Home Tamil சாதனை வெற்றியுடன் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி

சாதனை வெற்றியுடன் பங்களாதேஷை வீழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி

Asia Cup 2023

919

ஆசியக் கிண்ணத் தொடரில் சுபர் 4 சுற்றுக்காக இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடிய போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி 13 வெற்றிகளுடன் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த முதல் ஆசிய அணியாகவும் புதிய வரலாறு படைத்திருக்கின்றது.

>>பங்களாதேஷூடன் சுபர் 4 சுற்றில் மீண்டும் மோதும் இலங்கை கிரிக்கெட் அணி

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் முன்னதாக ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் சகீப் அல் ஹசன் போட்டியில் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானுடன் விளையாடிய அதே குழாத்தினை களமிறக்க, பங்களாதேஷ் அணி அபிப் ஹொசைனுக்கு பதிலாக நசும் அஹமட்டிற்கு வாய்ப்பளித்திருந்தது.

இலங்கை XI

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தனன்ஞய டி சில்வா, தசுன் ஷானக்க (தலைவர்), துனித் வெல்லாலகே, மகீஷ் தீக்ஷன, மதீஷ பதிரன, கசுன் ராஜித

பங்களாதேஷ் XI

மொஹமட் நயீம், லிடன் தாஸ், தௌகீத் ரிதோய், சகீப் அல் ஹசன் (தலைவர்), முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹஸன், சமிம் ஹொசைன், தஸ்கின் அஹ்மட், ஹசன் மஹ்மூட், நசும் அஹ்மட்

நாணய சுழற்சிக்கு அமைய பின்னர் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இலங்கை அணி சிறந்த ஆரம்பம் ஒன்றை பெற்ற சந்தர்ப்பத்தில் ஆரம்பவீரர்களில் ஒருவரான திமுத் கருணாரட்ன தனது விக்கெட்டினை 18 ஓட்டங்களுடன் பறிகொடுத்தார். திமுத் கருணாரட்னவின் பின்னர் இலங்கை அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக குசல் மெண்டிஸ் பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்ததோடு ஆசியக் கிண்ணத் தொடரில் அடுத்தடுத்த அரைச்சதங்களைப் பதிவு செய்தார்.

>>Photos – Sri Lanka vs Bangladesh – Super Four | Asia Cup 2023<<

தொடர்ந்து அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குசல் மெண்டிஸ் இலங்கையின் இரண்டாவது வீரராக சொரிபுல் இஸ்லாமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்கும் போது 73 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை எடுத்திருந்தார். குசல் மெண்டிஸை அடுத்து பெதும் நிஸ்ஸங்கவின் விக்கெட் பறிபோனது. சொரிபுல் இஸ்லாமிடம் LBW முறையில் விக்கெட்டினைப் பறிகொடுத்த பெதும் நிஸ்ஸங்க 40 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதன் பின்னர் புதிய வீரர்களாக களம் நுழைந்தவர்களில் சரித் அசலன்க (10), தனன்ஞய டி சில்வா (06) ஆகியோர் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர். இதனால் ஒரு கட்டத்தில் இலங்கை 164 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. எனினும் களத்திற்கு வந்த அணித்தலைவர் தசுன் ஷானக்க மற்றும் சதீர சமரவிக்ரம ஜோடி பொறுப்புடன் ஆடியதோடு இலங்கை அணியின் ஆறாம் விக்கெட் இணைப்பாட்டமாக 60 ஓட்டங்களையும் பகிர்ந்தது. பின்னர் இலங்கை அணியின் ஆறாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தசுன் ஷானக்க 24 ஓட்டங்களை எடுத்திருந்தார். தொடர்ந்து இந்த இணைப்பாட்டத்திற்குள் அதிரடியாக ஆடத் தொடங்கிய சதீர சமரவிக்ரமவின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை கிரிக்கெட் அணியானது 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 257 ஓட்டங்கள் எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் பெற போராடியிருந்த சதீர சமரவிக்ரம 72 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பௌண்டரிகள் அடங்கலாக 93 ஓட்டங்கள் எடுத்தார்.

>>உலகக்கிண்ண தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் தஸ்கின் அஹ்மட் மற்றும் ஹசன் மஹ்மூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, சொரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது வெற்றி இலக்கிற்காக தவ்ஹீத் ரித்தோயின் துடுப்பாட்டத்தில் இறுதி வரை போராடிய போதிலும் 48.1 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 236 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து போட்டியில் தோல்வியடைந்தது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தவ்ஹீத் ரித்தோய் 97 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 82 ஓட்டங்களை எடுத்திருக்க, அவருடன் பங்களாதேஷ் அணியின் 5ஆம் விக்கெட்டுக்காக 74 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த முஷ்பிகுர் ரஹீம் 29 ஓட்டங்களைப் பெற்று போராட்டம் காண்பித்திருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மகீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சதீர சமரவிக்ரம தெரிவாகினார். இலங்கை அணி ஆசியக் கிண்ண சுபர் 4 சுற்றில் அடுத்ததாக இந்தியாவினை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) எதிர்கொள்கின்றது.

போட்டியின் சுருக்கம்

Result


Sri Lanka
257/9 (50)

Bangladesh
236/10 (48.1)

Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka lbw b Shaiful Islam 40 60 5 0 66.67
Dimuth Karunaratne c Mushfiqur Rahim b Hasan Mahmud 18 17 3 0 105.88
Kusal Mendis c Taskin Ahmed b Shaiful Islam 50 73 6 1 68.49
Sadeera Samarawickrama c Afif Hossain b Taskin Ahmed 93 72 8 2 129.17
Charith Asalanka c Shakib Al Hasan b Taskin Ahmed 10 23 1 0 43.48
Dhananjaya de Silva c Mushfiqur Rahim b Hasan Mahmud 6 16 0 0 37.50
Dasun Shanaka b Hasan Mahmud 24 32 1 0 75.00
Dunith Wellalage run out (Hasan Mahmud) 3 3 0 0 100.00
Mahesh Theekshana c Mushfiqur Rahim b Taskin Ahmed 2 3 0 0 66.67
Kasun Rajitha not out 1 1 0 0 100.00


Extras 10 (b 0 , lb 1 , nb 0, w 9, pen 0)
Total 257/9 (50 Overs, RR: 5.14)
Bowling O M R W Econ
Taskin Ahmed 10 0 62 3 6.20
Shaiful Islam 8 0 48 2 6.00
Hasan Mahmud 9 0 57 3 6.33
Shakib Al Hasan (vc) 10 0 44 0 4.40
Nasum Ahmed 10 1 31 0 3.10
Mehidy Hasan Miraz 3 0 14 0 4.67


Batsmen R B 4s 6s SR
Mohammad Naim Sheikh c Kusal Mendis b Dasun Shanaka 21 46 1 0 45.65
Mehidy Hasan Miraz c Dushan Hemantha b Dasun Shanaka 28 29 4 0 96.55
Liton Das c Kusal Mendis b Dunith Wellalage 15 24 1 0 62.50
Shakib Al Hasan c Kusal Mendis b Matheesha Pathirana 3 7 0 0 42.86
Mushfiqur Rahim c Kasun Rajitha b Dasun Shanaka 29 48 0 0 60.42
Towhid Hridoy lbw b Mahesh Theekshana 82 97 7 1 84.54
Shamim Hossain lbw b Mahesh Theekshana 5 10 0 0 50.00
Nasum Ahmed b Matheesha Pathirana 15 15 0 1 100.00
Taskin Ahmed lbw b Mahesh Theekshana 1 3 0 0 33.33
Shaiful Islam b Matheesha Pathirana 7 7 0 0 100.00
Hasan Mahmud not out 10 7 2 0 142.86


Extras 20 (b 0 , lb 8 , nb 4, w 8, pen 0)
Total 236/10 (48.1 Overs, RR: 4.9)
Bowling O M R W Econ
Kasun Rajitha 7 0 29 0 4.14
Mahesh Theekshana 9 0 69 3 7.67
Dasun Shanaka 9 0 28 3 3.11
Matheesha Pathirana 9.1 1 58 3 6.37
Dunith Wellalage 10 1 26 1 2.60
Dhananjaya de Silva 4 0 18 0 4.50



>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<