கொழும்பு கிங்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹெர்ஷல் கிப்ஸ்!

Lanka Premier League 2020 – Coverage powered by MyCola

830

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹெர்ஷல் கிப்ஸ், லங்கா ப்ரீமியர் லீக் அணியான கொழும்பு கிங்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக கபீர் அலி, கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஹெர்ஷல் கிப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

கபீர் அலியின் நியமனத்துக்கு முதல், இலங்கை கிரிக்கெட் அணி 1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பயிற்றுவிப்பாளரான டேவ் வட்மோர், கொழும்பு கிங்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக டேவ் வட்மோர் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார்.

ஹெர்ஷல் கிப்ஸ் தென்னாபிரிக்க அணிக்காக விளையாடி 14,661 ஓட்டங்களை குவித்துள்ளதுடன், தொன்னாபிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பல T20 அணிகளுக்கு பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார். எவ்வாறாயினும், ஹெர்ஷல் கிப்ஸ் ஆரம்பத்தில், தொலைக்காட்சி போட்டி வர்னணையாளராகவே, லங்கா ப்ரீமியர் லீக்கில் இணைக்கப்பட்டிருந்தார்.

அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹெர்ஷல் கிப்ஸ் செயற்படவுள்ளதுடன், உதவி பயிற்றுவிப்பாளராக ரங்கன ஹேரத் செயற்படவுள்ளார். ஏற்கனவே, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ், உதவி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த போதும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவரால் அணியுடன் இணையமுடியவில்லை என கொழும்பு கிங்ஸ் அணியின் ஊடகபேச்சாளர் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிங்ஸ் தலைமை பயிற்றுவிப்பாளருக்கு கொவிட்-19 தொற்று

ரங்கன ஹேரத் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 433 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இடதுகை சுழல் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளவர் என்பதுடன், உள்நாட்டு கழகமான தமிழ் யூனியன் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார்.

கொழும்பு கிங்ஸ் அணியை ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த பாஷா குழுமம் வாங்கியுள்ள நிலையில், இந்த அணி தொடரின் முதல் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. முதல் போட்டியானது எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ளதுடன், போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<