கால்பந்து மைதானத்தில் சாடியோ மானேவின் திறமை எல்லோருக்கும் தெரிந்ததே. ஆனால் அவர் ரசிகர்களால் விரும்பப்படுவதற்கு இது மாத்திரம் காரணமல்ல. மைதானத்திற்கு வெளியில் அவரது பணிவு மற்றும் தாராள மனப்பான்மை கால்பந்து ரசிகர்கள் மாத்திரமல்ல, அனைவரும் விரும்பும் ஒன்று.

“10 பெராரி கார்கள், 20 மாணிக்கக்கல் பதித்த கைக்கடிகாரங்கள் அல்லது இரண்டு விமானங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய முடியும்? அவைகளால் எனக்கு அல்லது இந்த உலகத்திற்கு என்ன கிடைக்கப்போகிறது? நான் அதிகம் போராடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். பாதணிகள் இல்லாமல் கால்பந்து ஆட வேண்டி ஏற்பட்டது. சரியான கல்வியை பெற முடியவில்லை. அது மாத்திரமல்ல மேலும் பல விடயங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே நான் எனது மக்களுக்கு பாடசாலை, மைதானம் மற்றும் மருத்துவமனைகளை கட்டிக்கொடுக்கிறேன். வறுமையில் இருக்கும் மக்களுக்கு உண்ண, உடுக்க, செருப்பு வாங்கிக் கொடுக்கிறேன். எனது வாழ்வில் இன்று கிடைத்திருக்கும் செல்வங்களில் ஒரு பகுதியை எனது மக்களுக்கு வழங்க நான் விரும்புகிறேன்என்கிறார் சாடியோ மானே.

வாரத்திற்கு 100,000 பௌண்ட் அளவு சம்பளம் பெறும் மானே நினைத்திருந்தால் தாம் விரும்பும் வகையில் ஆடம்பர வாழ்வொன்றை கழிக்க முடியும்

கொரோனா வைரஸுக்கு எதிராக ரொனால்டோ, மெஸ்ஸி பெரும் நிதியுதவி

கால்பந்து உலகின் பெரும் நட்சத்திரங்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி இருவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பாரிய நிதியை வழங்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் பிரபல லிவர்பூல் கழகம் மற்றும் செனகல் தேசிய கால்பந்து அணிக்காக ஆடும் முன்கள வீரராக இருக்கும் மானே தற்போது கால்பந்து உலகில் இருக்கும் முன்னணி வீரர்களில் ஒருவர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கால்பந்து அரங்கில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய வீரருக்காக வழங்கப்படும் பல்லேன் டிஓர் விருதுக்கான முதல் 5 இடங்களுக்குள் வர அவரால் முடிந்தது. இதன்படி லிவர்பூல் கழகத்திற்காக ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் மற்றும் பிஃபா கழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்டு செனகல் தேசிய அணிக்காக ஆபிரிக்க பிராந்திய தேசிய அணிகள் ஆடும் 2019 ஆபிரிக்க கிண்ணத்தில் இரண்டாம் இடத்தை பிடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

என்றாலும் அவர் மைதானத்தில் காட்டும் திறமையை பற்றி இந்தக் கட்டுரை கூற முயலவில்லை.

மானே மைதானத்தில் வெளிப்படுத்தும் திறமைகளுக்கு அப்பால் மைதானத்திற்கு வெளியில் அவரிடம் உள்ள மனிதாபிமானம் மற்றும் பணிவினை வெளிப்படுத்தும் அவரது செயல்கள் மூலம் கால்பந்து உலகில் நற்குணம் படைத்த ஒருவராக அவர் கால்பந்து ரசிகர்களால் பாராட்டப்படுகிறார்.

சொந்த ஊருக்கு செய்த சேவைகள்

மானே பிறந்து வளர்ந்தது செனகல் நாட்டின் பம்பாலி என்ற பின்தங்கிய கிராமம் ஒன்றில். அவர் சிறு வயதில் இருந்தபோது மாத்திரமன்றி இன்றும் கூட வறுமை, உணவு பற்றாக்குறை மற்றும் போதிய கல்வி இன்மை மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்ய முடியாமல் துன்பப்படுகின்றனர். மானே அங்கு இன்னும் குடியிருக்காதபோதும் அவர் பிறந்து வளர்ந்த இடத்தை அவர் இன்றும் மறக்கவில்லை. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அவர் பல செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, அவர் அந்த கிராமத்தில் மருத்துவமனை, பள்ளிவாசல் மற்றும் விளையாட்டு மைதானம் ஒன்றை கட்டுவதற்கு தேவையான நிதியை முழுமையாக தனது சொந்த பணத்தில் வழங்கினார்.

இது தவிர அவர் அங்கு பெரும் குறைபாடாக இருந்த முழு வசதிகளுடன் கூடி பாடசாலை ஒன்றை கட்டுவதற்காக 270,000 யூரோ நிதியை வழங்கியதோடு அதன் நிர்மாணம் தொடர்பிலான முன்னேற்றம் பற்றி தொடர்ந்து கண்காணித்து வருகிறார்

அது பற்றி பேசும்போது, கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. அதன் மூலம் தான் எந்த ஒருவருக்கும் நல்லதொரு தொழிலை பெற்று வாழ்வின் அஸ்திவாரம் ஒன்றை இட முடியும் என்று மானே கூறினார்.

அதேபோன்று அங்குள்ள மக்கள் துன்பம் அனுபவிக்கின்ற வறுமை நிலையை நன்றாக தெரிந்திருக்கும் அவர் அது பற்றி கருத்தில் கொண்டு மாதாந்தம் கிராமத்தில் இருக்கின்ற எல்லா குடும்பங்களுக்கும் 70 பௌண்ட் வழங்கி வருகிறார். அதன்மூலம் அந்த மக்களின் நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தம்மால் முடிந்த அளவு பங்களிப்புச் செய்கிறார்.  

இதன்படி அவரது இந்த செயற்பாடுகள் மூலம் அவர் பிறந்த பம்பாலி கிராம மக்களுக்கு தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பெரும் பங்களிப்புச் செய்வதோடு அங்கு சிறு பிள்ளைகளுக்கும் அவர்களின் கனவை நோக்கிச் செல்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை மானே வழங்குகிறார்

இது தவிர 2018 சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டிக்காக அவர் விளையாடும் லிவர்பூல் அணி தகுதி பெற்றதும் லிவர்பூல் அணியின் 300 ஜெர்சிக்களை கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு வழங்கி அவர்களை உற்சாகமூட்டினார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம்

உலகளாவிய தொற்றுநோயாக பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கம் செனகல் நாட்டுக்கும் ஏற்பட்டிருப்பதோடு அந்த நாட்டிலும் பலருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு நிர்வாகம் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருப்பதோடு அதற்கு பலம் சேர்க்கும் வகையில் மானே செனகல் சுகாதாரத் துறைக்கு 45,000 பௌண்ட் நன்கொடை வழங்கியுள்ளார்

சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து

பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ …………

மேலும், அவரது தனிப்பட்ட சமூக ஊடகத்தின் மூலம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு மக்களை அறிவூட்டியிருக்கிறார். அதில் தற்போதைய நிலைமை குறித்து அதிக அவதானத்துடன் இருக்கும்படியும், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சுகாதார பழக்கங்களை பின்பற்றுவது பற்றி கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார்

பள்ளிவாசல் கழிப்பறையை சுத்தம் செய்த செய்தி

உலகறிந்த பிரபலமான ஒருவர் பள்ளிவாசலின் கழிப்பறையை சுத்தம் செய்யும் அளவுக்கு பணிவை காட்டும் நிகழ்வு ஒன்றை எம்மால் பார்க்கவும் கேட்கவும் முடிவது மிக மிக அரிதாகும்

2018 ஆம் ஆண்டு ப்ரீமியர் லீக் தொடரில் லெய்செஸ்டர் சிட்டி அணியுடன் நடைபெற்ற போட்டி ஒன்றில் லிவர்பூல் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்தப் போட்டியில் மானே தனது அணிக்காக முதல் கோலை புகுத்தினார்.    

இதனைத் தொடர்ந்து அவர் தமது வீட்டுக்குச் சென்று ஓய்வெடுப்பதற்கு பதில் ஒரு முஸ்லிமாக அவர் தொழுவதற்காக பள்ளிவாசலுக்குச் சென்று பின்னர் அவர் அங்கிருக்கும் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பரவியது

இதன்படி அவர் பள்ளிவாசலில் தமது நண்பர் ஒருவரை சந்தித்திருப்பதோடு தொழுகைக்குப் பின் அவரை தமது வீட்டுக்கு வரும்படி அழைத்தபோதும் அவருக்கு அங்கு கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டி இருப்பதால் மானேயுடன் வர முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு மானே, தாமும் கழிப்பறையை சுத்தம் செய்ய வருவதாக குறிப்பிட்டுள்ளார்.  

இதனைத் தொடர்ந்து இருவரும் இணைந்து கழிப்பறையை சுத்தம் செய்வதை அங்கிருந்த ஒருவர் வீடியோ செய்திருப்பதோடு, அப்போது தாம் இதனை புகழுக்காக செய்யவில்லை என்றும் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட வேண்டாம் என்றும் மானே அறிவுறுத்தியுள்ளார். இது அவரது பணிவைக் காட்டும் முக்கிய நிகழ்வாகும்

எவ்வாறாயினும் அந்த வீடியோ இணையதளத்தில் பரவியதோடு இதன் மூலம் மானே தொடர்பில் கால்பந்து ரசிகர்களிடம் இருந்த அன்பு மற்றும் விருப்பம் மேலும் அதிகரித்தது

பஸ்ஸில் இருந்து தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்வது

அவரின் பணிவை வெளிப்படுத்துகின்ற மேலும் ஒரு சந்தர்ப்பம் செனகல் தேசிய அணி வீரர்களுடன் போட்டி ஒன்றுக்கு பங்கேற்பதற்கு மைதானத்தை நோக்கி அணியினர் உள்ள பஸ் வண்டி வந்த பின் அங்கு தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்கின்ற ஊழியர்களுக்கு உதவுகின்ற நிகழ்வாகும்.

அங்கு அவர் வண்டியில் இருந்து இறங்கி மைதானத்தை நோக்கி செல்வதற்கு தயாராகும்போது ஊழியர்கள் பஸ் வண்டியில் இருந்து தண்ணீரை எடுத்துச் செல்வதை பார்க்க முடிவதோடு எந்தத் தயக்கமும் இன்றி அவரும் அந்த ஊழியர்களுடன் சரளமாக பேசியவாறு மைதானத்தை நோக்கி தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்கிறார்

வேறு எந்த ஒரு வீரரும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இது பற்றி கரிசனை காட்டாமல் இருப்பது சாதாரணமான ஒன்று என்றபோதும் மானே அவ்வாறு இல்லை என்பது இதில் இருந்து தெரியவருகிறது

போல்போய் ஒருவருக்கு தமது லிவர்பூல் ஜெர்சியை வழங்கியது

2019 ஐரோப்பிய சுப்பர் லீக் சம்பியனான லிவர்பூல் அணி செல்சியை தோற்கடித்ததோடு அதன்போது மானே புகுத்திய இரட்டை கோல்களே லிவர்பூலின் வெற்றிக்கு வித்திட்டது. இதனால் அவர் போட்டியின் நாயகனாகவும் விருது வென்றார்.

போட்டிக்கு இடையே அவருக்கு பதில் மாற்று வீரர் ஒருவர் அழைக்கப்பட்ட நிலையில் இருக்கையில் வந்து அமர்ந்த மானே அருகில் இருந்த போல்போய் சிறுவன் ஒருவனை அழைத்து அவர் போட்டியில் அணிந்திருந்த ஜெர்சியை வழங்கியதோடு அந்த சிறுவனை கட்டிப்பிடித்து மகிழ்வித்தார்.

ரசிகரை அணியினரின் பஸ் வண்டிக்கு அழைத்து வந்தது

செனகல் தேசிய அணியுடனான போட்டிக்கு பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கு பஸ் வண்டிக்கு ஏறுவதற்கு அதற்கு அருகில் இருக்கின்றமானே 10’ லிவர்பூல் ஜெர்சியை அணிந்திருந்த இளைஞர் ஒருவரை பார்த்த அவர் பாதுகாப்பு பிரிவினரை அறிவூட்டி அவரை பஸ் வண்டிக்குள் அழைத்துக்கொண்டார். ஏனைய வீரர்களை சந்திப்பதற்கு அந்த இளைஞனுக்கு சந்தர்ப்பம் வழங்கிய மானே, தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பை அளித்து வாழ்வில் ஒருமுறை கிடைக்கக் கூடிய சந்தர்ப்பம் ஒன்றை அந்த இளைஞனுக்கு பெற்றுக்கொடுத்தார்.     

எடெர்சனிடம் மன்னிப்புக் கேட்டது

2017 ஆம் ஆண்டு ப்ரீமியர் லீக் தொடரில் மன்செஸ்டர் சிட்டி அணியுடன் இடம்பெற்ற போட்டி ஒன்றின்போது மானே எதிரணி கோல்காப்பாளர் எடெர்சன் மீது நிகழ்த்திய தவறுக்காக சிவப்பு அட்டை பெற்றார். இதன்போது மானேவின் பாதணிட்டு எடெர்சனின் முகத்தில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு ஆட முடியாமல் மைதானத்தை விட்டு வெளியேறினார்

இதனைத் தொடர்ந்து மானே தனது சமூக ஊடகத்தின் மூலம் எடெர்சனின் புகைப்படத்தை வெளியிட்டு அவரிடம் அந்த சம்பவம் தொடர்பில் மன்னிப்புக் கேட்டு விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தார்.

இஸ்மைலா சார் மீது கரிசனை

செனகல் தேசிய கால்பந்து அணியில் ஆடும் திறமையான இளம் வீரரான சார் கடந்த ஆண்டில் வட்போர்ட் கழகத்துடன் இணைந்துகொண்டு ப்ரீமியர் லீக் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார். அதன்போது தமது தேசிய அணியின் சக வீரர் என்ற வகையில் சார் தொடர்பில் எப்போதும் தேடிப்பார்க்கின்ற மானே அவர் முன்னோக்கிச் செல்வது குறித்து ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதாக சார் ஊடகங்களுக்கு குறிப்பிட்டிருந்தார்.  

இந்தப் பருவத்தின் ப்ரீமியர் லீக் தொடரில் அன்பீல்ட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் லிவர்பூல் அணி வட்போர்ட்டை 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்தது. போட்டிக்குப் பின் வட்போர்டின் முன்கள வீரரான ட்ரோய் டீனியை சந்தித்த மானே அவரிடம் சார் தொடர்பில் குறிப்பிட்டுஎனது பையனை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளுங்கள்என்று தெரிவித்தார்.  

கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A, பிரான்ஸ்……………………

இதன்படி அண்மையில் ப்ரீமியர் லீக் தொடரின் கீழ் அந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டி ஒன்றில் வட்போர்ட் 3-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலகு வெற்றி ஒன்றை பெற்று லிவர்பூல் அணி 44 போட்டிகளில் பேணிவந்த தோல்வியுறாத சாதனைக்கு முடிவுகட்ட முடிந்தது. இந்தப் போட்டியில் சார் இரட்டை கோல்களை பெற்று வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் சார் மீண்டும் தனது ஆட்டத் திறனுக்கு திரும்பினார்.   

அதேபோன்று சிறு பிள்ளைகள் உட்பட விளையாட்டு ரசிகர்கள் வந்து புகைப்படம் பிடித்துக்கொள்ள கேட்கும்போது அவர் தயக்கம் இன்றி எந்த இடத்திலும் அதற்காக முன்வரும் சந்தர்ப்பங்கள் ஏராளம்.   

விளையாட்டுச் செய்தியாளர்கள் கூட அவரது பணிவுக்கு பாராட்டை வெளியிட்டுள்ளனர். போட்டியின் முடிவில் அவர் போட்டியில் வெளியிட்ட அபார திறமை தொடர்பில் கருத்துக் கூறுவதை தட்டிக்கழிக்கும் அவர் போட்டியில் ஏனைய வீரர்கள் வெற்றிக்கு அளித்த பங்களிப்புப் பற்றி பேசும் பணிவு தொடர்பிலேயே செய்தியாளர்கள் அவரை பாராட்டுகிறார்கள்

இதன்படி இந்தக் கால்பந்து உலகில் இருக்கின்ற நற்குணங்கள் கொண்ட மனிதனாக சாடியோ மானே எதிர்காலத்திலும் இவ்வாறாக மைதானத்தில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் ஆடம்பர வாழ்வுக்கு அப்பால் அடுத்த மனிதர்களின் மகிழ்ச்சி, முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டுக்காக செயற்படுவார் என்பதில் சந்தேகமில்லை.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<