Home Tamil அவிஷ்கவின் அதிரடியில் தம்புள்ளை ஓரா அணி வெற்றி

அவிஷ்கவின் அதிரடியில் தம்புள்ளை ஓரா அணி வெற்றி

93

தம்புள்ளை ஓரா மற்றும் கோல் டைடன்ஸ் அணிகள் இடையிலான லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 14ஆவது போட்டியில் தம்புள்ளை ஓரா அணியினை கோல் டைடன்ஸ் அணியானது 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.  

>> WATCH – தோல்விகளில் ஆரம்பித்து வெற்றிகளை தொடருவதற்கான காரணத்தை கூறும் ஹஸரங்க! | LPL 2023

மேலும் இந்த வெற்றி தம்புள்ளை ஓரா அணிக்கு LPL தொடரில் 3ஆவது தொடர் வெற்றியாக அமைய, கோல் டைடன்ஸ் அணி நான்காவது தொடர் தோல்வியினைப் பதிவு செய்திருக்கின்றது. 

கோல் டைடன்ஸ் மற்றும் தம்புள்ளை ஓரா அணிகள் மோதிய LPL போட்டி நேற்று (11) கொழும்பில் ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை ஓரா அணி முதலில் கோல் டைடன்ஸ் அணியினைத் துடுப்பாடப் பணித்தது 

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கோல் டைடன்ஸ் அணியானது 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்கள் எடுத்தது. கோல் டைடன்ஸ் அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக அதன் தலைவர் தசுன் ஷானக்க 26 பந்துகளில் 5 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார். தம்புள்ளை ஓரா அணியின் பந்துவீச்சில் துஷான் ஹேமன்த 02 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 134 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய தம்புள்ளை ஓரா அணி அவிஷ்க பெர்னாண்டோவின் அதிரடி ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கை 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தது

தம்புள்ளை ஓரா அணியின் வெற்றிக்கு உறுதியாக இருந்த அவிஷ்க பெர்னாண்டோ வெறும் 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக ஆட்டமிழக்காது 70 ஓட்டங்கள் எடுத்தார். கோல் டைடன்ஸ் அணியில் லஹிரு குமார 02 விக்கெட்டுக்களை எடுத்த போதும் அது வீணாகியிருந்தது 

>> பங்களாதேஷ் அணியின் தலைவராக சகீப் அல் ஹஸன் நியமனம்

போட்டியின் ஆட்டநாயகனாக அவிஷ்க பெர்னாண்டோ தெரிவாகினார். இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய கோல் டைடன்ஸ் அணி தொடரின் சுபர் 4 சுற்றுக்குத் தெரிவாக தமக்கு எஞ்சியிக்கும் இரண்டு போட்டிகளிலும் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்து காணப்படுகின்றது

போட்டியின் சுருக்கம்

Result


Dambulla Aura
134/3 (17.4)

Galle Titans
133/9 (20)

Batsmen R B 4s 6s SR
Tim Seifert b Binura Fernando 15 12 0 1 125.00
Shevon Daniel c Dushan Hemantha b Dhananjaya de Silva 7 9 1 0 77.78
Chad Bowes b Dushan Hemantha 22 18 3 0 122.22
Shakib Al Hasan b Noor Ahmad  13 13 1 0 100.00
Ashan Priyanjan st Kusal Mendis b Dushan Hemantha 9 14 0 0 64.29
Sohan de Livera b Hayden Kerr 12 11 1 0 109.09
Dasun Shanaka c Sadeera Samarawickrama b Hasan Ali 36 26 5 0 138.46
Lahiru Samarakoon run out (Kusal Mendis) 6 10 0 0 60.00
Richard Ngarava not out 3 2 0 0 150.00
Kasun Rajitha run out (Kusal Mendis) 1 5 0 0 20.00


Extras 9 (b 1 , lb 3 , nb 0, w 5, pen 0)
Total 133/9 (20 Overs, RR: 6.65)
Bowling O M R W Econ
Binura Fernando 4 0 14 1 3.50
Hasan Ali 4 0 27 1 6.75
Dhananjaya de Silva 2 0 14 1 7.00
Hayden Kerr 3 0 24 1 8.00
Dushan Hemantha 4 0 31 2 7.75
Noor Ahmad  3 0 19 1 6.33


Batsmen R B 4s 6s SR
Avishka Fernando not out 70 49 3 3 142.86
Kusal Mendis c Sohan de Livera b Lahiru Kumara 18 24 1 0 75.00
Sadeera Samarawickrama b Lahiru Kumara 25 18 4 0 138.89
Kusal Janith lbw b Shakib Al Hasan 5 8 0 0 62.50
Dhananjaya de Silva not out 6 7 1 0 85.71


Extras 10 (b 0 , lb 2 , nb 0, w 8, pen 0)
Total 134/3 (17.4 Overs, RR: 7.58)
Bowling O M R W Econ
Kasun Rajitha 3 0 12 0 4.00
Lahiru Kumara 4 0 31 2 7.75
Richard Ngarava 2.4 0 33 0 13.75
Shakib Al Hasan 4 0 20 1 5.00
Lahiru Samarakoon 1 0 8 0 8.00
Dasun Shanaka 1 0 12 0 12.00
Ashan Priyanjan 2 0 16 0 8.00



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<