ரோயல் மற்றும் மஹிந்த கல்லூரிகள் காலிறுதிக்கு தகுதி

131

சிங்கர் 17 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் காலிறுதிக்கு முந்திய போட்டியில் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் காலி மஹிந்த கல்லூரி ஆகியன காலிறுதிக்கான வாய்ப்பை இன்று (20) தக்கவைத்துள்ளன.

இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்திய நொக் அவுட் சுற்றுப் போட்டியில் காலி மஹிந்த கல்லூரி, மொரட்டுவ பிரின்ஸ் ஒப்  வேல்ஸ் கல்லூரியை எதிர்கொண்டதுடன், கொழும்பு ரோயல் கல்லூரி, களனி குருகுல கல்லூரியை எதிர்கொண்டு விளையாடியது.

மாலிங்கவின் எதிர்காலம் குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழு

முன்னணி வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்கவின் திறமையை பார்த்து அவர் இணைக்கப்படுவது…

இதில் திதிர வீரசிங்க மற்றும் கமில் மிஷார ஆகியோரின் அபார அரைச்சதங்களின் உதவியுடன் ரோயல் கல்லூரி அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதுடன்,  இறுதித் தருணம் வரை கணிக்க முடியாமலிருந்த காலி மஹிந்த கல்லூரி கல்லூரி மற்றும் மொரட்டுவ பிரின்ஸ் ஒப்  வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மஹிந்த கல்லூரி அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றிபெற்றது.

காலி மஹிந்த கல்லூரி எதிர் பிரின்ஸ் ஒப்  வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரின்ஸ் ஒப்  வேல்ஸ் கல்லூரி அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது.

இதன்படி முதலில் துடுப்பாடிய பிரின்ஸ் ஒப்  வேல்ஸ் அணி உபெக பெர்னாண்டோ மற்றும் அனுப ஹெஷான் ஆகியோரின் அரைச்சதத்தின் உதவியுடன் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் உபெக பெர்னாண்டோ 69 ஓட்டங்களையும், அனுப ஹெஷான் 53 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுக்க, காலி மஹிந்த கல்லூரி அணி சார்பில் கவீஷ விமுக்தி 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மஹிந்த கல்லூரி, தடுமாற்றத்துக்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய போதும், ஒரு விக்கெட் கைவசமிருக்க 47.4 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

மஹிந்த கல்லூரி சார்பில் அதிகபட்சமாக சிதிர ஹெலித 41 ஓட்டங்களையும், சக்ய சம்பத் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, நவோத் பர்னவிதான 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பிரின்ஸ் ஒப்  வேல்ஸ் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் அஷான் பெர்னாண்டோ 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லக்ஷான் பெரேரா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப்  வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவ – 157 (49.4) – உபேக பெர்னாண்டோ 69, அனுப ஹேஷான் 51, கவீஷ விமுக்தி 17/2

மஹிந்த கல்லூரி, காலி – 158/9 (47.4) – சிதிர ஹெலித 41, சக்ய சம்பத் 24, நவோத் பர்னவிதான 23, அஷான் பெர்னாண்டோ 24/3, லக்ஷான் பெரேரா 18/2

முடிவு காலி மஹிந்த கல்லூரி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


ரோயல் கல்லூரி, கொழும்பு எதிர் குருகுல கல்லூரி, களனி

மஹர சிறைச்சாலை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய கொழும்பு ரோயல் கல்லூரி அணி 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்திருந்தது.

எதிரணிக்கு சவாலாக இருக்கும் அகிலவின் மாய சுழல்

பல்லேகலை மைதானத்தில் கடந்த வாரம் தென்னாபிரிக்க அணியுடனான ஒரு நாள் தொடரின் போது…

களனி குருகுல கல்லூரியின் பணிப்பின்படி முதலில் துடுப்பெடுத்தடிய ரோயல் கல்லூரி அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை குவித்தது.

ரோயல் கல்லூரி சார்பில் திதிர வீரசிங்க 58 ஓட்டங்களையும், கமில் மிஷார 55 ஓட்டங்களையும் பெற்றதுடன், இசிவர திசாநாயக்க 49 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை தவறவிட்டார்.

குருகுல கல்லூரி சார்பாக பந்து வீச்சில் சஷித அசான் மற்றும் பிரவின் நிமேஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட சவாலான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குருகுல கல்லூரி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38.1 ஓவர்களில் 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

குருகுல கல்லூரி சார்பில் அதிகபட்சமாக, தெமிர நயந்தரு 31 ஓட்டங்களையும், லிக்ஷான் சாசங்க 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க, ரோயல் கல்லூரி சார்பில் பந்துவீச்சில் மனுல பெரேரா 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், லஹிரு மதுசங்க 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் சுருக்கம்

ரோயல் கல்லூரி, கொழும்பு – 246/8 (50) – திதிர வீரசிங்க 58, கமில் மிஷார 55, இசிவர திசாநாயக்க 49, தெவிந்து சேனாரத்ன 29, சஷித அஷான் 39/2, பிரவின் நிமேஷ் 28/2

குருகுல கல்லூரி, களனி – 133 (38.1) – தெமிர நயந்தரு 31, லிக்ஷான் சாசங்க 29, சிதிஜ சமோத் 28, லஹிரு மதுஷங்க 27/4, மனுல பெரேரா 15/3

முடிவு கொழும்பு ரோயல் கல்லூரி 113 ஓட்டங்களால் வெற்றி

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க