பஹ்ரைனிடமும் இலங்கைக்கு மோசமான தோல்வி

363
Sri Lanka v Bahrain
Sri Lanka v Bahrain | Group B | 2020 AFC U23 Championship Qualifiers (Photo Credits: Bahrain Football Association)

தற்போது இடம்பெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்ட AFC கிண்ண தகுதிகாண் தொடரின் பஹ்ரைனுக்கு எதிரான போட்டியிலும் இலங்கை இளையோர் கல்பந்து அணி மோசமான தோல்வி ஒன்றை சந்தித்தது. B குழுவுக்காக பஹ்ரைனின், கலீபா விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் போட்டியை நடத்தும் பஹ்ரைன் 9-0 என்று கோல்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.

பலஸ்தீனத்தின் கோல் மழையில் நனைந்த இலங்கை

பஹ்ரைனின், கலீபா விளையாட்டு அரங்கில்…

ஒரு சில நாட்களுக்கு முன் இலங்கை அணி இதே கோல் வித்தியாசத்தில் பலஸ்தீனத்துடனான போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் தனது திறமையை வெளிப்படுத்தும் நோக்கிலேயே இந்தப் போட்டியில் களமிறங்கியது. இரண்டு தினங்களுக்கு முன்னர் சக SAFF (தெற்காசிய கால்பந்து சம்மேளனம்) நாடான பங்களாதேஷ் அணி பஹ்ரைனுடனான போட்டியில் 0-1 என கௌரவமான தோல்வி ஒன்றை சந்தித்திருந்தது. இதே கோல் எண்ணிக்கையிலேயே அந்த அணி பலஸ்தீனத்துடனான போட்டியிலும் தோல்வியை சந்தித்தது.   

இந்நிலையில் சமீர் சமாமின் பயிற்சியின் கீழ் பஹ்ரைன் அணி இலங்கையுடனான போட்டியில் கோல்கள் பெற அவசரம் காட்டியது. குறிப்பாக கோல் வித்தியாசம் இறுதி முடிவில் தீர்மானம் மிக்கது என்பதால் அந்த அணி ஆரம்ப விசில் ஊதப்பட்டது தொடக்கம் மைதானத்தில் இலங்கையின் பகுதியை ஆக்கிரமிக்க ஆரம்பித்தது.

இதனால் 14 ஆவது நிமிடத்திலேயே முஹமட் ஜாசின் மர்ஹுன் முதல் கோலை புகுத்தி பஹ்ரைன் அணியை முன்னிலை பெறச் செய்தார். ஒன்பது நிமிடம் கழித்து முஹமட் நசீம் அல்ஷம்சி பஹ்ரைனின் கோல் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்ததோடு, போட்டியின் 31 ஆவது நிமிடத்திலேயே அந்த அணி 4-0 என முன்னிலை பெற்றது. இதன்போது ஹாஷிம் செயிது இஸா (29) மற்றும் அப்துலசிஸ் காலித் (31) ஆகியோர் பெனால்டி மூலம் கோல் பெற்றனர்.

Photos: Sri Lanka Training Session | 2020 AFC U23 Championship Qualifiers

ThePapare.com | Hiran Chandika | 19/03/2019 Editing and re-using..

பலஸ்தீனத்திற்கு எதிரான போட்டியில் இரண்டு பெனால்டிகளை விட்டுக்கொடுத்த ஜூட் சுமன், செயிது இஸா கோல் பெறுவதற்கு மூன்றாவது பெனால்டியை பெற்றுக்கொடுத்தார். சிவகுமாரன் கிறிஷான்த் எதிரணி வீரரின் ஆடையை இழுத்து இழைத்த தவறால் மற்றைய பெனால்டியை விட்டுக்கொடுத்தார்.  

முதல் பாதி முடியும் தருணத்தில் மஹ்ரூன் தனது இரண்டாவது கோலை பெற்றார்.

முதல் பாதி பஹ்ரைன் 5 – 0 இலங்கை

இரண்டாவது பாதியிலும் பஹ்ரைன் கடும் கோல் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை வீரர்களுக்கு தொடர்ந்து போராட வேண்டி ஏற்பட்டது. எனினும், அஹமட் அப்துல்ரஹ்மான் அல்ஷெரூகி மற்றொரு கோலை புகுத்த இரண்டாவது பாதியின் மூன்றாவது நிமிடத்திலேயே பஹ்ரைன் 6-0 என முன்னிலை பெற்றது.  

74 ஆவது நிமித்தில் பஹ்ரைன் அணிக்கு கிடைத்த மூன்றாவது பெனால்டி உதையை அஹமட் முபாரக் புஹம்மார் கோலாக மாற்றினார். தொடர்ந்து அவர் 80 ஆவது நிமித்தில் மற்றொரு கோலை புகுத்தினார். இந்நிலையில் ஹாஷிம் செயிது இஸா 85 ஆவது நிமிடத்தில் பஹ்ரைனின் கடைசி கோலை புகுத்தினார்.  

>>  காணொளிகளைப் பார்வையிட  <<

2020 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெறவுள்ள 23 வயதுக்கு உட்பட்ட AFC சம்பியன்ஷிப் தொடருக்கு B குழுவில் இருந்து நேரடியாக தகுதி பெறும் அணியை தீர்மானிக்கும் போட்டியாக நாளை (26) பஹ்ரைன் மற்றும் பலஸ்தீன் அணிகள் மோதவுள்ளன. இந்த இரு மேற்காசிய பிராந்திய அணிகளும் இலங்கை மற்றும் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் ஒரே கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே அளவு புள்ளிகளை பெற்ற நிலையில் நாளை மிகவும் தீர்மானம் மிக்க போட்டியில் மோதவுள்ளன.

இதேவேளை, இலங்கை அணி குழு நிலையில் தமது இறுதி மோதலில் பங்களாதேஷ் அணியுடன் நாளை மோதவுள்ளது.

முழு நேரம் பஹ்ரைன் 9 – 0 இலங்கை

கோல் பெற்றவர்கள்

பஹ்ரைன் முஹமட் ஜசிம் மர்ஹுன் 14′, 45+1′, முஹமட் நசீம் அல்ஷம்சி 23′, ஹாஷிம் செயிது இஸா 29′ (பெனால்டி), 85′, அப்துலசிஸ் காலித் 31 (பெனால்டி), அஹமட் அப்துல்ரஹ்மான் அல்ஷரூக்கி 48′, அஹமட் முபாரக் புகம்மார் 74′ (பெனால்டி), 80′

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<