பாடசாலை வீராங்கனையால் 1,500 மீற்றரில் புதிய சாதனை

The 98th National Athletics Championship - 2020

326

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் அண்மையில் நிறைவுக்குவந்த 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கனிஷ்ட வீராங்கனையான சானிக்கா லக்ஷானி, இலங்கையின் முன்னணி வீராங்கனைகளுடன் போட்டியிட்டு நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கடற்படை வீராங்கனை கயன்திகா அபேரட்ன (4:17.58) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தேசிய மெய்வல்லுனரில் காலிங்க, நதீஷாவுக்கு இரட்டை தங்கம்: சப்ரினுக்கு பின்னடைவு

இராணுவ வீராங்கனை நிலானி ரத்நாக்க (4:21.28) வெள்ளிப் பதக்கத்தையும் விமானப்படை வீராங்கனை நிமாலி லியனாச்சி (4:28.13) வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர்

எனினும், குறித்த போட்டியை நான்கு நிமிடங்கள் 33.40 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்ட சானிக்கா லக்ஷானி, கனிஷ் பிரிவில் அதிசிறந்த காலத்தைப் பதிவுசெய்தார்

அத்துடன், 1985இல் சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய இன்டர்சிட்டி கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டத்தை நான்கு நிமிடங்கள் 35.70 செக்கன்களில் நிறைவுசெய்த தம்மிகா மொனிகேயின் இலங்கை சாதனையையும் அவர் 35 வருடங்களுக்குப் பிறகு முறியடித்தார்.

கம்பஹா திருச்சிலுவை (Holly Cross) கல்லூரி மாணவியான சானிக்கா, 2019இல் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஏன் வட, கிழக்கு வீரர்கள் இல்லை?

எனினும், 2021இல் நைரோபியில் நடைபெறவுள்ள 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 800 மற்றும் 1500 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பை இரண்டு செக்கன்களால் அவர் தறவிட்டார்

இதில் இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட அவர், போட்டியை 2 நிமிடங்கள் 08.90 செக்கன்களில் நிறைவுசெய்து நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்

எதுஎவ்வாறாயினும், கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கம்பஹா உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் கடந்த காலங்களில் தனிமைப்படுத்தப்பட்டதனால் சானிக்காவுக்கு உரிய முறையில் பயிற்சிகளை முன்னெடுக்க முடியாமல் போனதாகவும், அவரது திறமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவரது பயிற்சியாளர் மதுர பெரேரா தெரிவித்தார்

சண்முகேஸ்வரனின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தரங்க

இதேவேளை, 20 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பிற்காக தகுதிபெறும் நோக்கில் இம்முறை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் பங்குகொண்ட பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி மாணவி செனுரி அனுத்தரா, போட்டியை 14.60 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

அத்துடன், ஹர்ஷனி விஜேசிங்கவினால் 2009இல் நிகழ்த்தப்பட்ட தேசிய கனிஷ் சாதனையை அவர் முறிடியத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<