மொர்தசாவுக்கு எதிராக சகிப் அல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டு

49
Getty Image
 

இம்முறை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மஷ்ரபி மொர்தசா பொறுப்புடன் விளையாடாத காரணத்தால் தான் தமது அணிக்கு தோல்வியைத் தழுவ நேரிட்டதாக பங்களாதேஷ் அணியின் சிரேஷ்ட வீரரான சகிப் அல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

T20 சர்வதேச போட்டிகளில் மாலிங்க புதிய உலக சாதனை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையில் இன்று (1) கண்டி பல்லேகல சர்வதேச…

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன் 9 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுக்களுடன் 606 ஓட்டங்களைக் குவித்தார்

அந்த தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் 3ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார். பங்களாதேஷ் அணிக்காக தனியொரு வீரராகப் போராடி முக்கியமான போட்டிகளில் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தார்.  

இந்த நிலையில், இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆப்கானிஸ்தான் அணியுடனான லீக் போட்டியில் சகிப் அல் ஹசன் விளையாடிய விதம் குறித்து மஹ்மதுல்லாஹ்வை மேற்கோள் காட்டி வெளியாகியிருந்த செய்திக்கு சகிப் அல் ஹசன் அந்நாட்டின் பெங்காலி நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில்

இந்த விடயங்கள் ஒரு அணியை மனரீதியாக பாதிக்கச் செய்கின்றன. அணிக்குள் இடம்பெறுகின்ற விவாதங்கள் வெளியே விவாதிக்கப்படும்போது அது அணியின் செயல்திறனை பாதிக்கிறது என்று அவர் கூறினார்

தென்னாபிரிக்க தொடருக்கான டி20 குழாமிலும் டோனிக்கு இடமில்லை

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள மூன்று…

முதலில், நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. நான் அதைச் சொன்னாலும், அதைக் கசிய விட்டவர் யார்? ஒருவேளை, அவர்கள் அணியின் முன்னேற்றத்தைக் காண விரும்பவில்லை. யாராவது காயமடைந்தால், நீங்கள் ஒருவரின் இடத்தை எடுத்து அவர் விளையாடியிருந்தால் அது வித்தியாசமாக இருந்திருக்கும். இது வீரர்களின் செயல்திறனை குறைக்கிறது.  

இந்த விடயங்கள் நடக்கும்போது, அது உண்மையில் பிரச்சினையை ஏற்படுத்தும். இந்த பிரச்சினைகள் காரணமாக எங்கள் அணியால் இம்முறை உலகக் கிண்ணத்தில் எதுவும் செய்ய முடியாமல் போனது என்பதை நான் புரிந்துகொண்டேன்

இதேவேளை, இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணி 8ஆவது இடத்தை நோக்கி பின்னடைவை சந்திப்பதற்கு அணித் தலைவர் ஷ்ரபியின் மோசமான போர்ம் தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டொன்றை சகிப் அல் ஹசன் முன்வைத்துள்ளார்

அணியின் தேவைகருதி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன் – குசல் மெண்டிஸ்

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நான்காவது இலக்கத்தில் விளையாடி வந்த..

இதுகுறித்து சகிப் அல் ஹசன் மேலும் கூறுகையில், “இம்முறை உலகக் கிண்ணத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பதை நான் உறுதியாக நம்பினேன்.

உலகக் கிண்ணத்தில் நாங்கள் நினைத்த விடயங்கள் எதுவும் நடக்கவில்லை. ஒரு வீரர் சிறப்பாக விளையாடாதபோது, அணி எப்படி விளையாடியது என்பதை காட்டிலும், தன்னுடைய செயல்பாடு எப்படி இருந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

இது உலகக் கிண்ணத்தின்போது எங்களுக்கு பிரச்சினையாகியது. இதே விடயம் ஷ்ரபி மொர்தசாவுக்கு நடந்தது. அணித் தலைவர் சிறப்பாக விளையாடாத போது, அவருக்கும் பிரச்சினை. அணிக்கும் பிரச்சினை. எனவே அணித் தலைவரும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<