தேசிய மெய்வல்லுனர் குழாத்தில் இரண்டு தமிழ் பேசுகின்ற வீரர்கள்

104

சுகததாச விளையாட்டரங்கில் கடந்த மாத இறுதியில் நிறைவுக்கு வந்த 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வீரர்கள் வெளிப்படுத்திய திறமைகளை அடிப்படையாக வைத்து 41 பேர் கொண்ட வீரர்களைக் கொண்ட தேசிய மெய்வல்லுனர் குழாத்தை இலங்கை மெய்வல்லுனர் சங்கம் வெளியிட்டுள்ளது.

அத்துடன், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதிக்காக குறித்த வீரர்களின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் Elite பிரிவில் 27 வீரர்களும், தேசிய பிரிவில் 62 வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்

இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஏன் வட, கிழக்கு வீரர்கள் இல்லை?

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்குப் பிறகு வீரர்களின் எண்ணிக்கை 41 ஆக குறைக்கப்பட்டுள்ளது

இதற்குக் காரணம் இவ்வருடம் நடைபெறவுள்ள ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விழா ஆகியவற்றை இலக்காகக் கொண்டு வீரர்களை தயார்படுத்துவது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் மே மாதம் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை சீனாவின் ஹெங்ஷு நகரிலும், டோக்கியோ ஒலிம்பிக் விழா ஜுலை 23ஆம் திகதி ஜப்பானிலும் நடைபெறவுள்ளது

எனவே, Elite மற்றும் தேசிய குழாம் என இரண்டு பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் குழாத்தின் Elite பிரிவில் 21 வீரர்களும், தேசிய பிரிவில் 20 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தேசிய மெய்வல்லுனரில் பிரகாசித்த வீரர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்

இதில் இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கம் வென்றவரும், ஆண்களுக்கான 100 மீற்றரில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டவருமான இலங்கை இராணுவத்துக்காக விளையாடி வரும் மொஹமட் சபான் தேசிய பிரிவில் ஆண்களுக்கான 100 மீற்றர் அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.

அதேபோல, பெண்களுக்கான 200 மீற்றரில் வெள்ளிப் பதக்கத்தையும், 100 மீற்றரில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற பாத்திமா சபியா யாமிக் தேசிய பிரிவில் பெண்களுக்கான 100 மீற்றர் அஞ்சலோட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்

இதில் அண்மைக்காலமாக ஆண்களுக்கான தட்டெறிதலில் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றவரும், இம்முறை தேசிய மெய்வல்லுனரில் ஆண்களுக்கான தட்டெறிதலில் தங்கப் பதக்கம் வென்றவருமான இஸட்.ரி.எம் ஷிக் தேசிய குழாத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை

இதனிடையே, இம்முறை தேசிய மெய்வல்லுனரில் தனிநபர் போட்டி நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்திய 8 வீரர்கள் Elite பிரிவில் இடம்பெற்றுள்ளனர். ஏனைய வீரர்கள் அஞ்சலோட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் இத்தாலியில் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற குறுந்தூர ஓட்ட வீரரான யுபுன் அபேகோன் (100 மீற்றர், 4 x 100 மீற்றர் அஞ்சலோட்டம்), ஹிமாஷ ஷான், சானுக்க சந்தீப, வினோத் சுரஞ்சய டி சில்வா, சமோத் விஜேசிங்க (4 x 100 அஞ்சலோட்டம்), காலிங்க குமாரகே (400 மீற்றர், 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டம்), என். ராஜகருணா, அருண தர்ஷன, இசுரு லக்ஷான், பசிந்து கொடிகார (4 x 400 அஞ்சலோட்டம்) ஆகியோர் Elite பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆவர்.

புத்தாண்டின் ஆரம்பத்தில் இரு மெய்வல்லுனர் தொடர்கள் ஒத்திவைப்பு

அதுதவிர, அமாஷா டி சில்வா (100 மீற்றர்), டில்ஷி குமாரசிங்க, நிமாலி லியனாரச்சி, நதீஷா ராமநாயக்க (800 மீற்றர்), கயன்திகா அபேரட்ன (800,1500 மீற்றர்), நிலானி ரத்னாயக்க (1500 மீற்றர்), சாரங்கி சில்வா (நீளம் பாய்தல், 4 தர 100 அஞ்சலோட்டம்), ஹிருனி விஜேரட்ன (மரதன்), ருமேஷிகா ரட்நாயக்க, லக்ஷிகா சுகன்தி, பாத்திமா சபியா யாமிக் (4 தர 100 அஞ்சலோட்டம்) ஆகியோர் Elite பிரிவில் இடம்பெற்றுள்ள வீராங்கனைகள் ஆவர்.

இது இவ்வாறிருக்க, மொஹமட் சபான் ( 200, 4 x 100 மீற்றர்), ருசிரு சதுரங்க, .டி குமார (800 மீற்றர்), சமன் குமார பெர்னாண்டோ, ஹேமன்த குமார (1500 மீற்றர்), .கே தரங்க (10 ஆயிரம் மீற்றர்), .டி ரத்னாயக்க (400 மீற்றர் தடை தாண்டல்), யு.பி ஹேரத் (3000 மீற்றர் தடை தாண்டல்), க்ரேஷன் தனன்ஜய (நீளம் பாய்தல், முப்பாய்ச்சல்), எம்.கே கருணாசேகர (நீளம் பாய்தல்), சன்ஜய விஜேசிங்க (முப்பாய்ச்சல்), சுமேத ரணசிங்க (ஈட்டி எறிதல்), அஜித் குமார கருணாதிலக்க (10 அம்ச நிகழ்ச்சி), எஸ்.டி குணரட்ன (4 x 400 அஞ்சலோட்டம்) உள்ளிட்ட வீரர்கள் ஆண்கள் தேசிய குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்

பாடசாலை வீராங்கனையால் 1,500 மீற்றரில் புதிய சாதனை

அத்துடன், பெண்கள் தேசிய குழாத்தில் இரேஷா ராஜசிங்க (100 மீற்றர் சட்டவேலி ஓட்டம்), சச்சினி கௌஷல்யா பெரேரா (கோலூன்றிப் பாய்தல்), அன்ஜானி புலவன்ச (நீளம் பாய்தல்), ஹசானி பபோதா லக்மாலி (ஈட்டி எறிதல்), எச்.எப் பெர்னாண்டோ (4 x 100 அஞ்சலோட்டம்) ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதன்படி, Elite மற்றும் தேசிய குழாம்களுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 41 வீரர்களுக்குமான விசேட பயிற்சி முகாம் ஒன்றை மிக விரைவில் நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, தேசிய குழாத்துக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான இரண்டாவது தகுதிகாண் போட்டிகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் என இலங்கை மெய்வல்லுனர் சங்கம் அறிவித்துள்ளது.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<