கொரோனா தொடர்ந்தால் டோக்கியோ ஒலிம்பிக் இரத்தாகும்

68

எதிர்வரும் 2021ஆம் ஆண்டுக்குள் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இரத்து செய்ய வாய்ப்பு உள்ளதாக டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதுடன், சர்வதேச விளையாட்டு போட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் இரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் இருக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதத்தில் என அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ……….

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ஆம் திகதி முதல் ஆகஸ்ட்  9ஆம் திகதி வரை நடைபெற இருந்தது

எனினும், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அது  ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு (2021) கோடை காலத்திற்கு முன்பாக நடைபெற இருந்த ஒலிம்பிக் விளையாட்டு விழா அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23ஆம் திகதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது

ஒலிம்பிக் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ள நிலையில், தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் குழு தலைவர் யோஷிரோ மோரி அளித்துள்ள பேட்டியில்,

“முன்னதாக போர் காரணங்களால் மட்டுமே ஒலிம்பிக் விளையாட்டு விழா இரத்தாகியுள்ளன. தற்போது கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போர் புரிந்துக்கொண்டிருக்கிறோம்

டோக்கியோ ஒலிம்பிக் குழுவில் வேலை செய்த ஊழியருக்கும் கொரோனா

கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள………..

2021-க்குள் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால், அதன் பிறகு 2022-க்கு ஒலிம்பிக் விளையாட்டு விழா ஒத்திவைக்கப்படாது. அப்படி நடந்தால் இரத்து செய்ய வாய்ப்பு உள்ளது” என்றார்

கோபே பல்கலைக்கழக பேராசிரியர் கென்டாரோ இவாடா கருத்து கூறுகையில், ஒலிம்பிக்கில் உலகம் முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள். இந்த கொரோனா வெடிப்பு மீண்டும் தொடர்ந்தால் ஆபத்து அதிகமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.  

இதனிடையே, கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றால், அடுத்தாண்டு ஒலிம்பிக்கை நடத்துவது மிகவும் கடினம் என ஜப்பான் மருத்துவ சங்கத்தின் தலைவர் யோஷிடேக் யோகோகுரா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசு ஒலிம்பிக்கை நடத்துமா என்பது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை ஆனால், கொரோனா பாதிப்பை வைத்துக் கொண்டு ஒலிம்பிக்கை நடத்துவது கடினமானது என்று அவர் கூறியுள்ளார்

நேபாளத்தில் சாதாரண தர பரீட்சை எழுதிய இலங்கை வீராங்கனைகளுக்கு சிறந்த பெறுபேறுகள்

கடந்த 2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் ………

கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகளை ஜப்பான் அரசு மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் யோகோகுரா கேட்டுக் கொண்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்

மருத்துவமனைகளில் கொரோனா தொற்றை தவிர்க்க பயன்படுத்தப்படும் ஆடைகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் குறைந்து காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்

தற்போது பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் குறித்த மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அவை பரிசோதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு கொரோனாவிற்காக மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை பல்வேறு சோதனைகளை கடந்து, மக்களுக்கு எளிதாக கிடைக்க மேலும் கால தாமதம் ஏற்படும்.  

இதனால் இன்னும் சில மாதங்களாவது கொரோனா பாதிப்பை சர்வதேச அளவில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என தெரிவித்தார்.  

2030 ஆசிய விளையாட்டு விழாவை நடத்த இரண்டு அரபு நாடுகள் போட்டி

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழாவை……….

இதேவேளை, ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இதற்கு மேலும் தாமதப்படுவது என்பது முடியாத காரியம் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பாச் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார்.  

அத்துடன் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு பல மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸை 2021க்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாமல் போனால் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவது கடினம் என ஜப்பான் பிரதமர் ஷினஷோ அபே நேற்று (29) அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.  

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானிலும் ஊரடங்கு அமுல் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 13,895 பேர் கொரோனாவினால் இதுவரை பாதிக்கப்பட்டு, 413 பேர் உயிரிழந்துள்ளனர்

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<