விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு 5,000 ரூபா உதவித் தொகை

95
Ministry of sports

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பயிற்சியார்களுக்கு உதவ விளையாட்டுத்துறை அமைச்சு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. 

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய, கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கும் உதவி தொகையொன்று வழங்கப்படவுள்ளது.  

கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா…

இதன்படி, கொரோனாவினால் நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டுத்துறை பயிற்சியாளர்களுக்கும் தலா 5,000 ரூபா நிதியினை வழங்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.   

இந்த உதவித் தொகையானது மாதாந்த வருமானம் இல்லாமல், அரச அல்லது வேறு ஏதாவது முறையில் நிதி உதவிகள் கிடைக்காத விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு இந்த நிதியினை வழங்கி வைக்குமாறு நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.  

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் தொடர்பில் எமக்கு எந்தவொரு தகவலும் தெரியாது. அந்தந்த விளையாட்டு சங்கங்கள் ஊடாகத் தான் அவர்களது விபரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  

எனவே, கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்குத் தேவையான நிதியினனைப் வழங்குமாறு நாங்கள் அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளோம்

Super Market வேலைக்குச் செல்லும் ஆஸி. கிரிக்கெட் சபை ஊழியர்கள்

கொரோனா வைரஸ் எதிரொலியினால் வேலை இழந்துள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட்..

இதன்படி. மிகவும் ஷ்டத்துக்கு மத்தியில் உள்ள பயிற்சியாளர்கள் தத்தமது சங்கங்களின் தலைவர்ளை தொடர்புகொண்டு இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்” என தெரிவித்தார்.  

இது இவ்வாறிருக்க, கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் யாராவது இருப்பின் உடனடியாக தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு அறிவிக்குமாறு அனைத்து நாட்டின் அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.  

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்நாங்கள் அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் இதுகுறித்து ஒருவாரத்துக்கு முன் தெரியப்படுத்தி விட்டோம். தற்போது பல வீரர்கள் எம்மை தொடர்புகொண்டு உதவிகளை கேட்டுள்ளார்கள்

குறிப்பாக, இந்த அறிவிப்பினை அடுத்து புத்தளம் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள வீராங்கனையொருவர் தனக்கு உதவி செய்து கொடுக்குமாறு கேட்டிருந்தார். உடனடியாக அதை நாங்கள் செய்து கொடுத்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.  

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<