இலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தியகமவில்

253

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சகல விளையாட்டுப் போட்டிகளும் தடைப்படுள்ள நிலையில், இலங்கையில் இதுவரை காலமும் குறைபாடாக இருந்து வந்த விளையாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான வேலைகளை விளையாட்டுத்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சர்வதேச தரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குறித்த பல்கலைக்கழகமானது ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கை அண்மித்துள்ள 126 ஏக்கர் காணியில் இவ்வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா…

இதன்படி, கிரிக்கெட், றக்பி, கால்பந்தாட்டம், எல்லே, மெய்வல்லுனர் ஆகியவற்றுக்கான மைதானங்கள் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், பெட்மின்டன், போன்ற விளையாட்டுக்களுக்கான உள்ளக அரங்குகள், நீச்சல் தடாகம், உடற்பயிற்சி நிலையங்கள் என விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்து வசதிகளும் விளையாட்டுப் பல்கலைக்கழ வளாகத்தில் நிர்மானிக்கப்படவுள்ளது

இதற்கான வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் வழங்கவென ஊவா பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர கலாநிதி எம்புல்தெனிய தலைமையிலான நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விளையாட்டுத்துறை அமைச்சில் இருந்து பல்கலைக்கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விளையாட்டுத்துறை பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படவுள்ள காணியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, விளையாட்டுத்துறை செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்த்ர, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ ஆகியோர் கடந்த 5ஆம் திகதி நேரடியாகச் சென்று பார்வையிட்டார்

இதன்போது கருத்து வெளியிட்ட விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, உலகில் உள்ள அனைத்து விளையாட்டுக்களையும் உள்ளடக்கியதாக சகல வசதிகளையும் கொண்ட விளையாட்டுப் பல்கலைக்கழம் தியகமவில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கொள்கைப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்ட விளையாட்டுத்துறை பொருளாதாரம் (Sports Economy)  குறித்த எண்ணக்கருவை இந்நாட்டில் கட்டியெழுப்பும் நோக்கில் அமைச்சரவை அனுமதியுடன் இந்தப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்படவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

அத்துடன், இந்த பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகள் 2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பூர்த்தி செய்யப்பட்டு திறந்துவைக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழு இதுவரை 14 தடவைகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருப்பதாகவும், அதன் ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இதன்போது தெரிவித்தார்

விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு 5,000 ரூபா உதவித் தொகை

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்சியார்களுக்கு உதவ..

அத்துடன், விளையாட்டுப் பல்கலைக்கழத்தில் நடைபெறவுள்ள பாடங்கள், விரிவுரைகள் மற்றும் அதற்கான காலப்பகுதி என்பன குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன

நாட்டின் நிலைமைகள் வழமைக்கு திரும்பிய பிறகு எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் முதலாவது குழுவுக்கான விரிவுரைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

இதன்படி, விளையாட்டுப் பல்கலைக்கழத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட தகுதியாக தேசிய மட்டத்தில் எந்தவொரு விளையாட்டிலும் ஈடுபட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<