வெற்றிப் பாதைக்கு திரும்பிய மன்செஸ்டர் யுனைடெட்

184

இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது வாரத்தின் முக்கிய இரண்டு போட்டிகள் சனிக்கிழமை (6) நடைபெற்றன. இதில் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி இன்றி இருந்து வந்த மன்செஸ்டர் யுனைடெட் தனது வெற்றிப் பாதைக்கு திரும்பியதோடு காடிப் சிட்டியுடனான போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் வெற்றியீட்டியது.

மன்செஸ்டர் யுனைடெட் எதிர் நியூகாசில் யுனைடெட்

மன்செஸ்டர் யுனைடெட் அணி கடைசி நேரங்களில் திருப்பிய பதில் கோல்கள் மூலம் நியூகாசில் அணியை 3-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஓல்ட் டிரபர்டில் நடைபெற்ற இந்தப் போட்டியின் 90ஆவது நிமிடத்தில் அலெக்சிஸ் சான்செஸ் கோல் புகுத்தியதன் மூலம் யுனைடெட் அணி வெற்றிபெற்றதோடு, இது இந்த பருவத்தில் ஏமாற்றம் தந்துவந்த சான்செஸுக்கு திருப்பமாக அமைந்ததோடு அந்த அணியின் முகாமையாளர் ஜோஸ் மொரின்ஹோவுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது.

ThePapare.com: பிரீமியர் லீக் 7ஆவது வாரத்தின் சிறந்த வீரர் யார்?

ரசிகர்களாகிய உங்களுக்கு வாரத்தின் சிறந்த வீரருக்கு கீழே வாக்களிக்க முடியும்! (வாக்கு முடிவுத் திகதி ஒக்டோபர் 05) நடைபெற்று……

அனைத்து போட்டித் தொடர்களிலும் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி இன்றி நெருக்கடியில் சிக்கியிருந்த நேரத்திலேயே யுனைடெட் அணி நியூகாசிலை எதிர்கொண்டது.

எனினும் போட்டி ஆரம்பித்த விரைவிலேயே நியூகாசில் இரட்டை கோல்களை புகுத்தி யுனைடெட்டுக்கு மற்றொரு அதிர்ச்சியை கொடுத்தது. ஏழாவது நிமிடத்திலேயே எதிரணி பாதுகாப்பு அரணை முறியடித்து கெனடி முதல் கோலை பெற்றதோடு மூன்று நிமிடங்கள் கழித்து ஜப்பான் முன்கள வீரர் யொஷினோரி முடோ யுனைடெட் வீரர் ஆஷ்லி யங்கை முறியடித்து வேகமான கோல் ஒன்றை பெற்றார்.       

இதன்படி ஆரம்ப பத்து நிமிடங்களுக்குள் தனது சொந்த மைதானத்தில் யுனைடெட் அணி இரண்டு கோல்களை விட்டுக் கொடுத்தது பிரீமியர் லீக் வரலாற்றில் முதல் முறையாக இருந்தது.   

இந்நிலையில் புது உத்திகளை கையாள ஆரம்பித்த யுனைடெட் அணி பொன்னான வாய்ப்பொன்றை தவறவிட்டது. மார்கஸ் ரஷ்போர்ட் தலையால் முட்டிய பந்து வெளியே சென்றது.

யுனைடெட் அணி பதில் கோல்கள் திருப்பும் முயற்சி கடைசி 20 நிமிடங்களிலேயே வெற்றி தந்தது. 70 ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக வந்த ஜுவான் மாடா பிரீ கிக் மூலம் கோல் ஒன்றை பெற்றதோடு ஆறு நிமிடங்கள் கழித்து அன்தோனி மார்சியல் மற்றொரு கோலை பெற்று சமநிலைக்கு கொண்டுவந்தார்.

பார்சிலோனா, ரியல் மட்ரிட் அணிகளுக்கு சமநிலை முடிவுகள்

இதனைத் தொடர்ந்து மற்றொரு மாற்று வீரராக சான்செஸ் போட்டியின் சாதாரண நேரத்தின் கடைசி நிமிடத்தில் வைத்து யுனைடெட் அணிக்கு வெற்றி கோலை பெற்றுக் கொடுத்தார்.


காடிப் சிட்டி எதிர் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர்

வெம்ப்ளி அரங்கில் நடைபெற்ற போட்டியில் டொட்டன்ஹாம் ஹொட்ஸ்பூர் அணி 1-0 என வெற்றியீட்டியதன் மூலம் காடிப் சிட்டி அணி மேலும் பின்னடைவை சந்தித்து பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

போட்டி ஆரம்பித்து 8ஆவது நிமிடத்திலேயே செயற்படத் தொடங்கிய ஹொட்ஸ்பூர் அதிர்ச்சி கோல் ஒன்றை பெற்றது. டேவின்சன் சான்சேஸ் தலையால் முட்டிய பந்து தடுக்கப்பட்டபோதும் அது ஆறு யார்ட் தூரத்தில் இருந்த எரிக் டையரிடம் செல்ல அவர் அதனை கோலாக மாற்றினார். கடந்த 2017 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் டையர் பெறும் முதல் லீக் கோல் இதுவாகும்.

ஹொட்ஸ்பூரின் கோல் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் சொன் ஹியுங்-மின் மற்றும் லூகாஸ் மௌராவின் சிறந்த வாய்ப்புகள் தவறிப்போயின.

சிட்டி, லிவர்பூல், செல்சி ஆதிக்கம்: மன்செஸ்டர் யுனைடெட் தடுமாற்றம்

மறுபுறம் தடுமாற்றம் கண்ட காடிப் சிட்டி இம்முறை பிரீமியர் லீக்கில் முதல் வெற்றியை பெறும் எதிர்பார்ப்புக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அந்த அணியின் ஜோ ரோல்ஸ் 57ஆவது நிமிடத்தில் சிவப்பு அட்டை பெற்று வெளியேறியதால் அந்த அணி எஞ்சிய பாதியை 10 வீரர்களுடனேயே ஆடியது.   

மறுபுறம் ஹொட்ஸ்பூர் அணி பிரீமியர் லீக்கில் தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பெற்று புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணி முதல் இரண்டு இடங்களில் இருக்கும் மன்செஸ்டர் சிட்டி மற்றும் லிவர்பூல் (19) அணிகளை விடவும் ஒரு புள்ளி மாத்திரம் குறைவாக உள்ளது.   

>> மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க <<