சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சென்ற இலங்கை வீரர்கள்

Sri Lanka Cricket

206

“லிட்டில் ஹார்ட்ஸ்” (Little Hearts Project) திட்டத்துக்கு உதவும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்று வியாழக்கிழமை (24) கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு (குழந்தைகள்) சென்றுள்ளனர். 

குறித்த இந்த விஜயத்தின் போது தேசிய அணி வீரர்கள் இதய சத்திரசிகிச்சை பிரிவுக்கு சென்று குழந்தைகளையும் சந்தித்துள்ளனர்.

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு சென்ற இலங்கை அணி வீரர்களை வைத்தியசாலையின் பணிப்பாளர் G. விஜேசூரிய மற்றும் திட்ட பணிப்பாளர் துமிந்த சமரசிங்க ஆகியோர் வரவேற்றனர்.

அதேநேரம், வைத்தியசாலைக்கு சென்றிருந்த இலங்கை வீரர்கள் மற்றும் அணி முகாமைத்துவ குழாத்துக்கு, லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டது.

இலங்கையில் நடைபெற்றுமுடிந்த LPL தொடரின் மூலம் திரட்டப்பட்ட நிதி மற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிதி உள்ளடங்களாக 100 மில்லியன் ரூபாவானது கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிதி சீமாட்டி ரிஜ்ட்வே வைத்தியசாலையின் இதய தீவிர சிகிச்சைப் பிரிவினை (Cardiac and Critical Care Complex) நிர்மாணிக்க உபயோகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<