மெஸ்ஸி, ரொனால்டோவில் சிறந்த வீரரை தேர்வு செய்த ககா

36
Kaka
Kaka
 

பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ககா தற்போதைய சிறந்த கால்பந்து வீரராக தம்முடன் விளையாடிய ரொனால்டோவை தவிர்த்து மெஸ்ஸியை தேர்வு செய்துள்ளார்.

போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் ககா ரியல் மெட்ரிட் கழகத்திற்காக ஒன்றாக விளையாடியுள்ளார். ஆனால் மெஸ்ஸியே சிறந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மெஸ்ஸியின் விமானம் பிரசல்ஸில் அவசர தரையிறக்கம்

ஸ்பெயினின் டெனரிப் தீவை நோக்கி பயணித்திக்கொண்டிருந்த லியோனல் மெஸ்ஸியின்…

சிறந்த கால்பந்து வீரருக்கான பல்லோன் டிஓர் (Ballon d’Or) விருதை மெஸ்ஸி அதிக முறை வென்று சாதனை படைத்துள்ளார். ஆனால் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி இடையே யார் சிறந்த வீரர் என்ற விவாதம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 

2009 தொடந்தம் 2013 வரை ககா ரியல் மெட்ரிட் கழகத்தில் ரொனால்டோவுடன் இணைந்து விளையாடியுள்ளார். ஆனால் 2007 பல்லோன் டிஓர் விருதை வென்றிருக்கும் ககாவின் முடிவு பெரிதும் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக உள்ளது. 

“நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் விளையாடியிருக்கிறேன். அவர் அபார வீரர். ஆனால் நான் மெஸ்ஸியையே பரிந்துரைப்பேன்” என்று பிஃபா நிகழ்ச்சி ஒன்றில் ரொனால்டோ அல்லது மெஸ்ஸி இருவரில் ஒருவரை தேர்வுசெய்யக் கேட்டபோது ககா இவ்வாறு குறிப்பிட்டார்.

“அவர் சிறந்த திறமை மிக்கவர், அவர் விளையாடும் முறை அற்புதமானது. கிறிஸ்டியானோ ரொனால்டோ இயந்தரம் போன்றவர், அவர் வலுவானவர் மற்றும் வேகமாக ஆடக் கூடியவர் என்பதால் மாத்திரமல்ல உளரீதியிலும் வலுவானவர். அவருக்கு எப்போதுமே விளையாடி வெற்றி பெற வேண்டும். அவரிடம் இருக்கும் சிறந்த விடயங்களாக அது உள்ளது. 

வரலாற்றைப் பார்க்கும்போது மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ இருவரும் சிறந்த ஐந்து வீரர்களில் அவசியம் இருப்பார்கள். அவர்கள் இருவரும் விளையாடுவதை பார்க்கக் கிடைத்தது நாம் பெற்ற பாக்கியம்” என்று குறிப்பிட்டார். 

“நாம் உங்களை வெறுக்கிறோம்” ரொனால்டோவிடம் கூறிய டிபாலா

போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிடம் ஆர்ஜன்டீன மக்கள் அவரை விரும்புவதில்லை

மெஸ்ஸி முதற்கொண்டு பார்சிலோனா வீரர்கள் அனைவரும் ஊதிய வெட்டுக்கு ஒப்புக்கொண்டது தொற்று நோய்க்கு மத்தியில் பார்சிலோனா கழக ஊழியர்களின் தொழிலை பாதுகாப்பதற்காகும். எவ்வாறாயினும் கழகமானது வீரர்களுக்கு ஆழுத்தம் கொடுத்ததாக அவர் குறிப்பிட்டார். ஆனால் முதல்நிலை அணி தமது சொந்த விருப்பின் பேரில் இதனைச் செய்ய முன்வந்ததாக மெஸ்ஸி குறிப்பிட்டிருந்தார்.

“இந்த அவசர நிலையில் பார்சிலோனா அணி வீரர்களின் நோக்கம் பற்றி அதிகம் பேசப்படுகிறது” என்று மெஸ்ஸி கூறியிருந்தார். “நாம் ஆரம்பத்தில் இருந்தே எமது ஊதியத்தை குறைத்து ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவது எமது நோக்கமாக இருந்தது என்பதை இங்கு கூற வேண்டும். ஏனென்றால் இந்த தருணம் மிகப் பாரதூரமானது என்பதை நாம் ஆரம்பத்தில் இருந்தே தெரிந்து வைத்திருந்தோம். கழகம் உதவி கேட்கும்போதும் நாம் தான் முதலில் உதவி செய்கிறோம்” என்றார் மெஸ்ஸி.     

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<