கொரோனாவுக்கு இரையான உலகக் கால்பந்து சம்பியன்

79

கடந்த 1966 பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்றவரும் இரண்டு லீக் பட்டங்களை வென்ற இங்கிலாந்து லீட்ஸ் யுனைடட் கழக வீரருமான நோர்மன் ஹன்டர் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி காலமானார்.  

உலகையே ஸ்தம்பிக்கச் செய்திருக்கும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி ஒரு வாரத்திற்குள் உயிரிழக்கும்போது அவரது வயது 76 ஆகும். தமது கால்பந்து வாழ்வில் அதிக காலம் ஆடிய லீட்ஸ் யுனைடட் கழகம் அவரது மரணம் பற்றி ஆரம்பத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.  

யுனைடட் அணியில் வாய்ப்புக் கிடைக்காமல் வெளியேறிய போல் பொக்பா

மன்செஸ்டர் யுனைடட் கழகத்தை விட்டு 2012 ஆம் …..அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டது தொடர்பில் தெரிந்த விரைவில் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். சுகாதார பணியாளர்களின் கடும் முயற்சியுடன் அவர் அந்த நோயில் இருந்து குணமடைய கடுமையாக போராடியபோதும், அவர் அந்தப் போராட்டத்தில் தோல்வி அடைந்ததை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  

எமது லீட்ஸ் யுனைடட் குடும்பத்திற்கு அவரது இழப்பு பெரும் குறையாகும். எனினும் அவர் எமது கால்பந்து கழகத்திற்காக செய்த பணிகள் எப்போது நிரந்தரமான ஒன்று. நோர்மனின் குடும்பத்தினருக்கு, அதேபோன்று அவருக்கு நெருங்கியவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் எமது கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்தக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டது

சிறு வயது தொடக்கம் ‘centre-back’ வீரராக லீட்ஸ் இளையோர் அணியில் விளையாடிய நோர்மன் 1962 ஆம் ஆண்டு அந்தக் கழகத்தின் பிரதான அணியில் இடம்பெற்றார். அப்போது தனது 19 வயதில் அவருக்கு தமது தொழில்முறை கால்பந்து வாழ்வை ஆரம்பிக்க வாய்ப்புக் கிடைத்தது.    

அவர் தமது முதல் போட்டியை ஆரம்பிக்கும்போது லீட்ஸ் கழகம் இங்கிலாந்து கழகங்களுக்கு இடையிலான லீக் தொடரில் இரண்டாம் நிலை கழகமாக இருந்து 1964 ஆம் ஆண்டு அதில் வெற்றி பெற்று முதல் நிலை கழகமாக உயர்வு பெற்றது. அதன் தலைமை பயிற்சியாளராக டொனால்ட் ரெவி இருந்தார். இந்தப் பின்னணியில் லீட்ஸ் கழகம் பல சம்பியன் பட்டங்களையும் கிண்ணங்களையும் வெல்வதில் நோர்மன் பக்கபலமாக இருந்தார்.  

போட்டி நெரிசல்: ஐந்து பதில் வீரர்களை பயன்படுத்த பிஃபா பரிந்துரை

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னரான அதிக நெரிசல் ….

இதில் இங்கிலாந்து கால்பந்து லீக்கின் முதல் நிலைக்கு (தற்போதைய ப்ரீமியர் லீக் தொடர்) உயர்வு பெற்ற பின் நடைபெற்ற முதலாவது தொடரான 1964-65 பருவத்திலேயே லீட்ஸ் கழகம் அதன் சம்பியன் பட்டம் மற்றும் எப்.. கிண்ணத்தை வெல்வதை மயிரிழையில் தவறவிட்டது.  

குறிப்பாக எப்.. கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் லிவர்பூல் அணியிடம் தோல்வி அடைந்த லீட்ஸ் யுனைடட், லீக் தொடரில் மன்செஸ்டர் யுனைடட் அணியுடன் முதலிடத்தில் புள்ளிகளை சமன் செய்தபோதும் கோல் அடிப்படையில் பட்டத்தை தவறவிட்டது. எனினும் இந்தத் தொடர்களில் நோர்மன் வெளிப்படுத்திய திறமை அனைவரினதும் அவதானத்தை செலுத்தியது.     

இதன்போது அவர் சேர் ஜக் கால்டனுடன் இணைந்து ஒரு தசாப்தத்திற்கு மேலாக ‘centre-back’ நிலையில் அபார திறமையை வெளிப்படுத்தினார். ஒரு பின்கள வீரராக வெற்றிகரமாக செயற்பட்ட நோர்மன் எதிரணி வீரர்களை முறியடிப்பதில் காட்டிய தேர்ச்சியால் அவருக்கு ‘Bites Yer Legs’ என்ற புனைப்பெயரும் சூட்டப்பட்டது.  

1960களின் கடைசி மற்றும் 1970களின் நடுப்பகுதி வரையான காலத்தில் இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கழகமாக உருவெடுத்த லீட்ஸ் கழகத்தில் நோர்மனும் இன்றி அமையாத ஒரு வீரராக மாறினார். கால்பந்து உலகில் நிகரற்ற தற்காப்பு வீரராகவும் அவர் புகழ் பெற்றார். இதன்படி லீட்ஸ் கழகம் 1968-69 மற்றும் 1973-74 தொடர்களில் லீக் பட்டத்தை வென்றதோடு அதற்கு நோர்மனின் திறமை முக்கிய பங்கு வகித்தது.  

லீட்ஸ் கழகம் இங்கிலாந்துக்கு அப்பால் ஐரோப்பாவின் பலம்மிக்க கழகமாக மாறியதோடு 1973 ஐரோப்பிய கிண்ணம், வின்னர்ஸ் கிண்ணம் போன்று 1975 ஐரோப்பிய கிண்ணத்திலும் (தற்போதைய ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்) இறுதிப் போட்டி வரை முன்னேறியது. எவ்வாறாயினும் 1975 ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டியில் நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிட்ட சர்ச்சைகள் காரணமாக லீட்ஸ் கழகத்திற்கு ஐரோப்பிய போட்டிகளில் இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தப் போட்டிகளில் நோர்மன் ஓர் அரணாக இருந்து எதிரணிக்கு கோல்கள் விட்டுக் கொடுக்காமல் காத்தார்.

பதினான்கு ஆண்டுகள் லீட்ஸ் கழகத்திற்காக விளையாடிய நோர்மன் அந்தக் கழகத்திற்காக 726 போட்டிகளில் விளையாடியுள்ளார். லீட்ஸ் கழகத்தின் பொற்காலம் என்று அழைக்கப்படும் காலப்பகுதியில் நோர்மன் அணியின் இன்றி அமையாத வீரராக இருந்துள்ளார்.   

1973-74 பருவத்தில் நோர்மன் வரலாற்றில் முதல் வீரராக ஆண்டின் சிறந்த PFA கால்பந்து வீரருக்கான விருதை வென்றார். இது அந்தக் காலத்தில் அவர் உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. முன்னர் குறிப்பிட்டதை தவிர்த்து அவர் லீட்ஸ் கழகத்திற்காக 1972 எப்.. கிண்ணத்தையும் வென்று கொடுத்ததோடு இரண்டு முறை அந்தத் தொடரில் இறுதிப் போட்டிவரை முன்னேறவும் உதவியுள்ளார்.  

அதேபோன்று, நோர்மன் 1968 PFA பட்டம் (தற்போது Carabao Cup), 1969 எப்.. சரிட்டி சீல்ட் (தற்போது எப்.. கம்யூனிட்டி சீல்ட்) தொடர் மற்றும் 1974 அதன் இரண்டாம் இடம் மற்றும் Inter-Cities Fairs Cup தொடரை இரண்டு முறை லீட்ஸ் அணிக்காக வென்று கொடுத்திருப்பதோடு தனிப்பட்ட முறையிலும் அவர் பல விருதுகளை வென்றுள்ளார்

சீனாவில் நிர்மானிப்படும் தாமரைப் பூ வடிவிலான கால்பந்து அரங்கு

சீனாவில் கொரோனாவின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் ….

தொடர்ந்து 1976 ஆம் ஆண்டு 33 வயதான நோர்மன் 40,000 பௌண்ட் தொகைக்கு பிரிஸ்டல் சிட்டி கழகத்தில் இணைந்ததோடு  பின்னர் தனது கால்பந்து வாழ்வின் இறுதிக் காலங்களில் பெர்ன்ஸ்லி அணிக்காக ஆடினார். 1982 ஆம் ஆண்டில் அவர் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.  

இதேவேளை இங்கிலாந்து தேசிய அணிக்காக அவர் 29 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 1966 பிஃபா உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து குழாத்திலும் நோர்மன் இடம் பெற்றிருந்தார். எவ்வாறாயினும் அந்த உலகக் கிண்ணத்தில் அவருக்கு எந்த ஒரு போட்டியிலும் ஆடக் கிடைக்காததால் அப்போது இருந்த விதிகளின்படி வெற்றியாளருக்கான பதக்கம் வழங்கப்படவில்லை.  

அப்போது 23 வயதுடைய இளம் வீரராக இருந்த நோர்மனுக்கு சர் ஜக் கால்டன் மற்றும் பொபி மூர் இருவரையும் விஞ்சி அணியின் பின்களத்தில் இடம்பெற முடியாமல் போனது

எவ்வாறாயினும் 2007 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விதி மாற்றங்கள் காரணமாக 1966 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து குழாத்தில் இடம்பெற்றதற்காக 41 ஆண்டுகளின் பின் நோர்மனுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.  

1970 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியிலும் நோர்மன் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றதோடு அவரது தவறு ஒன்றினால் 1974 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியை இங்கிலாந்து அணி இழந்ததைத் தொடர்ந்து சர்வதேச கால்பந்து போட்டிகளுக்கு விடைகொடுத்தார் நோர்மன்.

1982ஆம் ஆண்டு கால்பந்துக்கு முழுமையாக விடைகொடுத்த நோர்மன் பர்ன்ஸ்லி மற்றும் ரொதர்ஹாம் யுனைடட் கழகங்களுக்கு பயிற்சியாளராக செயற்பட்டபோதும் அதில் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை

லீட்ஸ் யுனைடட் கழகத்தின் போட்டிகளை காண்பது, வீரர்கள், அதிகாரிகள் மற்றும் ரசிகர்களுடன் அலவலாவுவதாகவே அவரது இறுதி நாட்கள் சென்றன. குறிப்பாக லீட்ஸ் கழகத்தைச் சேர்ந்த அனைவரும் அவரை அன்புடன் நடத்தி வந்தார்கள்.   

மறுபுறம் நோர்மனும் லீட்ஸ் கழகத்தின் மீது அதிக பற்று வைத்திருந்ததோடு லீட்ஸ் கழகம் மீண்டும் ப்ரீமியர் லீக் போட்டிகளில் ஆடுவதை பார்ப்பது தமது கனவு என்று அண்மையில் கூறியிருந்தார்.

2003-04 தொடரில் இரண்டாவம் நிலைக்கு பின்தள்ளப்பட்ட பின் லீட்ஸ் கழகம் இதுவரை ப்ரீமியர் லீக் தொடருக்கு தகுதி பெறவில்லை. எவ்வாறாயினும் இம்முறை தொடரில் இரண்டாம் நிலையில் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் அந்த அணிக்கு மீண்டும் ப்ரீமியர் லீக் தொடருக்கு முன்னேற அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் அதனை பார்ப்பதற்கு நோர்மன் இப்போது எம்மத்தியில் இல்லை

நெய்மாருடன் இணைவது ஆபத்தினை ஏற்படுத்தலாம்

பிரான்ஸின் முன்னாள் கால்பந்து வீரரான இமானுவேல் பெடிட், தனது நாட்டின் இளம் கால்பந்து வீரரான ……

அவர் லீட்ஸ் கழகத்திற்காக செய்த சேவையை பாராட்டி அந்தக் கழகத்தின் எல்லன் ரோட் மைதானத்தின் வலது பக்க அரங்கிற்கு நோர்மனின் பெயரை சூட்ட எதிர்பார்த்திருப்பதாக அந்தக் கழகத்தின் உரிமையாளர் அன்ட்ரீ ரட்ரிசானி கூறியிருந்தார்.

நோர்மன் தனது வாழ்நாள் முழுவதும் எமது கால்பந்து கழகத்திற்காக செய்த பணிகள் மற்றும் அர்ப்பணிப்புகளை பாராட்டி அவரது பெயரை வலது பக்க பார்வையாளர் அரங்கிற்கு சூட்ட நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். நோர்மன் மீது எமது கால்பந்து கழகத்துடன் தொடர்புடைய அனைவரும் அன்பு செலுத்தினார்கள். இந்த நேரத்தில் அவர் எம்மை விட்டுச் சென்றிருக்கும் தருணத்தில் அவருக்கு கிடைக்க வேண்டிய கௌரவத்தை எம்மால் வழங்க முடியும் என்று நாம் நினைக்கிறோம். எனினும், மீண்டும் இங்கிலாந்தில் கால்பந்து போட்டிகள் ஆரம்பிக்கும்போது கால்பந்து ரசிகர்களுக்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வலது பக்க அரங்கு அவரது பெயரில் இருக்கும்.”   

இது அவருக்கு வழங்குகின்ற உச்ச கௌரவமாக இருக்கும் என்பதோடு அவர் தற்போது இந்த உலகை விட்டுச் சென்றபோதும் லீட்ஸ் அணியில் 06 ஆம் இலக்க ஜெர்சியை அணிந்து 14 ஆண்டுகள் அபாயகரமாக ‘tackle’ களை செய்து எதிரணி விரர்களை தடுமாறச் செய்த அவரது ஆட்டம் கால்பந்து வரலாற்றில் எப்போதும் நிலைத்திருக்கும்.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<