Home Tamil சந்திமால் – தனன்ஞய இணைப்பாட்டத்தில் வலுப்பெற்ற இலங்கை

சந்திமால் – தனன்ஞய இணைப்பாட்டத்தில் வலுப்பெற்ற இலங்கை

289

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ”பொக்சிங் டே”, டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை கிரிக்கெட் அணி தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோரின் இணைப்பாட்டத்துடன் வலுப்பெற்றிருக்கின்றது.

மிக்கி ஆத்தர் எம்முடன் இருப்பது அதிஷ்டம் – திமுத் கருணாரத்ன

ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக தென்னாபிரிக்க மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு வீரர்களுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றது. அந்தவகையில், குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சூரியன் நகரில் இன்று (26) தொடங்கியிருந்தது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்திருந்தார். 

இப்போட்டிக்கான இலங்கை அணியில் இணைக்கப்பட்டிருந்த வனிந்து ஹஸரங்க டெஸ்ட் போட்டிகளில் முதல்தடவையாக அறிமுகம் பெற்றிருக்க, குயின்டன் டி கொக் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் வேகப் பந்துவீச்சாளரான லுத்தோ சிபம்லாவினை இப்போட்டி மூலம் டெஸ்டில் அறிமுகம் செய்திருந்தது. 

இலங்கை அணி – திமுத் கருணாரத்ன (தலைவர்), குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், தனன்ஞய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித

தென்னாபிரிக்க அணி –எய்டன் மார்க்ரம், டீன் எல்கார், ரஸ்ஸி வன்டர்டஸ்ஸேன், பாப் டு பிளேசிஸ், டெம்பா பெவுமா, குயின்டன் டி கொக், வியான் முல்டர், என்ட்ரிச் நோர்கியா, கேசவ் மஹராஜ், லுத்தோ சிபம்லா, லுங்கி என்கிடி

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைவாக போட்டியில் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக திமுத் கருணாரத்ன மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோர் களம் வந்தனர். 

எனினும், தொடக்கத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களை சமாளிக்கத் தவறிய இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன (26), குசல் ஜனித் பெரேரா (16) ஆகியோர் எதிர்பார்க்காத ஆட்டத்தினை வெளிப்படுத்தி ஆட்டமிழந்தனர். அதேநேரம், முன்வரிசை வீரரான குசல் மெண்டிசும் (12) ஏமாற்றினார். இதனால், ஒரு கட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

இங்கிலாந்தின் பிரபல்ய கிரிக்கெட் வர்ணனையாளர் மரணம்

ஆனால், இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த தினேஷ் சந்திமால் மற்றும் தனன்ஞய டி சில்வா ஆகியோர் பொறுமையான முறையில் இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினர். இந்த இரண்டு வீரர்களினதும் இணப்பாட்டம் போட்டியின் முதல் நாளின் மதிய போசண இடைவேளையினை தொடர்ந்தும் நீடித்தது. தொடர்ந்து, இரண்டு வீரர்களும் நான்காம் விக்கெட்டுக்காக 134 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்த நிலையில் தனன்ஞய டி சில்வா தசை உபாதை ஒன்றினால் மைதானத்தினை விட்டு வெளியேறினார்.

தனன்ஞய டி சில்வா மைதானத்தினை விட்டு வெளியேறும் போது அவரின் 7ஆவது டெஸ்ட் அரைச்சதத்துடன் 79 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தனன்ஞய டி சில்வா தினேஷ் சந்திமாலுடன் இணைந்து பகிர்ந்த 134 ஓட்டங்கள் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக இலங்கை வீரர்கள் நான்காம் விக்கெட்டுக்காக பகிர்ந்த அதிகூடிய இணைப்பாட்டமாகவும் மாறியது. 

பின்னர், முதல் நாளின் தேநீர் இடைவேளை வரையில் தினேஷ் சந்திமால் தான் டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட 19ஆவது அரைச்சதத்துடன் இலங்கைத் தரப்பினை வலுப்படுத்தினார். 

இதனையடுத்து முதல் நாளின் மூன்றாம் இடைவெளியில் தினேஷ் சந்திமாலின் விக்கெட் பறிபோயிருந்தது. தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்கும் போது 11 பௌண்டரிகள் அடங்கலாக 161 பந்துகளுக்கு 85 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் திட்டமிட்டப்படி நடக்கும் – SLC

மறுமுனையில், நிரோஷன் டிக்வெல்லவும் இலங்கை அணிக்காக நிதானமான முறையில் ஓட்டங்கள் பெற்று பெறுமதி சேர்ந்திருந்தார். இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு இலங்கை கிரிக்கெட் அணி போட்டியின் முதல்நாள் நிறைவில் 85 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 340 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் நிரோஷன் டிக்வெல்ல 6 பௌண்டரிகள் அடங்கலாக 86 பந்துகளில் 49 ஓட்டங்களை எடுத்திருந்தார். அதேநேரம், களத்தில் ஆட்டமிழக்காமல் நிற்கும் தசுன் ஷானக்க 25 ஓட்டங்களையும், கசுன் ராஜித 7 ஓட்டங்களையும் பெற்றிருக்கின்றனர். 

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வியான் முல்டர் 3 விக்கெட்டுக்களையும் லுங்கி ன்கிடி, லுத்தோ சிபம்லா மற்றும் என்ட்ரிஜ் நோர்கியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தனர். 

முதல்நாள் சுருக்கம்

Result


South Africa
621/10 (142.1)

Sri Lanka
396/10 (96) & 180/10 (46.1)

Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne b Lungi Ngidi 22 20 4 0 110.00
Kusal Perera c Quinton de Kock b Wiaan Mulder 16 29 2 0 55.17
Kusal Mendis c Lungi Ngidi b Anrich Nortje 12 16 2 0 75.00
Dinesh Chandimal c Faf du Plessis b Wiaan Mulder 85 161 11 0 52.80
Dhananjaya de Silva retired 79 105 11 1 75.24
Niroshan Dickwella lbw b Wiaan Mulder 49 86 6 0 56.98
Dasun Shanaka not out 66 87 3 5 75.86
Wanindu Hasaranga b Lutho Sipamla 18 20 3 0 90.00
Kasun Rajitha c Dean Elgar b Lutho Sipamla 12 49 2 0 24.49
Vishwa Fernando b Lutho Sipamla 0 1 0 0 0.00
Lahiru Kumara c Rassie van der Dussen b Lutho Sipamla 0 7 0 0 0.00


Extras 37 (b 16 , lb 9 , nb 6, w 6, pen 0)
Total 396/10 (96 Overs, RR: 4.12)
Fall of Wickets 1-28 (4.5) Dimuth Karunarathne, 2-54 (9.5) Kusal Mendis, 3-54 (10.5) Kusal Perera, 4-284 (65.4) Dinesh Chandimal, 5-296 (70.3) Niroshan Dickwella, 6-320 (76.3) Wanindu Hasaranga, 7-387 (93.2) Kasun Rajitha, 8-387 (93.3) Vishwa Fernando, 9-396 (95.6) Lahiru Kumara,

Bowling O M R W Econ
Lungi Ngidi 19 3 64 1 3.37
Lutho Sipamla 16 1 76 4 4.75
Anrich Nortje 22 3 88 1 4.00
Wiaan Mulder 20 4 69 3 3.45
Keshav Maharaj 19 3 74 0 3.89
Batsmen R B 4s 6s SR
Dean Elgar c & b Dasun Shanaka 95 130 16 0 73.08
Aiden Markram c Dasun Shanaka b Vishwa Fernando 68 94 14 0 72.34
Rassie van der Dussen c Niroshan Dickwella b Lahiru Kumara 15 42 2 0 35.71
Faf du Plessis c & b 199 276 24 0 72.10
Quinton de Kock c Lahiru Thirimanne b Wanindu Hasaranga 18 11 3 0 163.64
Temba Bavuma c Niroshan Dickwella b Dasun Shanaka 71 125 7 0 56.80
Wiaan Mulder c Niroshan Dickwella b Wanindu Hasaranga 36 63 4 1 57.14
Keshav Maharaj c Wanindu Hasaranga b Vishwa Fernando 73 106 6 2 68.87
Anrich Nortje c Niroshan Dickwella b Vishwa Fernando 0 3 0 0 0.00
Lutho Sipamla lbw b Wanindu Hasaranga 0 1 0 0 0.00
Lungi Ngidi not out 2 9 0 0 22.22


Extras 44 (b 9 , lb 18 , nb 7, w 10, pen 0)
Total 621/10 (142.1 Overs, RR: 4.37)
Fall of Wickets 1-141 (28.4) Aiden Markram, 2-200 (42.6) Rassie van der Dussen, 3-200 (43.4) Dean Elgar, 4-220 (47.1) Quinton de Kock,

Bowling O M R W Econ
Vishwa Fernando 31.1 2 130 2 4.18
Kasun Rajitha 2.1 0 16 0 7.62
Dasun Shanaka 28.5 2 98 2 3.44
Wanindu Hasaranga 45 5 171 4 3.80
Lahiru Kumara 21.1 0 103 1 4.88
Dimuth Karunarathne 6.5 0 36 0 5.54
Kusal Mendis 7 0 41 0 5.86


Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne b Lungi Ngidi 6 8 1 0 75.00
Kusal Perera c Quinton de Kock b Anrich Nortje 64 87 10 0 73.56
Kusal Mendis c Rassie van der Dussen b Lungi Ngidi 0 5 0 0 0.00
Dinesh Chandimal b Wiaan Mulder 25 45 4 0 55.56
Niroshan Dickwella c Quinton de Kock b Wiaan Mulder 10 15 2 0 66.67
Dasun Shanaka c Quinton de Kock b Lutho Sipamla 6 35 0 0 17.14
Wanindu Hasaranga c Temba Bavuma b Lutho Sipamla 59 53 12 1 111.32
Vishwa Fernando run out (Wiaan Mulder) 0 1 0 0 0.00
Kasun Rajitha c Keshav Maharaj b Anrich Nortje 0 27 0 0 0.00
Lahiru Kumara not out 0 5 0 0 0.00
Dhananjaya de Silva retired 0 0 0 0 0.00


Extras 10 (b 4 , lb 2 , nb 4, w 0, pen 0)
Total 180/10 (46.1 Overs, RR: 3.9)
Fall of Wickets 1-10 (2.6) Dimuth Karunarathne, 2-22 (4.5) Kusal Mendis, 3-85 (19.5) Dinesh Chandimal, 4-99 (23.6) Niroshan Dickwella, 5-114 (28.4) Kusal Perera, 6-142 (35.5) Dasun Shanaka, 7-148 (36.6) Vishwa Fernando, 8-179 (45.2) Wanindu Hasaranga, 9-180 (46.1) Kasun Rajitha,

Bowling O M R W Econ
Lungi Ngidi 10 2 38 2 3.80
Anrich Nortje 10.1 1 47 2 4.65
Wiaan Mulder 12 1 39 2 3.25
Lutho Sipamla 5 0 24 2 4.80
Keshav Maharaj 6 3 20 0 3.33
Aiden Markram 3 2 6 0 2.00



போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும் 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<