கனடா குளோபல் டி20 லீக்கில் ஆறு இலங்கை வீரர்கள்

2110

கனடா கிரிக்கெட் சபையினால் முதற்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குளோபல் டி20 பிரீமியர் லீக் தொடரில், இலங்கையைச் சேர்ந்த 6 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் கனடா கிரிக்கெட்  அணிக்காக விளையாடி வருகின்ற இலங்கை வம்சாவளி வீரர்கள் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, லசித் மாலிங்க, திசர பெரேரா, தசுன் சானக்க, இசுரு உதான ஆகியோர் உட்பட இலங்கை வம்சாவளி வீரர்களான ருவிந்து குணசேகர, மற்றும் ஸ்ரீமந்த விஜேரத்ன ஆகிய வீரர்களும் இம்முறை குளோபல் டி-20 பிரீமியர் லீக்கில் விளையாடவுள்ளனர்.

கனடா T20 லீக்கில் முன்னணி வீரராக மாலிங்க

ஐ.சி.சி இன் இணை அங்கத்துவ நாடான கனடா கிரிக்கெட் சபையினால் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றுதலுடன் முதற்தடவையாக நடத்தப்படுகின்ற குளோபல் டி-20 பிரீமியர் லீக போட்டிகள் எதிர்வரும் ஜுன் மாதம் 28 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 16ஆம் திகதி வரை வடக்கு டொரொன்டோவில் மேபிள் லீப் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெறவுள்ளன. இம்முறை போட்டித் தொடரில் 22 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளதுடன், அனைத்து போட்டிகளும் அதே மைதானத்திலேயே நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குளோபல் டி-20 தொடரில் கடனாவின் ஐந்து பிரதான நகரங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் ஆறு அணிகளைக் கொண்டதாக அமையவுள்ளது. இதில் எட்மொன்டன் ரோயல்ஸ், மொன்ட்ரியல் டைகர்ஸ், டொரொன்டோ நெஷனல்ஸ், வன்கூவர் நைட்ஸ் மற்றும் வின்னிபேக் ஹவுக்ஸ் ஆகிய அணிகளுடன் ஆறாவது அணியாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பதினொருவர் அணியொன்றும் களமிறங்கவுள்ளது.

இந்நிலையில், 600 கனடா வீரர்கள் மற்றும் 500 வெளிநாட்டு வீரர்கள் பங்கெடுத்திருந்த அங்குரார்ப்பண குளோபல் டி-20 தொடரின் வீரர்களுக்கான ஏலம், நேற்று (03) டொரன்டோவில் இடம்பெற்றது.

16 சுற்றுக்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில் ஒவ்வொரு அணிகளுக்கும் 5 வீரர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து இடம்பெற்ற முதல் சுற்றில் முன்னணி வீரர்களுக்கான தெரிவுகள் நடைபெற்றன.

  • G-T20 official facebook

இதில் ஏற்கனவே அறிவித்ததன்படி, முன்னணி வீரர்களின் பட்டியலில் 10 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இதன்படி, ஸ்டீவ் ஸ்மித், டெரன் சமி (டொரொன்டோ நெஷனல்ஸ்) கிறிஸ் கெயில், அன்ட்ரூ ரஸல் (வன்கூவர் நைட்ஸ்), டுவைன் பிராவோ, டேவிட் மில்லர் (வின்னிபேக் ஹவுக்ஸ்), லசித் மாலிங்க, சுனில் நரைன் (மொன்ட்ரியல் டைகர்ஸ்), சஹீட் அப்ரிடி, கிறிஸ் லின் (எட்மொன்டன் ரோயல்ஸ்) ஆகியோர் இவ்விரு வீரர்கள் வீதம் ஐந்து அணிகளுக்கு உள்வாங்கப்பட்டனர்.

டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியை தக்கவைக்க ஐ.சி.சி. குழு பரிந்துரை

அத்துடன், ஒவ்வொரு அணியிலும் கனடா தேசிய அணியைச் சேர்ந்த 4 வீர்ரகள் இடம்பெற்றுள்ளதுடன், கனடாவின் 23 வயதுக்கு உட்பட்ட வீரரொருவரும் அதில் இடம்பெற்றுள்ளார்.

மாலிங்கவின் அணியில் மூன்று இலங்கை வீரர்கள்

தொடர் உபாதைகள் மற்றும் போதியளவு திறமைகளை வெளிப்படுத்தாமை உள்ளிட்ட காரணங்களால் 2017ஆம் ஆண்டு முதல் இலங்கை அணியிலிருந்தும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, நீண்ட இடைவெளியின் பிறகு வெளிநாட்டு டி-20 போட்டித் தொடரில் விளையாடவுள்ளார்.

சுமார் 10 வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த மாலிங்கவை, அவ்வணி நிர்வாகம் இம்முறை ஐ.பி.எல் தொடரில் இருந்து விடுவித்திருந்ததுடன், பின்னர் அவரை பந்துவீச்சு ஆலோசகராகவே ஒப்பந்தம் செய்யவும் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், அதற்கு முன் நடைபெற்ற உள்ளுர் கழகங்களுக்கிடையிலான டி-20 போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மாறிய மாலிங்க, தனது வழமையான விளையாட்டுக்கு திரும்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, தேசிய அணிக்கு மீண்டும் திரும்புவதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற மாலிங்க, முதற்தடவையாக நடைபெறவுள்ள குளோபல் டி-20 லீக்கில் மொன்ட்ரியல் டைகர்ஸ் அணியின் தலைவராகவும் செயற்படவுள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டொம் மூடி பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ள மொன்ட்ரியல் டைகர்ஸ் அணியில் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களான திசர பெரேரா மற்றும் தசுன் சானக்கவுடன் மித வேகப்பந்துவீச்சாளரான இசுரு உதானவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் இடம்பெறுகின்ற டி-20 போட்டிகளில் விளையாடி வருகின்ற திசர பெரேரா, முதற்தடவையாக குளோபல் டி-20 பிரிமீயர் லீக் தொடரில் விளையாடவுள்ளார்.

அத்துடன், இலங்கை அணியின் மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரராக அண்மைக்காலமாக ஜொலித்துக் கொண்டிருக்கின்ற 27 வயதான தசுன் சானக்கவும் இவ்வணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்;கெட்டில் அறிமுகமான அவர், இதுவரை 24 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டை மறுக்கும் குலதுங்க, லொக்குஹெட்டிகே

இதேநேரம், அண்மைக்காலமாக இலங்கை டி-20 அணிக்காக விளையாடி வருகின்ற இசுரு உதானவும். மாலிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் அவருடன் இணைந்து பந்துவீசவுள்ளார். 2009ஆம் ஆண்டு டி-20 போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இதுவரை 16 போட்டிகளில் 14 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்கூவர் அணியில் இலங்கை வம்சாவளி வீரர்கள்

கனடா தேசிய அணிக்காக விளையாடிய அனுபவமிக்க வீரரான ருவிந்து குணசேகர மற்றும் ஸ்ரீமந்த விஜேரத்ன ஆகிய வீரர்கள் கிறிஸ் கெய்ல் தலைமையிலான வன்கூவர் நைட்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 27 வயதான இடதுகை சுழல் பந்துவீச்சாளரான ருவிந்து குணசேகர, 2008ஆம் ஆண்டு கனடா அணிக்காக அறிமுகத்தைப் பெற்றிருந்ததுடன், இதுவரை 19 ஒரு நாள் மற்றும் 8 டி-20 போட்டிகளில் அவ்வணிக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் கழகங்களுக்கிடையிலான முதல்தரப் போட்டியில் சரசென்ஸ் விளையாட்டுக் கழகத்துக்காகவும் அவர் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதேநேரம், இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணிக்காக விளையாடி, தற்போது கனடாவின் உள்ளுர் முதல்தரப் போட்டிகளிலும், டி-20 போட்டிகளிலும் விளையாடி வருகின்ற 30 வயதான விக்கெட் காப்பாளரான ஸ்ரீமந்த விஜேரத்னவும் வன்கூவர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளுர் கழகங்களுக்கிடையிலான முதல்தர, டி-20 போட்டிகளில் பொலிஸ் விளையாட்டுக் கழகத்துக்காக விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்மித், வோர்னரின் மீள்வருகை

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகிய அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வோர்னர் ஆகியோர் குளோபல் டி-20 போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளனர். இதில் டொரொன்டோ நெஷனல்ஸ் அணியின் தலைவராகவும் ஸ்மித் செயற்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தேர்வாளர்கள் குழாம்

இந்நிலையில், டுவைன் பிராவோ தலைமையிலான வின்னிபேக் ஹவுக்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக டேவிட் வோர்னர் களமிறங்கவுள்ளார்.

இவ்விரு வீரர்கள் தொடர்பிலும் கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், இவர்களது மீள்வருகையானது கிரிக்கெட் உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

குளோபல் டி-20 அணி விபரம்

டொரொன்டோ நெஷனல்ஸ் – ஸ்டீவ் ஸ்மித், டெரன் சமி, கிரென் பொல்லார்ட், கம்ரான் அக்மல், ஹுசைன் தாலத், ருமான் ரைஸ், நிகில் தத்தா, ஜொன்சன் சார்ளஸ், கெஷ்ரிக் வில்லியம்ஸ், நவீத் அஹமட், நஷகத் கான், பர்ஹான் மலிக்,  நிதேஷ் குமார், உஸ்மான் மிர், ரொஹான் முஸ்தபா, மொஹமட் உமைர் கானி

பயிற்றுவிப்பாளர் – பில் சிம்மொன்ஸ்

வன்கூவர் நைட்ஸ் – கிறிஸ் கெயில், அன்ட்ரூ ரஸல், எவின் லுவிஸ், டிச் சௌதி, சத்விக் வோல்டன், பவாத் அஹமட், பாபர் ஹயாத், ஷெல்டன் கோட்ரல், சாத் பின் ஷபர், ருவிந்து குணசேகர, ஸ்ரீமந்த விஜேரத்ன, கமொவ் லெவ்ரொக், ஸ்டீவன் ஜேகொப்ஸ், ஹிரால் பட்டேல், ராசி வெண் டேர் டசன், ஜெரமி ஜோர்டன்

பயிற்றுவிப்பாளர் – டொனவென் மில்லர்

வின்னிபேக் ஹவுக்ஸ் – டுவைன் பிராவோ, டேவிட் மில்லர், டேவிட் வோர்னர், லின்ட்ல் சிம்மென்ஸ், டரென் பிராவோ, பிடெல் எட்வர்ட்ஸ், ரயாத் எம்ரிட், பென் மெக்டேர்மோட், அலி கான், ஹம்சா தாரிக், ஜுனைட் சித்தீக், ரிஸ்வான் சீமா, டியொன் வெப்ஸ்டர், ஹிரான் பட்டேல், மார்க் டியால், கைல் பிலிப்

பயிற்றுவிப்பபாளர் – வக்கார் யூனுஸ்

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹஷான் திலகரத்ன

மொன்ட்ரியல் டைகர்ஸ் – லசித் மாலிங்க, சுனில் நரைன், திசர பெரேரா, மொஹமட் ஹபீஸ், டினேஷ் ராம்தீன், சந்தீப் லமிச்சான்னே, சிகெண்டர் ராசா, தசுன் சானக்க, இசுரு உதான, ஜோர்ஜ் வோர்கர், நஜிபுல்லாஹ் சத்ரான், சிசில் பெர்வெஸ், இப்ராஹிம் கலீல், டிலொன் ஹெய்லிகர், நிகொலஸ் கேர்டன், ரய்யான் பதான்,

பயிற்றுவிப்பாளர் – டொம் மூடி

எட்மொன்டன் ரோயல்ஸ் – சஹீட் அப்ரிடி, கிறிஸ் லின், லுக் ரொங்கி, மொஹமட் இர்பான், சொஹைல் தன்வீர், கிறிஸ்டியன் ஜொன்கர், வெய்ன் பார்னல், ஆசிப் அலி, ஹசன் கான், அகா சல்மான், சைமன் அன்வர், அம்மார் காலித், சன்சிமிரன்ஜித் டின்ட்சா, அஹ்மட் ராசா, சிமொன் பெர்விஸ், அப்ராஸ் கான்,

பயிற்றுவிப்பாளர் – மொஹமட் அக்ரம்