உலகக்கிண்ண தொடருக்கான நடுவர் குழாம் அறிவிப்பு

ICC World Cup 2023

218

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கான நடுவர் குழாத்தை சர்வதேச கிரிக்கெட் வாரியம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

ஐசிசி மொத்தமாக 20 அதிகாரிகளை உலகக் கிண்ணத் தொடருக்காக நியமித்துள்ளதுடன், இதில் 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி மத்தியஸ்தர்கள் இடம்பெற்றுள்ளனர். 

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண குழாம் அறிவிப்பு

இந்தப்பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன மாத்திரம் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தராக இம்முறை இடம்பெறவில்லை. 

அறிவிக்கப்பட்டுள்ள நடுவர் குழாத்தில் கிரிஸ் பிரவுன், குமார் தர்மசேன, மரைஸ் எரஸ்மஸ், கிரிஸ் கெப்பனி, மைக்கல் கோக், அட்ரைன் ஹொல்ட்ஸ்டொக், ரிச்சர்ட் இல்லிங்வர்த், ரிச்சர்ட் கெட்ல்பிரொக், நிதின் மேனன், அஷான் ரஷா, போல் ரெய்பல், ஷார்புதோல்லா இப்னே ஷைட், ரொட் டக்கர், அலெக்ஸ் வார்ப், ஜோயல் வில்சன் மற்றும் போல் வில்சன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். 

போட்டி மத்தியஸ்தர்களாக ஜெவ் கிரவ், எண்டி பைகிரொப்ட், ரிச்சி ரிச்சட்சன் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஜவகல் ஸ்ரீநாத் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஒக்டோபர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டிக்கான போட்டி மத்தியஸ்தராக செயற்படவுள்ளதுடன், கள நடுவர்களாக நிதின் மேனன் மற்றும் குமார் தர்மசேன ஆகியோர் செயற்படவுள்ளனர். இதில் மூன்றாவது நடுவராக போல் வில்சன் செயற்படவுள்ளதுடன், ஷார்புதோல்லா நான்காவது நடுவராக செயற்படவுள்ளார். 

அறிவிக்கப்பட்டுள்ள இந்த போட்டி அதிகாரிகள் குழாம் லீக் போட்டிகளில் மாத்திரம் பணியாற்றவுள்ளதுடன், அரையிறுதிப் போட்டிகளுக்கான நடுவர்கள் லீக் போட்டிகள் நிறைவில் அறிவிக்கப்படுவர் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது. 

>> மேலும்கிரிக்கெட்செய்திகளைப்படிக்க <<