இலங்கை T20 அணியின் தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ்

894
AFP

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மார்ச் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில், இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக தலைவராக அஞ்செலோ மெதிவ்ஸ் செயற்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள், T20I குழாத்தை அறிவித்த மே.தீவுகள்

மேற்கிந்திய தீவுகளுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்பவற்றில் விளையாடவிருக்கின்றது. 

இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை T20 அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்ட தசுன் ஷானக்கவிற்கு, அவரின் கடவுச்சீட்டு பிரச்சினையினால் மேற்கிந்திய தீவுகள் செல்வதற்கான அமெரிக்க வீசாவினை பெற முடியாமல் போயிருந்தது. இதனால், தசுன் ஷானக்க இன்னும் மேற்கிந்திய தீவுகள் பயணமாகவில்லை. 

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றிலேயே, இலங்கையின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப் பயணத்தில் முதலாவதாக நடைபெறவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட T20i தொடரில் இலங்கை அணியினை வழிநடாத்தும் பொறுப்பு அஞ்செலோ மெதிவ்ஸிற்கு வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.  

வீசா சிக்கலால் மே.தீவுகள் பயணிக்க தவறிய தசுன் ஷானக!

அதேநேரம், தசுன் ஷானக்க தனது வீசா பிரச்சினையினை நிவர்த்தி செய்த பின்னர், மேற்கிந்திய தீவுகள் சென்றிருக்கும் இலங்கை அணியுடன் இணைந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<