தேசிய மெய்வல்லுனரில் பிரகாசித்த வீரர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்

The 98th National Athletics Championship - 2020

64

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் இருவருக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் வெளிநாடொறில்  உள்ள உயர் செயற்றிறன் பயிற்சி மத்திய நிலையத்தில் பயிற்சிகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான 800 மீற்றரில் ஆசியாவின் ஆதிக்கத்தை கைப்பற்றிய இலங்கை

இதன்படி, 2022இல் இங்கிலாந்தின் பெர்மிங்ஹம்மில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழா, அதே ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழா மற்றும் 2024இல் பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழா உள்ளிட்ட பிரதான போட்டிகளை இலக்காகக் கொண்டு இந்தப் வெளிநாட்டு புலமைப்பரிசிலை வழங்குவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதுதொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடகப்பிரிவு நேற்று (31) வெளிட்டிருந்த ஊடக அறிவிப்பில்

மிக விரைவில் அனைத்து வசதிகளையும் கொண்ட உயர் செயற்றிறன் பயிற்சி மத்திய நிலையமொன்றை ஸ்தாபிப்பதற்கான ஆரம்ப கட்ட வேலைத்திட்டங்கள் அனைத்தும் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், இதன்மூலம் இலங்கை வீரர்கள் அனைவருக்கும் சர்வதேச தரத்திலான பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனவே, கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இம்முறை தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுனருக்கான விருதுகள் வழங்கப்படவில்லை.

தேசிய விளையாட்டு பேரவையின் 2021இற்கான பாதீடு மஹேலவினால் சமர்ப்பிப்பு

எனினும், பெண்களுக்கான 800 மீற்றரில் முன்னாள் தேசிய சம்பியன்களை வீழ்த்தி, தேசிய சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பை நூழிலையில் தவறவிட்ட 21 வயதான டில்ஷி குமாரசிங்க மற்றும் இரண்டு வருட போட்டித்தடைக்குப் பிறகு முதல்தடவையாக தேசிய மட்டப் போட்டியொன்றில் களமிறங்கி ஆண்களுக்கான 200 மற்றும் 400 மீற்றரில் தங்கப் பதக்கங்களை வென்ற காலிங்க குமாரகேவுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சின் புலமைப்பரிசில் கிடைக்கலாம் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 >>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<