுதித்த பொல்கொட்டுவ 24/2, ஜனிது நந்தனதிஸ்ஸ 51/2
  • நுகேவெல மத்தியக் கல்லூரி – 251/7 (46.4), அமிது டில்ஷார 125, ஜனிது நந்தனதிஸ்ஸ 51, மொஹமட் இமாஷ் 30/1
  • முடிவு – நுகேவெல மத்தியக் கல்லூரி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<