கொரோனாவால் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைப்பு

75

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிருக்கான  17 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கால்பந்து  போட்டி மற்றும் பனாமா மற்றும் கொஸ்டாரிகாவில் நடைபெறுவதாக இருந்த மகளிருக்கான 20 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டி என்பன ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளார்கள். இதனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், யூரோ கிண்ணம், ஐ.பி.எல் உள்ளிட்ட போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன

இந்தநிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த மகளிருக்கான 17 வயதுக்குட்பட்ட கால்பந்து உலகக் கிண்ணப் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

மெஸ்ஸியின் விமானம் பிரசல்ஸில் அவசர தரையிறக்கம்

ஸ்பெயினின் டெனரிப் தீவை நோக்கி பயணித்திக்கொண்டிருந்த லியோனல்…

இதன்படி, போட்டிக்கான புதிய அட்டவணை பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிபா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெண்களுக்கான 20 வயதுக்குட்பட்ட மற்றும் 17 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டிகளை ஒத்திவைக்க பிபா கூட்டமைப்புகளின் செயல்பாட்டுக் குழு பரிந்துரை செய்தது

இதனையடுத்து இந்த இரண்டு தொடர்களும் ஒத்திவைக்கப்படுகின்றன. இதன் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உருகுவே குடும்பங்களுக்கு உணவளிக்கும் சுவாரெஸ்

பார்சிலோனா முன்கள வீரரான லுவிஸ் சுவாரெஸ் தனது சொந்த நாடான …

பிபாவின் 7ஆவது மகளிருக்கான 17 வயதுக்குட்பட்ட கால்பந்து உலகக் கிண்ணப் போட்டி, நவம்பர் 2ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இந்தியாவின் புவனேஸ்வர், கொல்கத்தா, குவஹாத்தி, அஹமதாபாத், நவி மும்பை உள்ளிட்ட ஐந்து நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது. இதில் இந்தியா, ஜப்பான், வடகொரியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்க இருந்தன

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பனாமா மற்றும் கொஸ்டாரிகாவில் நடைபெற இருந்த 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண போட்டித் தொடரையும் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

மேலும், 2022 பிபாவின் உலகக் கிண்ண கால்பந்து தகுதிப் போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை குறித்து, கூட்டமைப்புகளுடன் கலந்துரையாடவும் முடிவு செய்யப்பட்டது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<