SAG மெய்வல்லுனர் போட்டிகளின் திருத்தியமைக்கப்பட்ட அட்டவணை வெளியீடு

70

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா கோலாகலமாக இன்று (01) நேபாளத்தின் தலைநகர் கத்மண்டு நகரில் ஆரம்பமானது. கடும் குளிருக்கு மத்தியில் 8 நாட்டு வீர வீராங்கனைகள் அணிவகுக்க, கலையம்சங்களுடன் நேபாள ஜனாதிபதி பிந்யா தேவி பண்டாரி போட்டித் தொடரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நேபாளத்தில் மூன்றாவது தடவையாக நடைபெறுகின்ற இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவானது எதிர்வரும் 10 ஆம் திகதிவரை கத்மண்டு மற்றும் பொக்காரா ஆகிய இரண்டு நகரங்களில் நடைபெறுகின்றது.

SAG மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்த சப்ரின், சண்முகேஸ்வரன் மற்றும் சபான்

நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள…

இதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவுகள், பூட்டான் மற்றும் போட்டிகளை நடாத்தும் நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில், தெற்காசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கைக்கு அதிகளவு பதக்கங்களைப் பெற்றுக் கொடுக்கின்ற போட்டி நிகழ்ச்சியான மெய்வல்லுனர் போட்டிகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட போட்டி அட்டவணை இன்று (01) வெளியிட்டு வைக்கப்பட்டது.

இம்முறை தெற்காசிய விளையாட்டு விழாவுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 58 பேர் கொண்ட இலங்கை மெய்வல்லுனர் குழாத்தில் மூன்று தமிழ் பேசும் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான குமார் சண்முகேஸ்வரன் எதிர்வரும் 6 ஆம் திகதியும் (காலை 8.45 மணிக்கு),  முப்பாய்ச்சல் போட்டிகளின் தேசிய சம்பியனான சப்ரின் அஹமட் (காலை 10.00 மணிக்கு) மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் மொஹமட் சபான் (காலை 8.45 மணிக்கு) ஆகிய இருவரும் எதிர்வரும் 7 ஆம் திகதியும் தத்தமது இறுதிப் போட்டிகளில் களமிறங்கவுள்ளனர்.

இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவின் குவஹாட்டியில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் இலங்கை அணி 9 தங்கம், 11 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 37 பதக்கங்களை வெற்றி கொண்டது.

>>Photos: Opening Ceremony of the 13th South Asian Games<<

எனவே இம்முறை போட்டிகளில் கடந்த வருடத்தைக் காட்டிலும் இலங்கை மெய்வல்லுனர் அதிகளவான பதக்கங்களை வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பு – ஒவ்வொரு போட்டிகளும் நேபாளத்தின் நேரத்திலிருந்து 15 நிமிடங்கள் முன்னதாக நடைபெறும். உதாரணமாக ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டி நேபாளம் நாட்டு நேரப்படி காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகினால், அது இலங்கை நேரப்படி காலை 8.45 மணிக்கு நடைபெறும்.  

>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<