பங்களாதேஷிடம் போராடித் தோற்றது இலங்கை

233
 

பஹ்ரைனில் நடைபெறும் 23 வயதுக்கு உட்பட்ட ”2020 AFC கால்பந்து சம்பியன்ஷிப்” தொடருக்கான தகுதிகாண் போட்டியில் ஏமாற்றம் அளித்த இலங்கை அணி பங்களாதேஷுடனான B குழுவுக்கான தனது கடைசி போட்டியிலும் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இரு அணிகளும் 48 மணி நேரத்திற்கு முன்னர் இந்த தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் இஸா நகரின், கலீபா விளையாட்டு அரங்கில் நேற்று (26) நடைபெற்ற போட்டியில் மோதின.

பஹ்ரைனிடமும் இலங்கைக்கு மோசமான தோல்வி

தற்போது இடம்பெற்று வரும் 23 வயதுக்கு …….

ஆட்டத்தின் ஆரம்ப 20 நிமிடங்களுக்குள்ளேயே இரண்டு கோல்களை பெற்று பங்களாதேஷ் அணியால் வெற்றியை உறுதி செய்ய முடிந்தது. பலஸ்தீன் மற்றும் பஹ்ரைன் அணிகளுக்கு எதிரான முதல் இரு போட்டிகளிலும் மொத்தம் 18 கோல்களை விட்டுக்கொடுத்த இலங்கை 23 வயதுக்கு உட்பட்ட அணி இந்தப் போட்டியில் தமது திறமையில் முன்னேற்றத்தை வெளிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.   

இங்கிலாந்து பயிற்சியாளர் ஜேம்ஸ் டேயின் கீழ் பங்களாதேஷ் அணி பஹ்ரைன் மற்றும் பலஸ்தீனத்திற்கு எதிரான போட்டிகளில் தலா 0-1 என்ற குறுகிய கோல் வித்தியாசத்திலேயே தோல்வியை சந்தித்தது. எனினும், இலங்கையுடனான போட்டியில் ஐந்தாவது நிமிடத்திலேயே பிப்லோ அஹமதுவின் மூலம் பங்களாதேஷ் முதல் கோலை போட்டது.

மேலும் 13 நிமிடங்கள் கழித்து பங்களாதேஷ் வீரர்கள் மேலும் வலுவாக இலங்கை கோல் எல்லையை ஆக்கிரமித்தனர். டுடுல் பாத்ஷா பரிமாற்றிய பந்தை அபாஹினி வேகமாக உதைக்க அது கோல்காப்பாளரையும் தாண்டி வலைக்குள் சென்றது.  

முதல் பாதி இலங்கை 0 – 2 பங்களாதேஷ்

கடந்த போட்டிகள் போன்ற பரிதாப நிலை ஒன்று ஏற்படுவதை தவிர்த்துக் கொண்ட இலங்கை வீரர்கள் போட்டியின் எஞ்சிய பாகம் முழுவதும் சிறப்பாக செயற்பட்டனர்.  

பலஸ்தீனத்தின் கோல் மழையில் நனைந்த இலங்கை

பஹ்ரைனின், கலீபா விளையாட்டு அரங்கில் ……

பின்களத்தில் முன்னேற்றத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியினர், எதிரணிக்கு அரணாக இருந்து கோல் விட்டுக்கொடுப்பதை தவிர்த்தனர்.    

எனவே, இந்த தகுதிகாண் தொடரின் குழு நிலைப் போட்டிகள் அனைத்திலும் தோல்வி கண்ட இலங்கை 23 வயதின் கீழ் அணி B குழுவில் இறுதி இடத்தைப் பெற்றுக்கொண்டது.   

நேற்றைய மற்றொரு போட்டியில் பலஸ்தீன் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி கொண்ட பஹ்ரைன் அணி B குழுவில் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டது.  

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<