FFSL மூலம் தேசிய கொவிட் 19 நிதிக்கு இரண்டு மில்லியன் நன்கொடை

83

இலங்கையில் கொவிட்-19 வைரஸ் பாதிப்புள்ளாகியுள்ளவர்களின் நலன் கருதி, 2 மில்லியன் ரூபாவினை தேசிய கொவிட்-19 நிதிக்கு, இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) நன்கொடையாக வழங்கியுள்ளது.

கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள கால்பந்து சமுகத்திற்கு உதவுவதற்காகவும், அன்றாட கால்பந்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காகவும், 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு பிஃபா வழங்கியுள்ளது.

மெஸ்ஸியை விட மரடோனா சிறந்த வீரரா? – கென்னவரோ

குறிப்பிட்ட இந்த நிதி இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துக்கு கிடைத்த பின்னர், அதில் ஒரு பங்கினை கொவிட்-19 நிவாரண நிதிக்கு வழங்குவதாக, கால்பந்து சம்மேளனம் அறிவித்திருந்தது. அதன்படி, 2 மில்லியன் ரூபாவினை கடந்த 14ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, கொவிட்-19 நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக கால்பந்து சம்மேளனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிதியானது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் சார்பாக, ஜனாதிபதி சேவை ஊழியர்களின் தலைமை பணிப்பாளராக கடமையாற்றுகின்ற ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கெ.பி.எகொடவெலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

குறித்த இந்த நிகழ்வில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தில் தலைவர் அனுர டி சில்வா, பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர், விசேட செயற்குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் அதுல கொடிப்பிலி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நெய்மார், ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரை விட சிறந்த வீரர் நானே – எடில்சன்

இலங்கை கால்பந்தாடட் சம்மேளனம் தற்சமயம் கழகங்கள், பிராந்திய லீக்குகள், வீரர்கள், மத்தியஸ்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள், முன்னாள் இலங்கை அணி வீரர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. பிஃபாவின் ஊடாக பெறப்பட்டுள்ள நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளுக்காக இதுவரையில் 23 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அதேவேளை, இலங்கையில் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக பிஃபா மற்றும் ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனம் என்பவற்றிடம், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மேலும் உதவிகளை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கால்பந்து செய்திகளை படிக்க…