2ஆவது டெஸ்ட்டை பார்வையிட இலவச அனுமதி

Bangladesh Tour of Sri Lanka 2025

85
Bangladesh Tour of Sri Lanka 2025

பங்களாதே{க்கு எதிராக கொழும்பு SSC மைதானத்தில் நாளை (25) ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டியை இலவசமாக பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஐசிசி இன் 2025-27 பருவகாலத்துக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் காலியில் நடைபெற்ற முதல் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையில் கொழும்பு SSC மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை ரசிகர்கள் டிக்கெட்டின்றி இலவசமாக மைதானத்திற்குச் சென்று பார்வையிட முடியும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, ரசிகர்கள் 25ஆம் திகதி புதன்கிழமை காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் இப்போட்டியை இலவசமாக கண்டுகளிக்க, மைதானத்தின் உள்ள 3 மற்றும் 4 ஆம் இலக்க நுழைவாயில்கள் வழியாக உள்ளே வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<