சஹாரின் சாதனை பந்துவீச்சு மூலம் டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா

88

தீபக் சஹாரின் ஹெட்ரிக் விக்கெட் உட்பட உலக சாதனை 6 விக்கெட்டுகள் மூலம் பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான டி-20 போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களால் வெற்றியீட்டியதோடு தொடரையும் 2-1 என கைப்பற்றியது. 

நாக்பூரில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணி கே.எல். ராகுல் மற்றும் ஷ்ரெயாஸ் ஐயரின் அதிரடி அரைச்சதங்கள் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை பெற்றது. 

ரோஹித் சர்மாவின் அதிரடியோடு T20 தொடரை சமநிலை செய்த இந்தியா

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இந்திய

இதன்போது ஐயர் 33 பந்துகளில் 62 ஓட்டங்களை விளாசியதோடு ராகுல் 35 பந்துகளில் 52 ஓட்டங்களை பெற்றார். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சஹாரின் அடுத்தடுத்த பந்தில் லிட்டன் தாஸ் மற்றும் சௌம்யா சர்கார் இருவரின் விக்கெட்டை  ஆரம்பத்திலேயே இழந்தது. இதனால் தடுமாற்றம் கண்ட பங்களாதேஷ் அணி 144 ஒட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.  

இந்தத் தொடரின்போது தனது முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கிய ஆரம்ப வீரர் மொஹமட் நயீம் பங்களாதேஷ் வெற்றி வாய்ப்புக்காக போராடினார். 48 பந்துகளில் 81 ஓட்டங்களை பெற்ற அவர் 16 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தபோது பங்களாதேஷ் அணியின் எதிர்பார்ப்பு சிதறியது.   

இதன்போது நயீம் மூன்றாவது விக்கெட்டுக்காக மொஹமது மிதுனுடன் இணைந்து 98 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டார். எனினும் 27 ஓட்டங்களை பெற்ற மிதுன், சஹாரின் மூன்றாவது விக்கெட்டாக அரங்கு திரும்பினார்.   

இந்நிலையில் தனது மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் ஷபியுல் இஸ்லாமின் விக்கெட்டை வீழ்த்திய சஹார் தனது இறுதி ஓவரின் முதல் இரு பந்துகளுக்கும் முஸ்தபிசுர் ரஹீம் மற்றும் அமீனுல் இஸ்லாம் ஆகியோரின் விக்கெட்டுகளை பதம்பார்த்து தனது ஹெட்ரிக் சாதனையை பூர்த்தி செய்தார்.   

27 வயதான தீபக் சஹார் 3.2 ஓவர்களில் 7 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டி-20 சர்வதேச போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாகும். 2012 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை சுழல் பந்துவீச்சாளர் அஜந்த மெண்டிஸ் 8 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையையே தீபக் சஹார் முறியடித்தார். 

சகலதுறை வீரர் ஷிவம் டுபே 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் நயீம் மற்றும் முஷ்பீகுர் ரஹீம் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

டி20 அரங்கில் அவுஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்த இந்திய அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது

போட்டியின் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை சஹார் தட்டிச் சென்றார்.

போட்டியின் சுருக்கம்

இந்தியா – 174/5 (20) – ஷ்ரெயாஸ் ஐயர் 62, கே.எல். ராகுல் 52, மனிஷ் பாண்டே 22*, செளம்யா சர்கார் 2/29, ஷபியுல் இஸ்லாம் 2/32

பங்களாதேஷ் – 144 (19.2) – மொஹமட் நயீம் 81, மொஹமட் மிதுன் 27, தீபக் சஹர் 6/7, ஷிவம் டுபே 3/30

முடிவு – இந்தியா 30 ஓட்டங்களால் வெற்றி  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<