மெஸ்ஸியை விட மரடோனா சிறந்த வீரரா? – கென்னவரோ

102
en.as.com
 

லியொனல் மெஸ்ஸியை விட, ஆர்ஜன்டீன முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மரடோனா சற்று உயர்ந்தவர் என்பதை, முன்னாள் இத்தாலி கால்பந்து வீரர் பெபியோ கென்னவரோ வெளிப்படுத்தியுள்ளார்.

லியொனல் மெஸ்ஸி மிகச்சிறந்த கால்பந்து வீரராக இருந்தாலும், 1986ம் ஆண்டு ஆர்ஜன்டீனாவுக்கு உலகக் கிண்ணம் வென்றுக்கொடுத்த டியாகோ மரடோனா மற்றுமொரு உலகம்” என பெபியோ கென்னவரோ தெரிவித்துள்ளார்.

நெய்மார், ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோரை விட சிறந்த வீரர் நானே – எடில்சன்

லியொனல் மெஸ்ஸி மற்றும் மரடோனா ஆகியோர் மிகச்சிறந்த கால்பந்து வீரர்கள். இவர்களுக்கு இடையிலான திறமை பாராட்டக்கூடியது என்பதுடன், வியக்க வைக்கும் ஒன்றாகும். ஆனால், முன்னர் நடாத்தப்பட்ட கால்பந்து போட்டிகளுடன் பார்க்கும் போது, மரடோனா அதி திறமை வாய்ந்தவர் என்பது வெளிப்படுவதாக பெபியோ கென்னவரோ குறிப்பிட்டுள்ளார்.

“நான் லியொனல் மெஸ்ஸியை மதிக்கிறேன். தற்போதைய தலைமுறைக்கு அவர் ஒரு சிறந்த கால்பந்து வீரர். ஆனால், மரடோனா சற்று வித்தியாசமானவர். அவருடைய காலப்பகுதியில் கால்பந்தும் சற்று வித்தியாசமாக இருந்தது. பந்துகள் அவரை தாக்கியும், அவருடைய கட்டுப்பாடு பாராட்டத்தக்கது.

லியொனல் மெஸ்ஸி மிகச்சிறந்த கால்பந்து வீரர். ஆனால், மரடோனா மற்றுமொரு உலகம். நான் பெலே விளையாடியதை பார்த்ததில்லை. ஆனால், மரடோனா விளையாடியதை 7 வருடங்கள் பார்த்துள்ளேன். எனவே, மரடோனா தான் சிறந்த வீரர். ஆனால். இருவரையும் ஒப்பிடமுடியாது”  

பெபியோ கென்னவரோ மாத்திரம், லியொனல் மெஸ்ஸி மற்றும் மரோடோனாவை ஒப்பிடுவது கடினம் என கூறவில்லை. முன்னாள் ஆர்ஜன்டீன கால்பந்து வீரர் ரொபேர்டோ அயலாவும், மெஸ்ஸி மற்றும் மரடோனா ஆகியோர் தனித்துவமான திறமையுடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

“நான் மெஸ்ஸி மற்றும் மரடோனா என இருவருடனும் விளையாடியுள்ளேன். மரடோனாவுடன் எனது முதல் படியை ஆரம்பித்தேன். குறித்த இருவரும் கால்பந்தில் பேராற்றல் உடையவர்கள். மெஸ்ஸி ஓய்வுபெற்றால், அவரும் மறக்க முடியாத வீரர்களில் ஒருவராக மாறிவிடுவார்.

அப்படி ஓய்வுபெற்றாலும் டியாகோ மரடோனாவை போன்று மெஸ்ஸி இருப்பார் என்பது நிச்சயமில்லை. இது ஒரு விடயமும் அல்ல. காரணம், அவர்கள் இருவரும் வித்தியாசமானவர்கள்” என ரொபேர்டோ அயலா குறிப்பிட்டார்.

 மேலும் கால்பந்து செய்திகளை படிக்க