400 மீற்றர் உலக சம்பியனான சல்வா நாஸருக்கு இடைக் காலத்தடை

161

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனைக்கு எதிரான விதிமுறைகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் உலக சம்பியனான பஹ்ரைன் நாட்டு வீராங்கனை சல்வா ஈத் நாஸருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து தொடர்பாக நடத்தப்படும் வைத்திய பரிசோதனைகளுக்கு சமூகமளிக்கத் தவறியதை அடுத்து சல்வா மீது இடைக்காலத் தடை விதிக்க உலக மெய்வல்லுனர் சங்கத்தின் சுயாதீன நேர்மைத்துவ குழு நடவடிக்கை எடுத்துள்ளது

SAG பதக்கம் வென்ற மூன்று பாகிஸ்தான் வீரர்களுக்கு ஊக்கமருந்து குற்றச்சாட்டு

இதுதொடர்பில், உலக மெய்வல்லுனர் சங்கத்தின் சுயாதீன நேர்மைத்துவ குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கடந்த வருடம் தோஹாவில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கு முன் சல்வா ஊக்கமருந்து பரிசோதனைக்காக தான் எங்கே இருக்கிறேன் என்ற தகவலை முன்கூட்டியே தெரிவிக்க மூன்று முறை தவறினார். 

ஆனால் அப்போது அவர் இடைநீக்கம் செய்யப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் அவர் இதே தவறை மீண்டும் செய்தார். 4ஆவது முறையாக ஊக்கமருந்து தடுப்பு விதியை மீறியதால் இடைநீக்கம் செய்யப்பட்டார்

அடுத்ததாக ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது

இந்த நிலையில், தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊக்கமருந்து குற்றச்சாட்டு தொடர்பில் 22 வயதான சல்வா கருத்து தெரிவிக்கையில்

கடந்த வருடம் கட்டாரில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக மூன்று முறை ஊக்கமருந்து பரிசோதனையை தவற விட்டேன். இது இயல்பான ஒன்று. யாருக்கும் இது போல் நடக்கத்தான் செய்யும்

மக்களை நான் குழப்பமடையச் செய்ய விரும்பவில்லை. ஏனெனில் நான் ஒரு போதும் விளையாட்டில் மோசடி செய்தது கிடையாது. விரைவில் இந்த பிரச்சினை சரியாகும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்

ஊக்கமருந்து சந்தேகத்தில் கென்ய மரதன் ஓட்ட வீரருக்கு போட்டித்தடை

நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், கடந்த வருடம் தோஹாவில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 48.14 செக்கன்களில் நிறைவு செய்து 34 வருடங்களின் பிறகு 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கான அதிவேக நேரத்தைப் பதிவு செய்திருந்தார்.

எனினும், ஆசிய சாதனையுடன் குறித்த நேரத்தைப் பதிவுசெய்த வீராங்கனைகளில் அவருக்கு உலகளவில் 3ஆவது இடத்தைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.  

அத்துடன், பெண்களுக்கான 4 x 100 அஞ்சலோட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பஹ்ரைன் அணியிலும் அவர் இடம்பெற்றிருந்தார்

உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2022க்கு ஒத்திவைப்பு

எதுஎவ்வாறாயினும், சல்வா ஈத் நஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இரண்டு வருடங்கள் வரை தடை விதிக்கப்படும். அத்துடன், கடந்த வருடம் அவர் வெற்றி கொண்ட உலக சம்பியன்ஷிப் தங்கப் பதக்கமும் பறிக்கப்படலாம்

இதனிடையே, அடுத்த வருடம் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் அவருக்கு பங்குபற்ற தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக, சல்வா ஈத் நஸாருடன் பயிற்சிபெற்ற நைஜீரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட முன்னாள் சக வீராங்கனைகளான கெமி ஆதெகோயா, செமுவல் பிரான்சிஸ் ஆகியோர் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிக்கி தடைக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<