பாகிஸ்தான் வராத வீரர்கள் இலங்கை அணியில் தமது இடத்தை இழக்கலாம்

107

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்காத இலங்கை வீரர்கள் அணியில் தமது இடத்தை இழப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்கு குழு தலைவர் அசந்த டி மெல் அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகளில் பங்கேற்கிறது. கராச்சியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி திங்கட்கிழமைக்கு (01) ஒத்திவைக்கப்பட்டுள்ளது

“நூறு சதவீத பாதுகாப்பை இந்தியாவாலும் வழங்க முடியாது” – ருமேஷ் ரத்நாயக்க

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சிறந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தாலும், நூறு சதவீத பாதுகாப்பை எந்த நாட்டினாலும் வழங்க…

பாதுகாப்பு காரணங்களை குறிப்பிட்டு இலங்கை ஒருநாள் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன மற்றும் டி20 அணித்தலைவர் லசித் மாலிங்க உட்பட 10 முன்னணி வீரர்கள் இந்த சுற்றுப்பயணத்தில் பங்கேற்கவில்லை

இங்கு (பாகிஸ்தான்) வராத வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வராமல் இருப்பதற்கு தீர்மானித்தார்கள். ஆனால் எந்த ஒரு விளையாட்டிலும் தமது இடத்தை வேறு ஒருவருக்கு கொடுத்தால் அதில் அவருக்கு அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது. வந்தவர் சிறப்பாக செயற்பட்டால் இருப்பவருக்கு சந்தர்ப்பம் நழுவிப்போகும்

எல்லோருக்கும் அப்படி நடக்காது. சில வேளை அப்படி நடக்கலாம். அது அவர்கள் செய்த ஆபத்தான வேலை

நான் அவர்களிடம் பேசும்போது, பாகிஸ்தானுக்கு வருவதும் வராமல் இருப்பது தமது விருப்பம். அதற்கு நாம் எந்த அழுத்தமும் கொடுக்கப்போவதில்லை. ஆனால், தமது இடத்தை வேறு யாருக்காவது கொடுத்து அவர்கள் சிறப்பாக செயற்பட்டால் அவர்களை ஒரேயடியாக அணியில் இருந்து நீக்க முடியாது என்று அறிவுறுத்தினேன். இந்த நிலையை சாதகமாகவே பார்க்கிறேன் என்று கராச்சி சென்றிருக்கும் ஹசந்த டி மெல்  செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

இதன்போது பாகிஸ்தானில் இலங்கை அணிக்கு கிடைக்கு வரவேற்பு மற்றும் பாதுகாப்பு குறித்தும் அவர் சிலாகித்து பேசினார்

நாம் இங்கு (பாகிஸ்தான்) வந்தது பற்றி இங்குள்ள மக்கள் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். மனதளவில் வீரர்கள் இந்தப் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற உணர்வுடனேயே உள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு பற்றிய பிரச்சினை இல்லை

ஜனாதிபதி ஒருவர் நாட்டுக்கு வரும்போது வழங்கும் பாதுகாப்பு ஒன்றே வழங்கப்பட்டுள்ளது. நாம் செல்லும்போது வீதிகள் மூடப்பட்டு, கட்டடங்களுக்கு மேல் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே செல்கிறோம்

குண்டு துளைக்காத வாகனங்களில் செல்கிறோம். பத்து அடிக்கு ஒரு இராணுவ வீரர் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தப்பட்டுள்ளனர். முழுமையாக பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஹெலிகொப்டர் ஒன்றும் மேலால் செல்கிறது. இலங்கையில் கூட இவ்வாறான பாதுகாப்பு ஒன்றை எமக்குத் தர முடியாது என்று குறிப்பிட்டார்.

சொந்த மண்ணில் அணியை வழிநடாத்துவது பெரிய கௌரவம் – சர்பராஸ் அஹ்மட்

கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை…

இலங்கை ஒருநாள் குழாம் லஹிரு திரிமான்ன தலைமையிலும் டி20 குழாம் தசுன் ஷானக்க தலைமையிலும் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருப்பதோடு இளம் வீரர்கள் பலரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்

தற்போதுள்ள அணியை பார்க்கும்போது இது நல்ல சந்தர்ப்பமாக நான் கருதுகிறான். இதன்மூலம் எமது அணி வலுவாக உள்ளது என்பது தெரிகிறது. இந்த வீரர்கள் தேவையான திறமையுடன் இருக்கிறார்கள் என்று தெரிவுக்குழு தலைவராக என்னால் திருப்தி அடைய முடியும்

எமக்கு எப்போதும் ஒரு வீரர் பற்றி மாத்திரமே எதிர்பார்ப்புக் கொண்டிருக்க முடியாது. ஏனென்றால் வீரர்களுக்கு காயங்கள் ஏற்படக் கூடும். (வர மறுத்த 10 வீரர்களில்) மூன்று நான்கு வீரர்கள் மாத்திரமே இந்த ஒருநாள் குழாத்தில் இடம்பெறவிருந்தனர்

தற்போதிருக்கும் வீரர்கள் இந்தத் தொடரில் சிறப்பாக செயற்பட்டு ஏனைய வீரர்களுக்கு சவால் கொடுக்கவே எதிர்பார்த்திருக்கின்றனர். இது அவர்களுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பம் என்று ஹசந்த டி மேல் தெரிவித்தார்.  

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<