பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவராக தமீம் இக்பால் நியமனம்!

Bangladesh Cricket

218
Bangladesh Cricket

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் (BCB) புதிய தலைவராக தமீம் இக்பால் நிமிக்கப்பட்டுள்ளார்.

டாக்காவில் நேற்று (8) நடைபெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவருக்கான தேர்தலில் போட்டியாளர்களின்றி ஏகமனதாக தமீம் இக்பால் தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

>>மகளிர் வீராங்கனைகளைச் சந்தித்த இலங்கை கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழு<<

அதன்படி எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவராக தமீம் இக்பால் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான தமீம் இக்பால் 70 டெஸ்ட், 243 ஒருநாள் மற்றும் 78 T20I போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 15,000 இற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளார்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<