தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து காலிங்க குமாரகே விடுவிப்பு

91

தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டினால் சுமார் ஒரு வருடமாக தடைவிதிக்கப்பட்ட இலங்கை மெய்வல்லுனர் அணியின் நட்சத்திர வீரரும், 400 மீற்றர் ஓட்டப் போட்டியின் முன்னாள் சம்பியனுமான காலிங்க குமாரகேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறியதால் அவரது தடை இரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஊக்கமருந்து சர்ச்சைக்கு முகங்கொடுத்துள்ள காலிங்க குமாரகே

ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 400 ………….

காலிங்க குமார மீதான குற்றச்சாட்டுகளை தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனைக்கான இலங்கை முகவர் நிலையம் (SLADA) மற்றும் உலக முகவர் நிறுவனமும் (WADA) நிரூபிக்கத் தவறியதையடுத்து சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுதலையான பாடசாலை மாணவியான செல்ஸி மெலனியுடன் காலிங்க குமாரகே மீதும் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.  

கடந்த வருடம் டிசம்பர் மாதம் காலிங்க குமாரகேவிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியில் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து இவ்வருடம் ஜனவரி மாதம் பி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது அவருடைய சிறுநீரில் டி ஹைட்ரோக்லோரோ மெதில் டெஸ்டொஸ்ரோன் என்ற தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டதாக கண்டறியப்பட்டது.

எனினும், குறித்த பரிசோதனையை மேற்கொண்ட டெல்லியில் உள்ள ஆய்வகம் கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்தரமான பரிசோதனைகளை மேற்கொள்ளத் தவறியதையடுத்து சீல் வைத்து மூடப்பட்டது.

SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம்

நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற ………

இதனையடுத்து காலிங்க குமாரகேவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் சமூகவலைத்தளங்கள் வாயிலாக பல விமர்சனங்கள் முன்வைப்பட்டன

எனினும், தான் நிரபராதி என்பதை தொடர்ந்து தெரிவித்திருந்த அவர், தனது சட்ட ஆலோசனைக் குழுவின் உதவியுடன் மேன்முறையீடு செய்து தான் நிரபராதி என்பதை தற்போது நிரூபித்துள்ளார்.

காலிங்கவின் சட்ட ஆலோசகராக ஜனாதிபதி சட்டத்தரணி டினால் பிலிப்ஸ் செயற்பட்டிருந்ததுடன், காலிங்கவின் உடலில் எந்தவொரு தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தும் கலந்திருப்பதற்கான சரியான ஆதராங்களை இலங்கை முகவர் நிலையம் (SLADA) மற்றும் உலக முகவர் நிறுவனமும் நிரூபிக்கத் தவறியதை அவர் நீதிமன்றத்தில் நிரூபித்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் 28ஆம் திகதி ஒன்றுகூடிய ஒழுக்காற்றுக் குழு காலிங்க குமாரகே குற்றமற்றவர் என அறிவித்தது. இதனையடுத்து காலிங்க குமாரகே சகலவிதமான குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார்

இதுதொடர்பில் காலிங்க குமாரகே எமது இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில், ”இந்தக் குற்றச்சாட்டை நான் ஆரம்பித்திலிருந்து மறுத்து வந்தேன். கடைசியில் உண்மை ஜெயித்தது.

SAG மெய்வல்லுனர் போட்டிகளின் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை வெளியீடு

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா கோலாகலமாக ………

இதற்காக எனக்கு உதவிய ராகம போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தயானாத் அல்விஸுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் எனது சட்ட ஆலொசகராக செயற்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி டினால் பிலிப்ஸுக்கும், புலஸ்தி ஹேவாமான்னவுக்கும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்த நிலையில், ஊக்கமருந்து குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட காலிங்க குமாரகே அடுத்த வருடம் முதல் தேசிய மட்டப் போட்டிகளில் மீண்டும் களமிறங்வுள்ளார்

400 மீற்றர் ஓட்டப் போட்டியை 46 செக்கன்களுக்குள் ஓடி முடித்த அனுபவமிக்க வீரரான காலிங்க, இறுதியாக கடந்த வருடம் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.99 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார்.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<